விருதுநகர் மாவட்டம் 22 பயனாளிகளுக்கு ரூ.14.69 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயரெங்காபுரத்தில் (25.07.2026) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.14.69 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.
இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தகுதியான பயனாளிகளுக்கு அரசு புறம்போக்கு இடத்திலோ, அரசு புறம்போக்கு இடம் இல்லாத பட்சத்தில் தனியாரிடமிருந்து அரசு நிர்ணயத் தொகையை செலுத்தி கையகப்படுத்தி, வீட்டு மனைகளாக அளவீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது..அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் விஜயரங்கபுரம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, 22 பயனாளிகளுக்கு ரூ.14.69 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 3 சென்ட் வீட்டுமனை இலவசமாக வழங்கப்பட்டது.இதன் மூலம் ஆதிதிராவிடர் குடும்பங்கள் சொந்த வீட்டுமனை பெற்று பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு சமூக நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்தி ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தகுதியுடைய அனைத்து பயனாளிகளும் அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் , குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சாத்தூர் கோட்டாட்சியர் திரு.கனகராஜ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி சாந்தி, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் திருமதி ஆண்டாள், வருவாய்த்துறை அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply