கடுகு சிறுத்தாலும் காரம்போகுமா?பொருள்:கடுகு என்னதான் அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம்-காரம்-என்பது போகாது. அதே போலவே யாரையும், எதையும் சிறியவை எனஎண்ணி ஒதுக்கிவிடாமல் இருந்தால் , பல நேரங்களில் மிகுந்த பலன் கிடைக்கும்.
பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.நாம் உண்ணக்கூடிய உணவு பால் என்றாலும் அதை குறிப்பிட்ட நேரத்தில்எடுத்துக் கொள்வதால் தான் நன்மைகள் ஏற்படும் காலம் தவறி உணவுஉண்பதால் உடலில் பல உபாதைகள் ஏற்படும். என்பதைத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.
மருந்தும்விருந்தும் மூன்று வேளை.தினசரி மூன்று வேளைக்கு மேல் மருந்தாய் இருந் தாலும் எடுக்கக்கூடாது. விருந்தாய் இருந்தாலும் உண்ணக்கூடாது என்பது இதன் பொருள்.விருந்துதானே என்று மூன்று வேளைகளுக்கு மேல் வெளுத்துக்கட்டினால் அதுவே வினையாகிவிடும். அஜீரணம் உருவாகும். அதுபோல்மருந்தை தின சரி மூன்று வேளை எனப் பிரித்து உண்டால்தான் நோய்எதிப்புச்சக்தி உடலில் பெருகி நோய் முழுமையாகக் கட்டுப்படும். ஒரேநேரத்தில் மொத்தமாக உண்டாலும் பலன் இல்லை. அதற்கு குறைவாய்பிரித்துப் பிரிந்து உண்டாலும் பலன் இல்லை. இதை விளக்கவே மருந்தும்,விருந்தும்மூன்று வேளை என்றார்கள்.
புண்பட்ட மனதை புகை விட்டுஆத்து.ஒருவரை நல்வழிப்படுத்துமே தவிர, தீய வழியை ஒருபோதும் காட்டாது.மனம் புண்பட்டால், புகை பிடிக்க வேண்டும் என்பது போல அனைவரும் அர்த்தம் புரிந்து கொள்கிறார்கள். உண்மையான அர்த்தம் அதுவல்ல."புண்பட்ட மனதைபுகவிட்டுஆற்று"என்பதுதான்உண்மையானபழமொழி.மனம்புண்பட்டிருக்கும் நேரம், துன்பத்தை எண்ணியெண்ணிவருந்திக் கொண்டிருக்காமல், மனதைத் திசை திருப்பித் துன்பத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் உண்மையான விளக்கம்.
முருங்கை உண்ண நொறுங்குமாம் மேகம்.பொருள்:முருங்கையின் மகத்துவம் சொல்லும் பழமொழி இது. மேகம் என்பது பால்வினை நோய்களில் ஒன்று ட்ரப்போனமா பலிடம் என்ற பாக்டரியாதொற்றால் இந்த நோய் உருவாகிறது. இதைக்கட்டுப்படுத்தும் ஆற்றல்முருங்கைக்கு உண்டு. முருங்கையில் உள்ள இரும்புச்சத்து உடலுக்குவலுவேற்றும், ரத்தத்தை பெருக் கும். இதனால், உடலில் தாது வளம்பெருகி பால்வினை நோய்கள் நீங்கும். இதைக் குறிக்கவே முருங்கைஉண்ண நொறுங்குமாம் மேகம் என்றார்கள்.-
சித்த வைத்தியம் தொடர்பான பழமொழி இது. சித்த வைத்தியத்தில் வேர்தான் மூலாதாரம். பல வேர்களைப் பற்றி அறிந்து கொண்டால்தான் வைத்தியம் கற்றுக்கொள்ள முடியும். ஆயிரம் வேரைக் * கொன்றவன் அரை வைத்தியன்" என்று இருந்த பழமொழிதான் காலப்போக்கில் மருவி வைத்தியரைக் கொலைகாரர் ஆக்கிவிட்டது.
இந்தக் கூழுக்கா இருபத்தெட்டுநாமம்!இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா?பசியால் வாடிய சிவனடியார்ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின்வழியே சென்றபோதுஅங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொன்றுசென்றார், பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்றுநினைத்து. ஏமாற்றத்தால் அவர் சொன்ன சொல் இந்தப்பழமொழியாகி, இப்போது ஒன்றுமில்லாததற்கெல்லாம் ஆர்ப்பாட்டமாக இருப்பதைக் கேலி செய்யப் பயன்படுகிறது.
இதில், பாம்பு என்பது மாஹபாரத போர்கலத்தில் அர்ஜீனன், கர்ணன் ஆகியோர் பயன்படுத்திய நாக அஸ்த்திரம் ஆகும். இந்தநாக அஸ்த்திரத்தைக் கண்டு படைவீரர்கள் பயப்படுவார்கள் இதுதான் இப்பழமொழியில் பாம்பு என்று வடிவம் பெற்றுள்ளது.
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா? என்பது தான் பழமொழி.குதிர் என்றால், ஆற்று வெள்ளத்தில் தற்காலிகமாக ஏற்பட்ட மணல்மேடு. அதில் கால் வைத்தால், நாம் ஆற்றில் மூழ்கி விடுவோம். அதனால் மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்ற எச்சரிக்கைதான் இது. மற்றபடி, குதிரைக்கும் இந்தப் பழமொழிக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.
வைத்தியனிடம் கொடுப்பதை.வாணியனுக்குக் கொடு,பொருள்-நல்ல தரமான உணவுப் பொருள்களை வாங்கி உண்பதற்குப் பயன்படுத்த வேண்டும். கலப்பட உணவால் தான் பெரும்பாலான நோய்கள் உருவாகின்றன. விலை மலிவாகக் கொடுத்தோ அல்லது தரமற்ற உணவுப் பொருளை வாங்கிப் பயன்படுத்தினால் ,நோய் உடலில் ஏற்படும். அதனை மக்கள் தவிரத்தல் வேண்டும். இக்கருத்தை மேற்கூறிய பழமொழி நன்கு புலப்படுத்துகிறது. உணவு சரிவர உண்ணாதிருந்தாலும் உடலுக்குத் தீங்கு நேரிடும். கருமித்தனத்துடன் சிலர் பட்டினியாக இருப்பர். அவ்வாறு உணவினைச்சரியான நேரத்திற்கு உண்ணாதிருந்தால்வயிற்றில் புண் அல்சர் ஏற்பட்டு மருத்துவரை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்க மருத்துவத்திற்குச் செலவுசெய்வதைவி டஅதிக விலையாக இருப்பினும் தரமான உணவுப்பொருள்களை வணிகரிடம்வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.