ஆஸ்திரேலியா கடற்கரையில் மர்ம உலோகப் பந்துகள்.
ஆஸ்திரேலியாவின் பாரஸ்ட் கடற்கரையில் மர்மமான உலோகப் பந்துகள் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளியில் இருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்தப் பொருட்கள் குறித்து விண்வெளி முகமை முதற்கட்ட ஆய்வு நடத்தியதில், அவை ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்கள் (Pressure Vessels) என தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த உலோகப் பொருட்களை யாரும் தொட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இவை எந்த நாட்டின் ராக்கெட்டில் இருந்து பிரிந்து விழுந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
0
Leave a Reply