நவ. 7ம் தேதி, 'அறிவான், ஆரோமலே, சிங் சாங், கிறிஸ்டினா கதிர் வேலன், அதர்ஸ், பகல்கனவு, வட்டக்கானல், வீரத்தமிழச்சி' ஆகிய 8 படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2024ல் மொத்தமே 234 தமிழ் படங்கள் ரிலீசான நிலையில், இந்தாண்டில் இப்போதே 222 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகியுள்ளன.
‘காந்தாரா சாப் டர் 1' ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய படம் 850 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படம் பற்றி ரிஷப் ஷெட்டி, ''காந் தாரா சாப்டர் 1ஐ பணத்திற்காக எடுக்கவில்லை. நான் வேறு கதையைப் படமாக்கியிருந்தால் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேன். காந்தாராவை கலாசார வேறுபாடுகளைக் கடந்து மக்கள் அதிகம் பேசிய போது இதை நியாயத்துடன் முடிக்க நினைத்தேன். அதன் முன்கதையை சொல்வதன்மூலம் அதற்கு நியாயம் சேர்க்க முடியும் என நம்பினேன். தெய்வீகத்தின் நம் பிக்கையால் இந்த படத்தை எடுத்தேன்" என்றார்.
தமிழில் தனது 14வது வயதிலேயே 'ஈரமான ரோஜாவே' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி.தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வந்தார். கடைசியாக மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த 'கலெக்டர்' படத்தில் நடித்திருந்தார். தற் போது 15 ஆண்டுகளுக்கு பின், மலையா ளத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் நடிகை மோகினி. பிரித்விராஜ் நாயகனாக நடிக்கும், இயக்குனர் ஜினு ஆபிரகாம் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு துவங்குகிறது.
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடித்துள்ள அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் அக்.31ல் ரிலீசாகிறது. படம் பற்றி ரியோ ராஜ், "படத்தில் திருமணமான தம்பதிகளிடையே நடக்கும் பிரச்னைகளை ஆண்கள் சைடில் இருந்து பேசியிருக்கிறோம்.பெண்ணியம் பேசுபவர்களுக்கும் கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். இது ஆண்களுக்கு சப்போர்ட்டிவான படம் " அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான படம் கிடையாது, என்றார்.
சூப்பர் சிங்கர் பூவையார் ஹீரோவாக நடிக்கும் 'ராம் அப்துல்லா ஆண்டனி' படம் அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வேல ராமமூர்த்தி, தலை வாசல் விஜய்,சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி , வைத்தியநாதன் ,வனிதா உள்பட பலர் நடிந்துள்ளனர். மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.
அக்., 31ல் விஷ்ணு விஷால் நடிக்கும் 'ஆர்யன்' படம் ரிலீசாகிறது. விஷ்ணு விஷால் இதில் மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'கண்ணுார் ஸ்குவாட்' படத்தின் பல காட்சிகள் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் எனக் கூறியுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரியும், 4 பேர் கொண்ட குழுவும் பல மாநிலங்களுக்கு சென்று குற்றவாளியை பிடிப்பது தான் கண்ணுார் ஸ்குவாட் கதை.
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான 'காந்தாரா சாப்டர் 1' உலகளவில் ரூ.818 கோடி வசூலித்துள்ளது. 2025ல் இந்திய படங்களில் அதிகம் வசூல் செய்ததாக இப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. பட வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி, மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து ஆன் மிக பயணத்தை துவங்கியுள்ளார். தொடர்ந்து நஞ்சனகுடு கண்டேஸ்வரர் கோயில், தக்ஷன காசி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் சென்ற ரிஷப், பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றும் தரிசனம் செய்துள்ளார்.
'ஜிடிஎன்' என்ற படம் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்க அவரது ரோலில் நடிக்கும்மாதவனின்தோற்றத்தைவெளியிட்டுள்ளனர்.இந்தலுக்கிற்காகமாதவன்இரண்டரைமணிநேரம் மேக்கப்போட்டுள்ளார் .அடுத்தாண்டு கோடையில் படத்தை ரிலீஸ் 'செய்ய எண்ணி உள்ளனர்.
நடிகர் பிரபாஸ் ,சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ' ஸ்ப்ரிட் ' படத்தில் நடிக்கும் அறிவிப்பு வீடியோ வெளியானது. ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடிக்க, இவருடன் நாயகியாக திரிப்தி டிம்ரி ,வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை காஞ்சனாவும் நடிக்கிறார். இவர் 2017ல் சந்தீப் இயக்கிய 'அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா பாட்டியாக நடித்தார்.
தமிழ் சினிமாவில் அக்.,31ல் "ஆண்பாவம் பொல்லாதது, ஆர்யன், மெஸன்ஜர், பரிசு, ராம் அப்துல்லா ஆண்டனி, தடை அதை உடை, தேசிய தலைவர், வட்டக்கானல்" ஆகிய எட்டு படங்கள் அக்.,31ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைச்சேர்த்தால் இந்தாண்டில் வெளியான படங்கள் எண்ணிக்கை 230 ஆக உயரும்.