25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பழமொழி.

Sep 17, 2024

தம்பியுடையான் படைக்கஞ்சான் 

தம்பியுடையான் படைக்கஞ்சான் தம்பியை உடைய ஒரு அண்ணன் எதற்கும் அஞ்சாமல், அனைத்தையும் தைரியமாக செய்யலாம். ஒருவேளை தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தாலும் ,தன் குடும்பத்தை காத்து நிற்க தன் தம்பி இருக்கிறான் என்ற தைரியம். 

Sep 10, 2024

பழகப் பழக பாலும் புளிக்கும்

ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதன் மூலம் ஒருகட்டத்தில் அலுப்பு தட்டும்.

Sep 03, 2024

உணவு பழக்கம் பழமொழி வடிவில்

சித்தம் தெளிய வில்வம்.குடல்புண் நலம் பெற அகத்திக்கீரை.சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி.சூட்டை தணிக்க கருணைக்கிழங்குஜீரண சக்திக்கு கண்டைக்காய்.தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை.பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு,வாத நோய் தடுக்க அகத்திக்கீரை.உவாத நோய் தடுக்க அரைக்கீரை.

Aug 27, 2024

ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.

தந்தையின் தொழிலை மகனுக்கு யாரும் கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை.அவன் தன் தந்தையுடன் இருக்கும்போது அவனை அறியாமலே அதை அவன் கற்றுக்கொண்டு, அதில் அவன் சிறந்தவனாகவும் விளங்குவான். 

Aug 20, 2024

உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது.

உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது. உலை பொங்கி வராமல் இருக்க அடுப்பின் தீயை குறைத்து ,ஒரு தட்டை கொண்டு மூடி சமைத்துவிடலாம். ஆனால் எந்த  ரகசியமும் யாரிடமும் பாதுகாப்பாக இருக்கிறது. எப்படியாவது அது கசிந்துவிடும்.

Aug 13, 2024

பழமொழி வடிவில் உணவு பழக்கம்

சீரகம் இல்லா உணவு சிறக்காது. தன் காயம் காக்க வெங்காயம் போதும். வாழை வாழ வைக்கும். அவசர சோறு ஆபத்து, இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு ரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை  இருமலை போக்கும் வெந்தயக் கீரை. உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும். உஷ்ணம் தணிக்க கம்பங்களி கல்லீரல் பலம் பெற கொய்யா பழம். கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை

Aug 06, 2024

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி 

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி ஓட்டை கப்பல் என்பது நமது உடல். ஒன்பது மாலுமி என்பது நமது உடலில் இருக்கும் நவதுவாரங்கள்.

May 28, 2024

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்.

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய். பொருள்: இப்பழமொழி மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும். எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது. கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிலக்கியாக பயன்படும். அதே போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.

May 21, 2024

சருகைக் கண்டு தணலஞ்சுமா

சருகைக் கண்டு தணலஞ்சுமாபொருள்: உலர்ந்த இலையைச் சருகு என்பர். தணல் என்றால் தீ, உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும். எனவே சருகைக் கண்டுதணல் அஞ்சப்போவதில்லை. அதேபோலவே எளியவரைக்கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான் என்பதை விளக்கவே இப்பழமொழி கையாளப்படுகிறது.

May 07, 2024

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது. பொருள்: பேறு பார்க்கும் மருத்துவ மகளிருக்கு(மருத்துவச்சி) கண்டிப்பாக கூலி கிடைத்தே தீரும். ஒருவேளை பிள்ளை இறந்தே பிறந்தாலும், பேரு பார்த்ததற்கான கூலி கிடைக்கும். 

1 2 ... 10 11 12 13 14 15 16 17 18 19

AD's



More News