25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


முதுமை

Mar 18, 2026

முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல.

முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல. ஆனால், முதுமையில் பல நோய்கள் வரவாய்ப்புகள்அதிகமாகின்றன.நாம் ஏன் முதுமை அடைகிறோம்? என்றுமே இளமையுடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்? ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் அதற்கு முடிவு என்று ஒன்று உண்டு. ஆகையால் இளமைக்கு முதுமை ஒரு முடிவு. உடல் முதுமை அடைவதற்கு என்ன கருணங்கள் என்ஆ பல ஆராய்ச்சிகள் நடைபெற்று ஆனால், இன்னும் விளக்கம் கிடைக்கவில்லை. முதுமை அடைய பல காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றில் ஒரு சில  முன்னோர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தால் அவர்கள் சந்ததியினரும் அவ்வாறே இருப்பார்கள்.வயது ஆக ஆக உடலில் உள்ள முக்கிய உயிரணுக்கள் குறைகின்றன.திறனற்ற உயிரணுக்கள் உற்பத்தி ஆகுதல்.உயிரணுக்கள் பெருகிவரும் தன்மை குறைவது.கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்கி விடுதல்.ஃப்ரீ ரேடிகல்ஸ் (Free radicals) என்ற திரவம் உடலில் அதிகம் சேர்ந்து மற்ற திசுக்களை அழித்தல்.உடல் வளர்ச்சிக்குத் தேவையான (Growth hormone ) குறைதல்.நமது மூளைப்பகுதியிலுள்ள பிட்யூட்ரி என்னும் நாளமில்லாச் சுரப்பி Killer hormone எனும் திரவத்தைச் சுரக்கிறது. இந்தத் திரவம், ஒரு பெண்பூப்பெய்தும் பருவத்தில் சுரக்க ஆரம்பிக்கிறது. இத்திரவம் உடலை அழித்துமரணத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப்போனால்அவள் வாழும் வயதும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு.தலையிலுள்ள மூளைப்பகுதியில் பீனியல் எனும் சுரப்பி Melatonin எனும் திரவத்தைச்சுரக்கிறது. இளமையைப் பாதுகாக்க இத்திரவம் மிகவும் அவசியம். ஆனால், ஒருவர் 25 வயதை அடையும்போது இத்திரவம் குறைகிறது. ஆகையால் முதுமை அப்போதே தொடங்கஆரம்பித்துவிடுகிறது.இத்தகை தகைய உடல் மாற்றங்கள் காலத்தால் ஏற்படுவது என்றாலும், முதுமை அடைந்தவர்களுக்கெல்லாம் இவை ஏற்படுவதில்லை. சிலருக்குச் சில மாற்றங்களே நிகழும்; மேற்கண்ட மாற்றங்கள் முதுமையில் ஏற்படினும், வாழ்க்கையைப் பக்குவமாக (Balanced life) அமைத்துக்கொண்டால் முதுமையிலும் இன்பம் காணலாம்.இளமை இனிமேல் போகாது.. முதுமை எனக்கு வாராது என்று உற்சாகமாகப் பாடுங்கள்!

Mar 11, 2026

முதுமையை வெல்லும் உறுதி மொழி.

தினமும் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டு. அவதிகளைச் சுலபமாக வெல்ல முடியும்.எனக்கு வயதாகிக் கொண்டு வருவதை உணர்கிறேன். சீக்கிரமே முதுமையை எட்டி விடுவேன். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் குணம் எனக்கு வந்துவிடக் கூடாது. குறிப்பாக, எல்லா விஷயங்களைப் பற்றியும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டும்,என்ற உணர்வு எனக்கு எழக்கூடாது.எல்லோரது தவறுகளையும் திருத்துவதுதான் என் வேலை' என்ற நினைப்பு எனக்கு வரக்கூடாது. எனது அனுபவமும் அறிவும் பொக்கிஷம். அறிவுரை என்ற பெயரில் எல்லோரிடமும் அதை வாரி இறைத்துவிட மாட்டேன்.நீள நீளமான வாக்கியங்கள் தவிர்த்து. ஒற்றை வார்த்தையில் எதையும் சொல்லும் பக்குவம் வர வேண்டும்.என் கஷ்டங்களையும் வலிகளையும் பற்றி எல்லோரிடமும் புலம்பாமல், அடுத்தவர் கஷ்டங்களையும் காதுகொடுத்துக் கேட்கும் பொறுமை பெற வேண்டும்.எல்லாமே ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்றில்லை. மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும் வேண்டும். துயரமான தருணங்களை என் ஞாபக மறதி நோய் எடுத்துக் கொள்ளட்டும்.நானும் தவறுகள் செய்யக்கூடிய எளிய மனிதப்பிறவிதான் என்றநினைப்பு எனக்கு எப்போதும் இருக்கட்டும். குடும்பத்தில் வாக்குவாதங்களை அது தவிர்த்துவிடும்.எல்லோருக்கும் கருணை காட்டும் மனம் வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் வேண்டும். அடுத்தவரின் சிறந்த குணங்களைக் கண்டறிந்து பாராட்டும் தாராள உள்ளம் வேண்டும். யாரையும் அதிகாரம் செய்யும் முரட்டு குணம் மட்டும் வேண்டாம்.

Mar 04, 2026

முதுகுத் தண்டுவட நோய்கள் .

முதுகுத் தண்டுவடம் இல்லாமல் நமது உடலினைக் கற்பனை செய்ய முடியுமா உங்களால். ஆக்டோபஸ் போல, ஜெல்லி மீன் போல, இல்லை ரப்பர் பந்து போலத் தரையில் ஊர்ந்திருப்போம்... நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை எல்லாம் வெறும் கற்பனையாக இருந்திருக்கும். 'நான் யாருக்குமே வளைந்து போகமாட்டேன்' என்கிற டயலாக் எல்லாம் பேச முடியாது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் முதுகுத் தண்டுவடத்தை மூளையின் நீட்சியாகச் சொல்லலாம். உடலுக்குத் தேவையான மிக முக்கியமான நரம்புகள் முதுகுத் தண்டுவடத்தின் எலும்புகள் (vertebrae) வழியாகவே அத்தனை உறுப்புகளுக்கும் செல்கின்றன. அப்படிச் செல்லும் நரம்புகள் தண்டுவட எலும்புகளில் அழுத்தப்படாமல் இருப்பதற்கு எலும்புகளுக்கு நடுவில் தக்கை அல்லது குஷன் போல டிஸ்க்எனச் சொல்லப்படும் அமைப்புகள் இருக்கின்றன. எலும்புகள் விலகினாலோ அல்லது டிஸ்கில் ன் தேய்மானம் ஏற்பட்டாலோ, இல்லை டிஸ்க் எனப்படுவது விலகி எலும்புகளுக்கு வெளியில் - வந்தாலோ முதுகில் வலி ஏற்படும். இவ்வாறாக க ஏற்படும் வலி முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படலாம் / இல்லை அந்த நரம்புகள் செல்லும் பாதைகளில் ஏற்படலாம் அல்லது அந்த நரம்புகள் சென்று அடையும் உறுப்புகளில் ஈ வலி ஏற்படலாம். உதாரணமாக இடுப்புப்பகுதி எலும்புகளில் நரம்புகள் - அழுத்தப்பட்டால் கால்களில் அல்லது பாதங்களில்வலிகள் ஏற்படும். இதில் கால் வலிக்கு வைத்தியம் பார்ப்பது எந்தப் பயனும் தராது. முதுகுத் தண்டுவடத்தைச் சரிசெய்வதே இதற்குச் சரியான தீர்வாகும். முதுகுத்தண்டு வலிக்குப் பொதுவான காரணங்கள்...1.விபத்து2.உடல் பருமன்3. முறையற்ற உணவுப் பழக்கவழக்கம்4. மன அழுத்தம்5. தூக்கமின்மை6.உடற்பயிற்சி இல்லாதது.வலி நிவாரணி  மாத்திரைகள் மட்டும் எடுத்து கொள்வதும், ஊசி போட்டுக் கொள்வதும்  முதுகுத் தண்டுவட பிரச்னைகளுக்கு  தீர்வாக அமையாது.

Feb 25, 2026

மாரடைப்பு.

மூன்று ரத்தக் குழாய்களின் வழியாக இதயத்துக்கு ரத்தம் செல்கிறது. வயது ஆக ஆக ரத்த குழாய்கள் சுருங்குகின்றன. அக்குழாய்களுள் கொழுப்புச் சத்தும் சேர்வதால் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. முதியோரைக் கவனிக்கும்போது முதலில் நாடித் துடிப்பு, சுவாச மிகுதி ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். ஏதாவது அசாதாரண மாற்றம் இருந்தால் மருத்துவரின் கவனத்துக்கு உடனே கொண்டு வரவேண்டும். .முதியோருக்கு மூச்சுவிடுவதற்கு வசதியாக முதுகிற்கு இரண்டு தலையணைகளைக் கொடுத்துச் சாய்ந்து உட்கார வைக்க வேண்டும். உடனடியாகப் பிராண வாயு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், முதலுதவியாக நாக்கிற்கடியில் ஐசார்டில் என்ற மாத்திரை வைத்தால் நெஞ்சுவலி உடனே குறைய வாய்ப்புண்டு. .மருத்துவரின்ஆலோசனைப்படி நோய்க்குத் தகுந்த மாத்திரைகளையும், ஊசி மருந்துகளையும்குறிப்பிட்ட நேரப்படி கிடைப்பதற்கு உதவுவது அவசியம். உறவினர்களுக்கும், நோயுற்ற முதியோருக்கும் செவிலியர் அருகில் இருந்து ஆறுதல் கூறவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி திரவ ஆகாரம் காரம் கொடுப்பதுதான் சிறந்தது. உப்பை உணவில் குறைக்கச் சொல்ல வேண்டும். முதியோரை மலச்சிக்கல் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலம் கழிக்கும் பொழுது மிகவும் சிரமப்பட்டு அழுத்தம் கொடுக்கக்கூடாது. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட முதியோரைப் படுக்கையிலேயே வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். பொது சுகாதாரம் கவனித்தலும், உணவு சாப்பிடுவதும் படுக்கையிலேயே செய்யப்படவேண்டும். புகைப் பிடிப்பதை நிறுத்த அறிவுரை கூறவேண்டும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் இருந்தால் அதற்குத் தகுந்த சிகிச்சைகளை முறைப்படி எடுத்துக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அறிவுரை கூறவேண்டும். கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

Feb 18, 2026

முதுமையில் பலர் நல்ல தூக்கமின்றிச் சிரமப்படுவது ஏன்?

பல முதியோர்கள் பகலில் நீண்டநேரம் தூங்கி விடுகிறார்கள். அதனால் இரவில் தூக்கம் வருவதில்லைமனம் சார்ந்த கவலைகளினாலும் தூக்கம் குறையும். (உ.ம்) உறவினர்களின் இழப்பு, கடன் தொல்லை, நிதி வசதிக் குறைவு, கட்டாய ஓய்வு, தனிமைமன நோய்கள் (உ.ம்) மன அழுத்தம் (Depression), அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia) மற்றும் மனப்பதற்றம் (Anxiety)முதியோர்கள் உண்ணும் பல மருந்துகளினாலும் தூக்கம் தடைபடலாம். (உ.ம்) மனநோய்க்குத் தரும் மருந்து, நீர் மாத்திரைஅடிக்கடி காபி குடிப்பது அல்லது இரவில் மது அருந்துவது தூக்கத்தைக் கெடுக்கும்.பலநோய்களினாலும் தூக்கக் கோளாறுகள் ஏற்படலாம். (உ.ம்) உடல் வலி, மூட்டு வலி, மூச்சுத்திணறல், வயிற்றில் புண், இதய பலவீனம், புராஸ்டேட் சுரப்பி வீக்கம்நல்ல தூக்கம் வர ஆலோசனைகள்தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இரவில் படுக்கைக்குச் செல்ல வேண்டும்அதேபோல், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கமும் மிகவும் அவசியம்படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்று மங்கிய வெளிச்சத்தில் இருக்க வேண்டும்.தூக்கத்தைக் கெடுக்கும் மாத்திரை மற்றும் பானங்களை இரவில் தவிர்க்க வேண்டும். (உம்) நீர் மாத்திரை, காபி, டீ, மது, புகைப்பிடித்தல்மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் நல்ல உறக்கத்தை ஏற்படுத்தும்பகலில் தூக்கம் 30 - 40 நிமிடங்கள் போதுமானதேபடுக்கும் இடத்தைத் தூக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரவில் படுத்துக்கொண்டே படிப்பது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லதுபடுத்தவுடன் 30 -45 நிமிடங்களில் தூக்கம் வரவில்லையென்றால், படுக்கையைவிட்டு எழுந்து சற்று நடந்துவிட்டு வரலாம் அல்லது அடுத்த அறைக்குச் சென்று படிப்பது, வானொலி கேட்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவது நல்லது. தூக்கம் வர ஆரம்பித்த உடனேயே படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும்படுப்பதற்கு முன்பு சிறிதளவு வெதுவெதுப்பான பால் அருந்துவது தூக்கத்துக்கு நல்லதுமன உளைச்சல்களும், கவலைகளும் தூக்கத்தின் முக்கிய எதிரிகள். அதைத் தவிர்ப்பது மிக அவசியம். இதற்குத் தியானம் மிகச் சிறந்த மருந்தாகும்.தூக்க மாத்திரை எச்சரிக்கைநல்ல தூக்கத்துக்குத் தூக்க மாத்திரை ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. தூக்க மாத்திரையைத் தினமும் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும்.மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். மாத்திரையைத் திடீரென்று நிறுத்தினால் தூக்கம் பாதிக்கப்படும். தூக்க மாத்திரையினால் ஞாபகசக்தி குறையும், உடல் தடுமாறும்,கீழே விழ வாய்ப்புகள் அதிகமாகும். பகலில் மயக்க நிலையை ஏற்படுத்தும். ஆகையால், முடிந்த அளவுக்குத் தூக்க மாத்திரையைத் தவிர்ப்பது நல்லது. ஆகையால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தூக்க மாத்திரையை உட்கொள்வதே பாதுகாப்பானது.

Feb 11, 2026

நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்!

உணவு வகைகள் கீழ்க்காணும் உணவு பல ஆராய்ச்சிகளுக்குப் பின்பு நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.இவைஎல்லாம் நமக்குத்தெரிந்தஉணவுவகைகள்தானேஎன்றுஅலட்சியப்படுத்தவேண்டாம். நினைவாற்றலை அதிகரிக்கும் சத்துகள் இவற்றில் அடங்கியுள்ளன.இந்த உணவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைத் தினசரிநாம்உண்ணும்உணவில் இருக்குமாறுபார்த்துக்கொண்டால், எதிர்பார்த்த பலன் நிச்சயம் கிடைக்கும்.பசலைக்கீரையில் ஃபோலிக் அமிலம் நிறைய உள்ளது.ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூ பெர்ரி பழ வகைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் ஆப்பிளில் குவார்செட்டின் (Quercetin) என்னும் சத்து நினைவாற்றலை மேம்படுத்தும் முக்கியமான ஊட்டச்சத்து.ஆப்பிளைப் போலவே வெங்காயத்திலும் க்வார்சிடின் உள்ளது. கூடுதலாக அந்தோசயானின்  (Anthocyanin) என்கிற பொக்கிஷத்தையும் வெங்காயம் வைத்திருக்கிறது.மீன் வகைகள் ஞாபக சக்தியை மேம்படுத்தக் கூடியவை. குறிப்பாக, டுனா என்கிற மீன் வகைகளில் ஒமேகா என்னும் சத்து அபரிமிதமாக இருக்கிறது.எண்ணெயும் இதில் முக்கிய இடம்பிடிக்கிற மீன் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்று லவங்கப்பட்டை எண்ணெய் போன்றவற்றை  அளவறிந்து பயன்படுத்துங்கள்.முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம்  என்று பலர் சொன்னாலும், நம் மூளைக்கு அந்த  மஞ்சள் கரு மிகவும் உகந்தது.சர்க்கரை வள்ளிக் கிழங்கில் இருக்கும்  வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் பீட்டா  கரோட்டின் ஆகியவற்றுக்கு மறதியை விரட்டும்  வல்லமை உண்டு.ராஜ்மாவில் உள்ள தையமின் என்கிற  வைட்டமினும் நமக்குத் தேவை.உலர்ந்த திராட்சையானது இரும்புச்சத்து  பி. காம்ப்ளக்ஸ், ஃபோலிக் ஆசிட், கால்சியம்  மற்றும் மக்னீஷியம் போன்றவற்றைக் கொண்டது.வாழைப்பழத்தில் பொட்டாசியம்  நிறைந்திருப்பதைப் பலரும் அறிவீர்கள்.கீரின் டீயானது வயதான பின் வரும் ஞாபக மறதி மற்றும் நரம்பு சார்ந்த நோய்களைத்  தடுக்கிறது..முளைக்கட்டிய கோதுமையில் ஞாபகசக்தி அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் செலினியம்  சத்துகள் உண்டு.காபி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பூண்டு, வல்லாரைக் கீரை, வால்நட் போன்றவையும்  நினைவாற்றலை மேம்படுத்த உதவுகின்றன.

Feb 04, 2026

சொரியாஸிஸ் ( Psoriasis )

சொரியாஸிஸ் என்பது ஒரு தோல் நோய்.இது பரம்பரையாக அடுத்த அடுத்த தலைமுறையினருக்கு வரும் நோய். ஒருவரிடமிருந்து அடுத்தவருக்குப் பரவும் தொற்று நோய் அல்ல. இளம் குழந்தைகள் முதல் வயதான பெரியோரையும் இந்நோய் தாக்குகிறது.ஆரம்பம் ஒரு சிவப்புப் புள்ளிதான். புள்ளி பெரிதாக வட்ட வட்டமாக மலர்ந்து, அரிப்புடன் கூடிய உலர்ந்த வெள்ளை நிறச் செதில்களுடன்(Silverwhitescales) பரவிச் செதில்கள் உதிர ஆரம்பிக்கின்றன. உடலில் இந்நோய்காணப்படும் இடங்கள் முழுங்கை, முழங்கால், உள்ளங்கை, உள்ளங்கால், முதுகின் கீழ்ப் பகுதி, இடுப்பின் மேல் பகுதி, தலைப்பகுதி. இது தோல் நோய் என்றாலும், சில நேரங்களில், கை விரல்கள், கால் விரல்கள், மூட்டுகளையும் விரல் நகங்களையும் பாதிக்கிறது.இந்நோய் அதிகப்படுத்தும் காரணிகள் -மன உளைச்சல்,மது அருந்துதல், புகைப்பிடித்தல்,சூழ்நிலை மாற்றம், கோடைக்காலம், குளிர்காலம்,தவறான உணவுப் பழக்கங்கள்.ஸ்டீராய்டு போன்ற களிம்புகள் மற்றும் மிதோடிரைக்ஸ்டைட் போன்ற மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியது வரும். புதுவரவாக, உள்ளBiologics(Monoclonalantibodies). நோய்த் தாக்கத்தின் கடுமையைக் குறைத்து, நோயாளர்கள் மற்ற சக மனிதர் போன்று இயல்பான வாழ்க்கை வாழ வழி வகுக்கிறது.

Jan 28, 2026

முதுமையில் வரும் பல் நோய்கள்.

புதியகுறிக்கோளைஅமைத்துக்கொள்ளவும்புதியகனவுகளைக்காணவும்எப்போதும்வயதுஒருதடைஇல்லை.ரசிக்கப்படாத இன்னொரு குழந்தைப் பருவம் முதுமை. அத்தகைய முதுமைப் பருவத்தை ரசனையோடு வாழப் பழகிக்கொள்வதே. முதுமைப் பருவத்தின் வெற்றி ஆகும். எப்போது ஒரு மனிதன் நோயின்றி இருக்கிறானோ, அப்போதுதான் தன்னம்பிக்கை வளரும்.முதுமையில் வரும் பலவிதமான நோய்களை இளமையில் நம் உடலைப் பேணுவதன் மூலம் வெல்லலாம். வயதின் மாற்றங்கள் பற்களையும், ஈறுகளையும் பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.முதுமையில் வரும் பல் நோய்கள் பல் தேய்மானம்,பற்குழி,ஈறுநோய்,பற்கள் காணாமல் போதல்,வறண்ட வாய், முதலியன நாம் பொதுவாகப் பார்க்கக்கூடிய பற்கள்  சம்பந்தப்பட்ட நோய்களாகும். அதிலும் குழியினாலோ, ஈறு பிடிமானம் இல்லாமல் போனதினாலோ நாம் நமது பற்களை இழக்க நேரிட்டால் அதனால் வரும் பாதிப்புகள் மனதளவிலும், உடலளவிலும் ஏராளம்.நவீனச் சிகிச்சை முறையில், இழந்த பற்களை மீண்டும் செயற்கையாகம் பொருத்திச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் முறையே “பல் உள்வைப்புகள்' ஆகும்.(Dental Implants). இது இழந்த பற்களின் வேர்ப் பகுதிக்குள் அமைத்துச்செயல்படும்.இச்சிகிச்சை தன்னம்பிக்கையை மேம்படுத்தும். வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும்.

Jan 21, 2026

கால்களில் வீக்கம் வருவது ஏன்?

கால்கள் வீங்கும் தொல்லை மூத்த குடிமக்களில் பலருக்கு ஏற்படும். இதற்கு மூன்று வகையான காரணிகள் உள்ளன.இரவில் நெடுநேரம் படுத்த நிலையில் இருப்பதால், காலையில் சிலருக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் வரலாம். இது சாதாரணமான வீக்கம்தான். கவலைப்படத் தேவையில்லை. சிறிது தூரம் நடந்தால் வீக்கம் குறைந்துவிடும்.சமயங்களில் வேறு ஏதேனும் நோயின் அறிகுறியாகவும் கால்களில் வீக்கம் வரலாம். ரத்தச்சோகை, சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, இதயம் செயலிழப்பு, நுரையீரல் செயலிழப்பு போன்ற தீவிரமான பிரச்னைகளின்வெளிப்பாடாகவும் கால்கள் வீங்கும். இதுமருத்துவ அவசரநிலை. உடனே மருத்துவர்உதவியை நாட வேண்டும்.இதில் உட்கொள்ளும் மருந்துகளின் காரணமாகவும் கால்கள் வீங்கும். உதாரணம்: ஆம்லோடிப்பின் மாத்திரை.ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட பின்னர், முதியோர்கள் படுக்கையிலேயே தொடர்ந்து படுத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் கால்களில் உள்ள அசுத்தரத்தம், ரத்தக்குழாயில் உறைந்துவிடும். இதுபோல் ரத்தப்போக்கைத் தடை செய்வதால் கால்களில் வீக்கம் வரும். இதற்கு Deep Venous Thrombosis என்று பெயர். இதுவும் தாமதமின்றி உடனே கவனிக்க வேண்டிய பிரச்னை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Jan 14, 2026

முற்றிலும் நினைவிழந்த நிலை.

முற்றிலும் நினைவிழந்த நிலையில் (Coma) இருப்பவருக்கு தனது நிலையைப் பற்றி எதுவும் தெரியாதது மட்டுமல்ல, வெளியிலிருந்து வரும் எவ்விதத் தூண்டுதல்களையும் அறியாத ஒரு நிலையில் இருப்பார். ஆனால் இதயத்துடிப்பு, சுவாச நிலை, சிறுநீரகத்தின் செயல் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாடு ஓரளவிற்கு ஒரு காலகட்டம் வரை சரியாகவே இயங்கிக் கொண்டிருக்கும். மூச்சு அடிக்கடி விடுதல் அல்லது மெதுவாக விடுதல் போன்ற நிலை ஏற்படும். பொதுவாக காய்ச்சலும் கூடவே இருக்கும்.காரணங்கள்நுரையீரல் செயலிழப்பு, இதயம் வலிமை இழத்தல்,சிறுநீரகம் செயலிழப்பு,கல்லீரல் செயலிழப்பு,அளவிற்கு அதிகமான ரத்தப்போக்கு, உ.ம்.: விபத்து, அறுவை சிகிச்சை,அளவிற்கு அதிகமான தூக்க மாத்திரை,மதுவின் விளைவு,ரத்தத்தில் மிகக்குறைந்த அல்லது அதிகமாக உள்ள சர்க்கரையின் அளவுதைராய்டு குறைவாகச் சுரத்தல்,தயாமின் வைட்டமின் குறைவு,வலிப்பு நோய்,அதீத நீர் வறட்சி,உப்பின் அளவு மிகக்குறைந்த நிலை,நோய்த்தொற்று, உ.ம்.ஃபேக்ட்டீரியா, வைரஸ் கிருமிகளின் தாக்கம்,மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு (Brain haemorrhage),கபாலத்திற்கு உள்ளே மற்றும் மூளைக்கு வெளியே உள்ள இடைவெளியில் ஏற்படும் ரத்தக்கட்டி  (Sub dural haematoma),மூளையில் ஏற்படும் சாதாரண கட்டி அல்லது புற்றுநோய்,தலைக்காயம்.மருத்துவர், இந்நிலையில் உள்ளவரின் நெருங்கிய உறவினரிடம் இந்நிலை எவ்வாறு ஏற்பட்டது என்று முழுமையாகக் கேட்டறிவது மிகவும் அவசியம். உதாரணம்: திடீரென்று கீழே விழுதல், விபத்திற்கு உள்ளாவது, மருந்தை அளவிற்கு அதிகமாக உண்ணுதல்.நோயாளியை மருத்துவர் முழுமையாகப் பரிசோதனை செய்து முற்றிலும் நினைவிழந்தநிலைக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பார்.முற்றிலும் நினைவிழந்த நிலைக்கான காரணத்தைக் கண்டறிந்து விரைவில் சிகிச்சை அளிக்க முயற்சிக்க வேண்டும். இதற்கான காரணத்தைக் கண்டறிய உறவினர்களின் பங்கு மிகவும் அவசியம்.

1 2 3 4 5 6 7

AD's



More News