பாதியில் விட்டுச் சென்ற சாலைப்பணி
இராஜபாளையம் நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நகராட்சி தலைவர் பவித்ரா தலைமையில் நடந்தது. கமிஷனர் நாகராஜன், பொறியாளார் முகமது ஷெரீப், வருவாய் ஆய்வாளர் முத்து செல்வம்,சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் கலந்து கொண்டனர்.
ஒப்பந்ததாரர் பணிக்காக தோண்டிவிட்டதாக பாதியில் விட்டுச் சென்ற சாலையில் குடியிருப்பு வாசிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். 16 தெருக்களில் நான்கு ரோடு மட்டும் போட்டுள்ளனர். இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால் 90 சதவீதம் பணி முடிந்ததாக கூறுகின்றனர். என்று கவுன்சிலர்கள் வாக்குவாதம் நடந்தது.
நகராட்சி தலைர் பவித்ரா அவர்கள் அனைத்து வார்டுகளிலும் சமமாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது. எந்த பாரபட்சமும் இல்லை விரைவு படுத்த கூறி இருக்கிறோம். என்றார். இப்பணிகள் எப்போது சரியாகும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply