25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.

 இரு கால் மூட்டுகளில் ஏற்படும் வலி பெரும்பாலும் கீல்வாதத்தால் வருகிறது. இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களை அதிகமாக பாதிக்கிறது.கால் மூட்டுகளில் ஏற்படும் காயங்கள் காரணமாக வீக்கம், வலி உருவாகிறது. இந்த காயங்கள் மூட்டுகளில் உள்ள தசைகள், எலும்புகள், இணைபுள்ளிகள் மற்றும் இணைப்புக்கயிறுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன..

கீல்வாதம் காரணமாக, கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை பாதுகாக்கும் இணை எலும்பு மெதுவாக பலவீனமடைந்து, காலப்போக்கில் முற்றிலும் தேய்ந்து வருகிறது. மூட்டுகளுக்குள் இருக்கும் திரவம் குறைந்து, எலும்புகள் நேரடியாக உராய்வதால் கடுமையான வலி, வீக்கம் மற்றும் நடக்கும் போது சத்தம் போன்றவை ஏற்படலாம்.

வயதாகும் போது, கீல்வாதம் அதிகரிக்கிறது. பெண்களுக்கு இந்த பிரச்சனை ஆண்களை விட அதிகம் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள்.நடக்கும் போது, உட்காரும் அல்லது நிற்கும் போது மூட்டுகளில் கடுமையான வலிகாலையில் எழுந்தவுடன் மூட்டுகளில் விறைப்பு, சீராக இயக்க முடியாத நிலைகால்மூட்டுகளினசுற்றுவட்டாரத்தில்வீக்கம்சில வளர்சிதை மாற்ற நோய்கள் (மெடபாலிக் டிஸ்அோர்டர்கள்), நீரிழிவு, இரும்புச்சத்து அதிகம் காணப்படும் நிலை  போன்றவை கீல்வாதத்தை மேலும் மோசமாக்கும்
மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News