டி-20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா 'ஒயிட்வாஷ்'
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஹராரேவில் நடைபெற்ற கடைசி போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
0
Leave a Reply