ரயில் சோதனை ஓட்டம்
ரயில் சோதனை ஓட்டம்
விருதுநகர் தென்காசி ரயில் வழித்தடத்தில் தற்போது பயணிகள் ரயிலின் வேகம் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டரில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வேகத்தை மணிக்கு 110 கிலோ மீட்ர் உயர்த்தும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இதற்காக பழைய தண்டவாளங்கள் மாற்றப்பட்டு அதிக வேகத்தை தாங்கும் திறன் கொண்ட பலமான தண்டவாளங்களை பொருத்துவது. அடித்தள மண்ணை பலப்படுத்துவது அதிர்வுகளை தாங்க ஐல்லிக்கற்கள், வளைவுகளை சற்று நேராகி குறுக்கீடு பகுதிகளில் தடுப்புச் சவர் அமைப்பது பணிகள் நடந்து முடிந்துள்ளது.தற்போதுள்ள ரயில்களில் வேகத்தை 110 கிலோ மீட்ர் அதற்கான சோதனை ரயில் நேற்று காலை தென்காசியில் இருந்து கிளம்பி மதியம் 12.10 மணிக்கு இராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனை 120 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சென்றது. சோதனை ரயிலில் மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.
பி.ஏ.சிராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்.முகாம்
இராஜபாளையம் பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்ராயில் என்.எஸ்.எஸ். முகாம் புதுசெந்நெல் குளம் கிராமத்தில் நடைபெற்றது. முகாமை முதல்வர் சீனிவாசன் தொடங்கி வைத்து தலைமை ஆசிரியர் ராஜீ அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். முகாமில் பள்ளி மைதானம் சீரமைப்பு, உழவாரப்பணி, மரக்கண்றுகள் நடுதல், விழிப்புணர்வு ஊர்வலம்,பேச்சுப் பயிற்சி, மருத்துவ முகாம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
0
Leave a Reply