ஆசிய யூத் ஹாக்கி: இந்திய ஆண்கள் அணி சாம்பியன்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற ஆசிய யூத் ஐவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் யூத் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு தகுதி பெற்றன. வெற்றியை பாராட்டி இந்திய ஆண் வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பெண்கள் வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சமும் பரிசுத் தொகையாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
0
Leave a Reply