உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன் இலை தேடுவான்.பொருள்: ஒருவனுக்கு தன் காரியம் வெற்றி பெற்று விட்டால் அதற்கு அடுத்தகட்ட காரியங்களை மேற்கொள்வான். அந்த காரியம் நடக்காத ஒருவன் அதற்காக தொடர்ந்து முயற்சிப்பான்.
ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல பொருள்: வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள் தாங்கள் அறிந்ததே உண்மை, தாங்கள் செய்வதே சரி என எண்ணுவர்.
விளக்கம்-: நாம் துன்பப்படும் வேளையில் ஒருவர் நமக்கு உதவி செய்தார் என்றால் உதவியை பெற்று நாம் வாழ்வில் முன்னேறியவுடன் நமக்கு உதவி செய்தவரையே பகைவராய்க் கருதி அவருக்கு துன்பம் இழைக்கலாமா கூடவே கூடாது .அவ்வாறு செய்வது பாவம் என்பதை இப் பழமொழி விளக்குகிறது.
ஊதாரிக்கு பொன்னும் துரும்பு பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய செல்வமும் சிறு துரும்பாகவே தெரியும்.
கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான் பொருள்: தனது திறமையின்மையை மறைக்க ,பிறவற்றை சிலர் குறை கூறுவர். இதை கூறுவதே இந்த பழமொழியின் பொருள்.
.தழைத்த மரத்திற்கு நிழல் உண்டுபொருள்: பக்குவம் பெற்ற ஒருவரால் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்சேர இருந்தால் செடியும் பகை பொருள்: எப்போதும் பிறருடன் அளவாக பழக வேண்டும். யாருடனும் அதிக நெருக்கத்துடன் இருந்தால் அங்கே பகை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது.
செக்கை வளைய வரும் எருதுகள் போல பொருள்: செக்கு மாடுஒரே மாதிரி வளைந்து செல்கிறதோ,அதே போல எந்த ஒரு உத்வேகமும் இல்லாமல் ,ஒரே மாதிரியான செயல்களை செய்பவர்களை குறிப்பதே இந்த பழமொழி.
.இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லைபொருள்: பிறருக்கு தான தர்மங்களை வழங்கி அழிந்தவருமில்லை, அவற்றை வழங்காமல் வாழ்ந்தவருமில்லை.
அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம் பொருள்: குணத்தால் தீயவர்களாக இருப்பவர்கள் வெளிப்புறத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதை உணர்த்துகிறது.