25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


கால்சியத்தின் பலன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கால்சியத்தின் பலன்

ரத்தத்தில் உள்ள சுண்ணாம்புச் சத்து 8.8 mg/dl அளவுக்குக் குறைவாக இருந்தால், குறைவான சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) என்று தெரிந்துகொள்ளலாம்.

பயன்கள்

இது பற்களையும் எலும்புகளையும் உறுதியாக வைக்க உதவுகிறது.

. நரம்பு மற்றும் சதைகள் உறுதியாக இருக்க உதவுகிறது.

 இதயம் சரியாக இயங்க உதவுகிறது.

ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை உறைய வைக்க உதவுகிறது.

கால்சியம் குறைய என்ன காரணம்?

பரம்பரையாக வரலாம்

வைட்டமின் டி குறைபாடு

தைராய்டு சுரப்பி அகற்றிய பின்னர்

பாரா தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரத்தல்  (Hypoparathyroidism)

போதிய சூரிய ஒளி இல்லாமை

சிறுநீரகச் செயலிழப்பு

மருந்துகள்: ஸ்டீராய்டு, குளோரோதின்

அறிகுறிகள்

வறட்சியான சருமம்

கால்களிலும், முதுகிலும் சதைப் பிடித்தல்

வறட்சியான நகங்கள்

தலைமுடி கடினமாக இருத்தல்

இதயம் செயலிழத்தல்

மனக்குழப்பம்,மனச்சோர்வு

வலிப்பு நோய்

சிகிச்சை

சுண்ணாம்புச் சத்து மாத்திரையை 1 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்படி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சூரிய ஒளியில் தினமும் காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும் இருத்தல் அவசியம்.

பால் அல்லது தயிரைத் தினமும் சற்று அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்வரும் உணவு வகைகளை முடிந்தளவுக்கு உணவில் சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுதானியங்கள்

கீரை வகைகள் (உதாரணம்: முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை)

கறிவேப்பிலை

கொட்டை வகைகள், உதாரணம்: பாதாம், முந்திரி

மீன், நண்டு, இறால்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News