உணவை மென்று சாப்பிட சிரமப்படுபவர்களுக்கு...
பல் இல்லாத முதியோர்கள்உணவை மென்று சாப்பிட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் பெரும்பாலும் திரவ உணவையோ அல்லது திரவம் அதிகமாகக் கலந்துள்ள உணவையோதான் எடுத்துக்கொள்வார்கள். இதனால் உணவின் அளவு மட்டுமல்ல,அதன் ஊட்டச்சத்து நிலையும் குறைந்துவிடும்.மெல்வதற்குச் சிரமப்படும் முதியோர்களுக்கான சில யோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றினால் அவர்களின் ஊட்டச்சத்து நிலை மேம்படும். ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.
பால்அருந்தவும்,பனீர், சீஸ்சாப்பிடவும்,மெல்வதற்குக்கடினமானபொருள்களைநன்றாகஅரைத்து, மசித்துச்சாப்பிடவும்.காய்கறிகளை வேகவைத்து மசித்துச் சாப்பிடவும்.
மிருதுவான பழங்களான வாழை, பப்பாளி, மாம்பழம், வேகவைத்த ஆப்பிள் சாப்பிடவும் அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ்கள் குடிக்கவும்.
குழைய வேகவைத்த சாதம், சேமியா, பொங்கல் மற்றும் உப்புமா சாப்பிடலாம்.
வேகவைத்த முட்டை,மிருதுவான இறைச்சி,வேகவைத்த மிருதுவான மீன்.
தக்காளி போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிட வேண்டியிருந்தால் பொடியாக நறுக்கியோ தோலுரித்தோ சாப்பிடலாம்.
சூப் வகைகள், ரொட்டித் துண்டுகளைப் பாலோடு சேர்த்துச் சாப்பிடலாம்.
ஐஸ்க்ரீம், ஜெல்லி, புட்டிங்ஸ், பாயசம், பாஸந்தி, ஜாமூன் மற்றும் ஜாங்கிரி போன்ற மிருதுவான உணவுகளைச் சாப்பிடலாம்.
0
Leave a Reply