25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்(விருதுநகர் மின்பகிர்மான வட்டம்)சார்பில் ரூ.6.99 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்கு  அமைச்சர்  அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்(விருதுநகர் மின்பகிர்மான வட்டம்)சார்பில் ரூ.6.99 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் பேரநாயக்கன்பட்டி கிராமத்தில்  (14.03.2026)தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்(விருதுநகர் மின்பகிர்மான வட்டம்)சார்பில் ரூ.6.99 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I AS , அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி ஒரு முக்கியமான தொழில் நகரமாகும். இது பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழில்களுக்குப் பெயர் பெற்றது, நாட்டின் சுமார் 70 சதவிகித பட்டாசு உற்பத்தியை கையாள்வதால் "குட்டி ஜப்பான்" என்றும், இந்தியாவின் பட்டாசு தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

 இந்தியாவின் அச்சுத்துறையில் சுமார் 60 சதவிகிதம் இங்கு செய்யப்படுகின்றன. மேலும், இந்த நகரம் தினக்குறிப்புப்புத்தகம் தயாரிப்பதில் முக்கின பங்கு வகிக்கிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த தினக்குறிப்புப்புத்தகம் 30% இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. 2021-ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சிவகாசி, தொழில்வளம் மிக்க நகரமாக விளங்குகிறது.சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அய்யனார் காலனி, சித்தூராஜபுரம், சசி நகர் மற்றும் விஸ்வநத்தம் ஆகிய பகுதிகளுக்கு சிவகாசியில் அமைந்துள்ள பாறைப்பட்டி 110/33-11 கே.வி துணை மின் நிலையம் மற்றும் 33/11 கே.வி சாட்சியாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சியாலும், மக்கள் தொகைக்கு ஏற்பவும் இப்பகுதிகளில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதே போன்று இப்பகுதியை ஒட்டி, சாத்தூர் தொகுதியில் அமைந்துள்ள பேர்நாயக்கன்பட்டி கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு 110/ 33-11 கே.வி பாறைப்பட்டி, 33/11 கே.வி சாட்சியாபுரம் மற்றும் 33/11 கே.வி வெம்பக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.இப்பகுதிகள் மேற்படி துணை மின் நிலையங்களின் கடைக்கோடி பகுதியில் அமைந்திருப்பதால், இப்பகுதியில் கோடை காலங்களில் தாழ்வழுத்த குறைபாடு நிலவுகிறது.எனவே, இப்பகுதிகளின் மின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டும், தாழ்வழுத்த குறைபாட்டை சரி செய்யும் பொருட்டும்,  தமிழக முதல்வர் அவர்களால் சட்டமன்ற கூட்ட தொடரில் எரிசக்தித் துறை மானிய கோரிக்கையில் சாத்தூர் தொகுதியில் உள்ள பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஒரு புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இத்துணை மின் நிலையம் அமைப்பதற்காக பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 4.94 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு பெறப்பட்டு,  ரூ.6.99 கோடி மதிப்பில் இரண்டு 8 MVA, 33/11 கேவி மின்மாற்றிகளுடன் புதிய 33/11 கே.வி துணை மின் நிலையம் அமைக்க அனுமதி பெறப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய துணை மின் நிலையத்தால் 25,000 ற்கும் மேற்பட்ட மின்நுகர்வோர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தடையில்லாத தரமான மின்சாரம் வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மேற்பார்வை பொறியாளர்(விருது நகர் வட்டம்) திரு.பாலசுப்பிரமணியம், செயற்பொறியாளர் திரு. பாவநாசம், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News