பிரதமர் மோடி தமிழகம் வருகை
மதுரை வீரபாஞ்சானில் சிறு, குறு நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் நேற்று மாலை பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி இரவு 7.32 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி, இணை கமிஷனர் கிருஷ்ணன் வரவேற்றார்.பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. பொற்றாமரை குளத்தை பிரதமர் பார்வையிட்டார். அம்மன் சுவாமி சன்னதியில் வழிபட்டார். சிறப்பு பூஜை நடந்தது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின், என் மண் என் மக்கள் நடைபயணத்தின்
நிறைவு விழா நேற்று திருப்பூரில் நடந்தது. ஹெலிபேடில் இருந்து திறந்த வாகனத்தில் வந்த மோடியை இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.நாட்டின் அரசியல் மாற்றத்தில் புதிய மையமாக தமிழகம் உருவாகிறது. லோக்சபா தேர்தலில் புதிய சரித்திரம் படைப்போம் என பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
0
Leave a Reply