மூத்தகுடிமக்களின் பாதுகாப்பான கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து மூத்த குடிமக்களின் நலனுக்கான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்து செயல்ப டுத்தி வருகிறது.மூத்த குடிமக்களுக்கு வரிச்சலுகை, சேமிப்புகளுக்கு கூடுதல் வட்டி போன்ற சலுகைகள் வழங்கப்படுவதோடு அவசரகால மீட்பு, மனநல ஆலோசனை, நலத்திட்டங்கள், முதியோர் இல்லம் பற் றிய விவரங்களை வழங்குவதற்காக 14567 என்ற சிறப்பு உதவி எண் அறிவிக் கப்பட்டு உள்ளது.அதில் தொடர்பு கொண்டால் நமது பெயர், முகவரியை கேட்டு அறிந்து கொண்டு, நமக்கு என்ன குறை? என்று கேட்பார்கள். பிள்ளைகள் சரியாக பராமரிப்பது இல்லையா? மருத்துவரீதியிலான பிரச்சினைகளா? ஓய்வூதியம் பெறுவதில் ஏதாவது தடை உள்ளதா? வங்கி தொடர்பான பிரச்சினைகளா? என்றெல் லாம் விசாரிப்பார்கள்.எனவே முதியோர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தால், அவற்றை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.முதியோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த சேவையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் மூத்த குடிமக்களுக்கென்று மத்திய அரசு தனி யாக அடையாள அட்டை வழங்குகிறது. உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பித்து அந்த அட்டையைபெற்றுக்கொண் டால், மருத்துவ வசதி மற்றும் அரசின் திட்டங்களில் பல் வேறு சலுகைகளை பெறலாம்.மூத்த குடிமக்களுக்கு, ரெயிலில் பயணம் செய்ய வழங்கப்பட்டு இருந்த கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. எனவே அவர்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
அதிக எடையிருப்பின் அதைக் குறைக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவதுஉடற்பயிற்சி செய்ய வேண்டும். முடிந்த அளவுக்கு 30- 60 நிமிடங்கள் உடல் வெயிலில் படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகமான டீ, காபி,அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மதுவை அறவே ஒழிக்க வேண்டும். ஸ்டீராய்டு மாத்திரையை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும். சரியான காலணியை உபயோகப்படுத்த வேண்டும். வலிநிவாரணியை மருத்துவர் ஆலோசனையின்றி அதிக நாட்கள் உபயோகப்படுத்தக் கூடாது. தேவைப்படும் போது கைத்தடி, வாக்கர் போன்ற உபகரணங்களைத் தயங்காமல் உபயோகிக்க வேண்டும். கால்சியம் அதிகமுள்ளவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை உட் கொள்ள வேண்டும். வலிநிவாரணி எடுத்த பிறகும் வலி குறையாமல் இருந்தால் மருத்துவரை உடனே நாட வேண்டும். ஒரு சில யோகப் பயிற்சிகள் மூலமும் எலும்பை வலிமையடையச் செய்யலாம். வைட்டமின் டி உணவில் உள்ள சுண்ணாம்பு சத்தை எலும்பில் சேர உதவுகிறது. தினமும் சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பதன் மூலமும், மீன், முட்டைக் கரு, கல்லீரல்,பால் போன்றவை உட்கொள்வதன் மூலமும் வைட்டமின் டி கிடைக்கிறது.
முதுமையில் மிகவும் அவசியமானது வைட்டமின் டி ஆகும். இது எலும்பை உறுதிசெய்ய மிகவும் உதவும். நமது உடல் சூரிய ஒளியில் படும்பொழுது தோலுக்கு அடியில் உள்ள ஒரு வகைக் கொழுப்பிலிருந்துவைட்டமின் டி உற்பத்தியாகிறது.சிறுகுடலிலிருந்து கால்சியம் தாதுப்பொருளை உறிஞ்சி ரத்தத்திற்கு அனுப்பி வைப்பதற்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது. இதனால் எலும்பு வலிமை பெறுகிறது.வைட்டமின் டி குறையக் காரணங்கள்சூரிய ஒளி அதிகம் படாமல் இருப்பது.வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது.முதியோர் இல்லங்களில் தொடர்ந்து வசிப்பது.நோய் காரணமாக நீண்ட நாட்களாகப் படுக்கையிலேயே படுத்திருப்பது.சத்துள்ள உணவுகளைக் குறைவாக உண்பது.செரிமானக் குறைபாடு கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்ப் பாதிப்பு தொடர்ந்து வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்துக்கொள்வது.தொல்லைகள்சதைப் பிடிப்பு, உடல் வலி,உடல் பலவீனம்,அடிக்கடி கீழே விழுதல்,மூட்டு வலி,எலும்பு முறிவு,இதய நோய், மறதி நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வர வாய்ப்பு அதிகம் உண்டு.கண்டறிதல்ரத்தப் பரிசோதனை மூலம் வைட்டமின் டி எந்த அளவு உள்ளது என்று தெரிந்துகொண்டு அதற்கு தக்கபடி சிகிச்சை பெறலாம். வைட்டமின் டி சரியான அளவு 30 ng/mL -க்கு மேல் இருக்க வேண்டும்.மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி 2000 யூனிட் மாத்திரையைத் தினமும் அல்லது 60,000 யூனிட் மாத்திரையை வாரம் ஒருமுறை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.வைட்டமின் டி குறைபாட்டைத் தவிர்க்க..தினமும் குறைந்தது 30 - 60 நிமிடமாவது வெயில் படுமாறு நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.. தினமும் ஒரு கப் பால் அவசியம்சைவ உணவுகளில் பால், தயிர், வெண்ணெய் மற்றும் பால் பொருட்களைச் சற்று அதிகம் எடுத்துக்கொள்ளவும். தானிய வகைகளை (ராகி,கம்பு,சோளம், வரகு,தினை ) உணவில் சற்று அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், மீன் எண்ணெய் (காட்லிவர் எண்ணெய்), முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், காளான் முதலியவற்றை முடிந்தளவிற்குச் சேர்த்துக்கொள்ளவும்.கால்சியம் அதிகமுள்ள உணவு தினமும் அவசியம் தேவை. மருத்துவரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.தினமும் சூரிய ஒளியில் நடப்போம். உடல் எலும்பை உறுதி பெறச் செய்வோம்.
வயது ஆக ஆக உடலைச் சரிசமமான முறையில் வைத்துக்கொள்ள இயங்கும் உறுப்புகளின் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும், உடலைச் சரியான நிலையில் வைத்துக்கொள்வதற்கு உள்காது. சிறுமூளை, கண், தசைகள் மற்றும் மூட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த இணைப்பில் ஏதேனும் குறைபாடு நிகழ்ந்தால் நிலை தடுமாறிக் கீழே விழும் வாய்ப்புண்டு. இந்த மாற்றம் முதுமையில் அதிகம் ஏற்படுவதால் முதியோர்கள் அடிக்கடி கீழே விழுகிறார்கள்.முதியோர் பராமரிப்பாளரின் பணிதங்கும் அறையின் தரை, குளியல் அறை மற்றும் கழிவறை வழுக்கும் இடமாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.முதியோர்நடமாடும் இடத்தில் தண்ணீர் கீழே சிந்தாமல், ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.உதவியாளர் ஒருவரை எப்பொழுதும் உடன் இருக்கச் சொல்ல வேண்டும்.மிதியடிகள் காலுக்குப் பொருந்துவது போல அணிய வேண்டும். குதிகால் உயரம் அதிகமுள்ள மிதியடிகளை அணிய வேண்டாமென்றும் அறிவுரை கூற வேண்டும். கட்டிலின் உயரம், முதியோர் உட்கார்ந்து எழுந்திருக்க வசதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.இருபுறமும் தடுப்புக் கம்பிகள் போட்ட கட்டிலை உபயோகிக்கச் சொல்ல வேண்டும்.பார்வை நன்றாகத் தெரிய தகுந்த கண்ணாடிகளை அணியச்சொல்ல வேண்டும்.அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களைக் கைக்கு எட்டும் தூரத்திலேயே வைக்கவேண்டும்.விழும் காரணத்தை அறிந்து அதற்குரிய மருத்துவச் சிகிச்சை பெறச் சொல்ல வேண்டும்.நடக்கும்போது கைத்தடி, வாக்கர் உதவியுடன் நடக்க பயிற்சி அளிக்க வேண்டும்.முதியோர் நடமாடும் இடங்களில் போதுமான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.படிக்கட்டுகளின் கைப்பிடிகள் உறுதியானதாகவும், படிகள் ஒரே அளவு உயரமாகவும், அகலமானதாகவும், வழுக்காமலும் இருக்க வேண்டியது அவசியம்.முதியோர்கள் சாப்பிடும் மருந்துகளைப் பற்றியும் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். மருந்துகளின் பக்க விளைவுகளால்கூடக் கீழே விழ வாய்ப்புண்டு.படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து, உடனே நடக்கக்கூடாது. தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பவர். எழும்போது முதலில் மெதுவாக எழுந்து உட்கார வேண்டும். பிறகு, சற்றுநேரம் கழித்து மெதுவாக எழுந்து நிற்க வேண்டும். அதன் பின்னரே நடக்க வேண்டும்.
வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால், முதுகு எலும்பு இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்புகள் அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. பாத்ரூம் வெளிவரும் பகுதியில்mat போட்டு வைப்பது நல்லது. நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும், கார்பெட்டில் கூட தடுக்கி விழலாம். அவர்கள் எதையாவது பிடித்து நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.ஆறு மாதங்களுக்கு ஒருமுறை காது கேட்கும் கருவி, கண்ணாடி ஆகியவற்றை டாக்டரிடம் பரிசோதித்து சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். கேட்கும் திறனும் பார்வையும் நன்றாக இருப்பது அவசியம்.நீங்கள் சாப்பிடும் மருந்து, மாத்திரைகள் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுத்தும், இவற்றினால் கீழே விழ நேரிடுமா என்று டாக்டரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.சாப்பிட்டு விட்டோ, படுக்கையை விட்டோ சட்டென்று எழுந்திருக்காதீர்கள். இரத்த அழுத்த மாற்றங்களால் கண்கள் இருட்டிக் கொண்டு வாலாம். இதனால் தடுமாறி கீழே விழ நேரிடும். தட்ப வெப்ப நிலை மாற்றங்கள்கூட உடலின் சமநிலையைப் பாதிக்கக்கூடும். உங்களை வெயிலிலிருந்தும், குளிரிலிருந்தும் நன்றாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.பழக்கமில்லாத இடங்களில் அல்லது மேடு பள்ளமான இடங்களில் நடக்கும்போது கைத்தடி அல்லது வாக்கர் பயன்படுத்தலாம். மழை அல்லது பனி பெய்யும் காலங்களில் நடக்கும்போது அதிக கவனம் தேவை.இறுக்கமான அடிப்பகுதி கொண்ட, குறைந்த உயரமுள்ள காலணிகளை அணியுங்கள். வழவழப்பான காலணிகள் வேண்டாம். தற்போது பெரும்பாலான கட்டடங்களில் பளபளப்பான டைல்ஸ் போடுகிறார்கள். இந்தத் தரை கலபமாக வழுக்கிவிடக் கூடியது.கைகளில் பொருட்களை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் ஏறாதீர்கள். ஒரு கையில் பொருட்களை வைத்துக்கொண்டு, மறுகையால் கைப்பிடிகளைப் பிடித்துக்கொள்ளுங்கள்.உயரமான இடங்களில் இருக்கும் பொருட்களை எடுப்பதற்கு மேஜை, ஸ்டுல் மீது ஏறாதீர்கள். அதேபோல, கீழே குனிந்து பொருட்களை எடுக்கும்போதும் கவனம் தேவை.
மூட்டுத் தேய்மானத்தால் முழங்கால், இடுப்பு முதுகுத் - தண்டு மற்றும் கழுத்துகளின் மூட்டுகள் மிகுதியாகப் பாதிப்புக்கு உள்ளாகும். முதலில் மூட்டு வலி விட்டுவிட்டுத் தோன்றும். படிக்கட்டு ஏறும்போதும் தொடர்ந்து தரையில் அமர்ந்திருந்து எழும்போதும் முழங்கால் வலிமிகுதியாய் ஏற்படும். காலையில் படுக்கையிலிருந்து எழும்போது மூட்டுகள் சற்று இறுக்கமாக இருக்கும். முழுங்காலை மடக்கி நீட்டும்போது ஒருவித சத்தமும் உண்டாகும். இடுப்பு, முழங்கால்களில் வலி மிகுதியாய் இருந்தால் நடை குறையும். தள்ளாடிக் கீழே விழவும் நேரிடலாம். நாள்பட்ட வலியினால் மனம் சோர்வு அடையும். இரவில் தூக்கம் பாதிக்கும்.இந்நோய் கழுத்திலுள்ள மூட்டுகளைத் தாக்கும் பொழுது (cervical spondylosis) கழுத்தின் அசைவு குறைந்து, பின்புறம் வலி தோன்றும்.இவ்வலி கழுத்தை அசைக்கும் போது தோள்பட்டைக்கும், கைகளுக்கும் பரவிச் செல்லும். மேலும் கழுத்தினைப் பக்கவாட்டிலும் மேலும் கீழும் திருப்பும் பொழுதும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் மயக்கம் ஏற்படும்.இந்த நோய் தண்டுவடத்தைத் தாக்கும்போது கை கால்களில் மரத்த உணர்ச்சி ஏற்பட்டு, அவை வலிமை இழக்கும். நடை தள்ளாடும். இந்நோய் கீழ் முதுகிலுள்ள எலும்புகளைப் பாதிக்கும்போது (lumbar spondylosis) குனிந்து நிமிரும்போது முதுகுவலி அதிகமாகும். சில நேரங்களில் முதுகிலிருந்து இரண்டு கால்களுக்கும் வலி பரவிச் செல்லும்.தேய்மானத்தினால் மூட்டு வலி ஏற்படுவதால் மருந்துகள் மற்றும் மாற்றுச் சிகிச்சைகள் வலியைக் குறைக்க முடியுமே தவிர பூரணமாகக் குணப்படுத்த முடியாது. தேய்மானம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
விக்கல் என்பது ஒருவருடைய உதர விதானம் அவரை அறியாமலேயே துடிப்பதால் ஏற்படும் ஒரு சத்தமே ஆகும்.வயதான காலத்தில் விக்கல் ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தான அறிகுறி என்கிறார்கள். விக்கல் ஏற்பட்டவர் களிடம் தீடீரென்று மிக்க அதிர்ச்சியைக் கொடுக்கும் செய்தியை சொன்னால் விக்கல் நின்றுவிடும் என்று சொல்கிறார்கள். இவையெல்லாமஎந்த அளவிற்கு உண்மை.உதரவிதானம் என்பது வயிற்றுக்கும் நெஞ்சுப்பகுதிக்கும் இடையிலே இருக்கும் ஒரு மெல்லிய சதையாகும். இதை நம்விருப்பம் போல் இயக்க முடியாது.விக்கலுக்கு பல காரணங்கள் உண்டு .குளிர்பானங்கள் அருந்துவது,அதிவிரைவாக உண்ணுவது,மன உளச்சல்,வயிற்றுப் புண்,நீரிழிவு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழத்தல்,தூக்க மாத்திரை, ஸ்டீராய்டு மாத்திரைப் பயன்பாடு,நரம்பு சார்ந்த தொல்லைகள்: உதாரணம் - பக்கவாதம், மூளையில் ஏற்படும் கட்டி உதரவிதானத்துக்குக் கீழே சீழ்க் கட்டி சோடியம், பொட்டாசியம் குறைந்தாலோ, அதிகரித்தாலோ விக்கல் வரலாம்சில மணித்துளிகள் மட்டுமே விக்கல் வந்து போவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, விக்கல் தொடர்ந்து இருப்பின் உடனே மருத்துவரை நாட வேண்டும். முதலில் விக்கலுக்கான காரணத்தைக் கண்டறிந்து தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். விக்கல் என்றாலே உயிருக்கு ஆபத்து என்று எண்ண வேண்டாம்.விக்கல் தொடர்ந்து 24 - 48 நேரத்துக்கு மேல் இருந்தால், காலம் தாழ்த்தாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். சாதாரணமாக வரும் விக்கலுக்கு Baclofen மற்றும் Chlorpromazine மாத்திரையை மருத்துவர் பரிந்துரைப்பார். மருத்துவரின் ஆலேசானையின்றி ஒருவர் மேற்கண்ட மருந்துகளை உண்ண வேண்டாம்.ஒரு சில மணித்துளிகள் ஏற்பட்டால் அது தானாகவே சிகிச்சையின்றிச் சரியாகி விடும். ஆனால், விக்கல் தொடர்ந்து இருப்பின் அது நல்லதல்ல, கெட்டதுதான்.
இந்த நோய்க்கு தைரோடாக்சிகோஸிஸ் "என்று பெயர். தைராக்சின் எதனால் மிகுதியாகச் சுரக்கிறது என்பதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. இந்நோய் உள்ளவர்களுக்குதைராய்டு சுரப்பி (கழுத்தின் முன்பகுதி) சற்று வீங்கி இருக்கும் அல்லது அச்சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம்.இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மிகவும் மெலிந்து இருக்கும். பசி அதிகமாக இருக்கும். ஆனால் உடல் மட்டும் இளைத்துக்கொண்டே போகும். அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். எப்பொழுதும் ஒருவிதப் பதற்றத்துடனே இருப்பார்கள். அதிகமாகப் பேசுவார்கள். கண்கள் இரண்டும் வெளியே தள்ளியதுபோல் பெரிதாகக் காணப்படும். ஒரு சிலருக்கு மட்டும் தைராய்டு சுரப்பி வீங்கி இருக்கும்.கைகளில் நடுக்கம் அதிகம் இருக்கும். உடலில் வெப்பம் சற்று மிகுதியாக இருக்கும். இவர்களால் கோடைகால வெப்பத்தைத் தாங்க முடியாது.உடல் அடிக்கடி வியர்த்துக் கொட்டும்.முதியோர்களுக்கு நாடித்துடிப்பு அதிகரித்தல் அல்லது ஒரே சீராக இல்லாத நிலை (irregular heart beat), இதயம் வலிமை இழத்தல் மற்றும் காரணமில்லாமல் எடை குறைதல் போன்ற தொல்லைகள் இருந்தால் அவருக்கு தைராய்டு அதிகமாகச் சுரக்கும் நோயிருப்பதாகக் கருதி, அதை உறுதிசெய்யப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.இந்நோயை ரத்தப் பரிசோதனை மூலமும், ஸ்கேன் டெஸ்ட் மூலமும் எளிதில் கண்டறிய முடியும்
முதியோர்கள் அடிக்கடி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்கும் இறப்பதற்கும் தொற்று நோய்களேகாரணமாகும். இதைத் தடுப்பதற்குத் தடுப்பூசிஒன்றினால் மட்டுமே முடியும்.தொற்று நோய்கள் வரக் காரணங்கள் நோய்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி குறைகிறது. சத்துணவுக் குறைவினாலும் எதிர்ப்பு சக்தி குறையலாம்.உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் தொற்று நோய்கள் வர வாய்ப்பு அதிகமுண்டு.தோல் மிகவும் மிருதுபடுவதால் சுலபமாகத் தோல் சிராய்ப்பு அல்லது புண்கள் ஏற்படலாம்.ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினால் சிறுநீர்ப்பையில் நீர் தேங்கிப்பூச்சித்தொல்லைகளுக்கு வழிவகுக்கலாம்.பெண்களுக்கு ஹார்மோன் குறைவினால் பிறப்புறுப்புகளில் வறட்சி ஏற்பட்டு பூச்சித் தொல்லைகள் வர வாய்ப்பு உண்டாகலாம்.உடலில் இருக்கும் பல நோய்களினாலும் எதிர்ப்பு சக்தி குறையலாம். உதாரணம்: நீரிழிவு நோய், தைராய்டு தொல்லை, சீறுநீரகச் செயலிழப்பு. முதுமையில் காணும் தொற்றுநோய்கள்நெஞ்சக நோய்கள்: ப்ளூ, நிமோனியா, காசநோய் சிறுநீர் தாரை நோய்கள்: ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலும், பெண்களுக்கு இறுதி மாதவிடாய் சமயத்தில் பிறப்புறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களினாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சிறுநீர்ப்பை சரிவரச் சுருங்கி விரிவடையாத காரணத்தினால்வயிறு: குடல் சார்ந்த பூச்சித் தொல்லைகள். உதாரணம்: டைபாய்டு, சீதபேதி, பித்தப்பையில் பூச்சித்தொல்லை மற்றும் கெட்டுப்போன உணவு உண்பதால்தோல் சார்ந்த தொற்று நோய்கள்: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குப் படை மற்றும் சிறுசிறு கொப்புளங்கள். அக்கி சார்ந்த அம்மை நோய்களும் வரலாம். மூளை, எலும்பு மற்றும் இதய வால்வுகளிலும் தொற்று நோய்கள் வரலாம்.நோய் தடுப்பு என்றால் குழந்தைகளுக்கு மட்டும்தான் என்ற காலம் போய், முதியோர்களுக்கும் உண்டு என்ற வந்துள்ளது.சில தொற்றுநோய்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் அந்நோய்கள் வராமலே தடுத்து நலமாக வாழமுடியும். முதுமைக் காலத்தில் நலமாய் வாழச் சீரான உணவு முறையும், உடற்பயிற்சியும் எப்படி அவசியமோ அதுபோலத் தடுப்பூசியும் அவசியம்.
வலது கையில் உள்ள மோதிர விரல் அடிக்கடி மடங்கிப் போய்விடுகிறது. அதை இடது கையை வைத்து நிமிர்த்தினால் பழைய நிலைக்கே வந்துவிடுகிறது. விரல் மடங்கும்பொழுது சற்று வலிக்கிறது. மற்றபடி செய்யும் வேலைகளில் எந்தத் தொந்தரவும் இல்லை. இது எதனால் வருகிறது. இதற்கு சிகிச்சை முறை.உங்களுக்கு ஏற்படும் தொல்லை 'வளைவு விரல் தொல்லை என்று சொல்லப்படும். இது எதனால் வருகிறது என்ற காரணம் சரியாகத் தெரியவில்லை. நீரிழிவு மற்றும் முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இந்தத் தொல்லை வர வாய்ப்பு அதிகம், விரல்களை அதிகமாக மற்றும் அழுத்தமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு இத்தொல்லை வரலாம். முதுமையில் இத்தொல்லை வர வாய்ப்பு அதிகம்.அறிகுறிகள்விரல்கள் சாதாரண நிலையில் இருக்கும் போது வலி ஏதுமிருக்காது. விரல்களை மடக்கி, நீட்டும் போது ஒருசில சத்தத்துடன் வலி ஏற்படும். தொடர் ஓய்வுக்குப் பிறகு விரலை நீட்டிமடக்கும்போது வலி ஏற்படலாம். உதாரணம்: இரவுக்குப் பின் காலையில் இந்த வலி வரலாம். இந்தத் தொல்லை வலது கைவிரல்களில் வந்தால், உணவு உண்ணச் சிரமமாக இருக்கும். முடிந்தால் ஸ்பூன் அல்லது இடது கையில் சாப்பிடலாம்.சிகிச்சை முறைவலி அதிகமாக இருப்பின் விரலுக்குச் சற்று ஓய்வு கொடுக்கலாம்.இயன்முறைச் சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்கும்.தேவைப்படும்போது வலி நிவாரணியை எடுத்துக்கொள்ளலாம்.மேற்கண்ட வழிமுறைகளில் பலன் கிடைக்காவிட்டால், விரலின் அடிப்பாகத்தில் ஸ்டீராய்டு ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். இந்த ஊசியைத் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் போட்டுக்கொள்ளக் கூடாது.ஊசி போட்டும் வலி குறையவில்லை என்றால் அறுவைசிகிச்சைமூலம்நல்லபலன் கிடைக்கும்.