காமன்வெல்த்: மீராபாய்க்கு ஹாட்ரிக் தங்கம்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 48 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு மொத்தம் 190 கிலோ (85+105) பளுதூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்று, மொத்தம் நான்காவது பதக்கத்தையும் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரிஷிகாந்த் சிங் சனம்பம் மொத்தம் 264 கிலோ (121+143) பளுதூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
0
Leave a Reply