25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Nov 13, 2025

பிரான்ஸின் கலை மற்றும்  கலாசார அமைப்பின் சார்பில்  தோட்டா தரணிக்கு செவாலியே விருது.

கலை இயக்குனர் தோட்டா  தரணி தென்னிந்திய சினிமாவின் முக்கியமானவர். இயக்குனர் தோட்டா  தரணி. நுாற்று கணக்கான படங்களில் பணியாற்றி  உள்ளார். இவரின்  கலைச் சேவையை  பாராட்டி பிரான்ஸின் கலை மற்றும்  கலாசார அமைப்பின் சார்பில்  செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவ., 13ல் சென்னையில்  வழங்கப்படுகிறது.

Nov 13, 2025

டிச. 12ல் ரஜினி பிறந்தநாளில் 'அண்ணாமலை' ரீ ரிலீஸ்

ரஜினி, சரத்பாபு, குஷ்பு நடித்து, 1992 சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அண்ணாமலை'. ரஜினியின் திரை வாழ்க்கையை அண்ணா மலைக்கு முன்பு, ஹிட் அடித்த, இப்படம் முதல்முறையாக 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் பிறந்தநாளான டிச. 12ல் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். அதுபோல, 2004ல் சேரன் இயக்கி நடித்த 'ஆட் டோகிராப்' படம் நவ.14ல் ரீ ரிலீஸ் ஆகிறது. சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா 3 உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தேசிய விருது களை வென்றிருந்தது

Nov 13, 2025

விக்ரம் குமார் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா.

இயக்குனர் விக்ரம் குமார், தெலுங்கு நடிகர் நிதினை வைத்து ஒரு படம் இயக்குவதாக சொல்லப்பட்டது. படம் துவங்கப்படாத தால், அதே கதையை விஜய் தேவரகொண்டாவிடம் சொல்லி ஒகே வாங்கி விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளாராம் விக்ரம் குமார். 

Nov 13, 2025

லோகேஷ், வினோத் பவன் கல்யாண் படத்தை இயக்க போட்டி 

.ஆந்திர துணை முதல்வரான பின்பு, நடிகர் பவன் கல்யாண்,  ஹரிஹர வீர மல்லு, ஓஜி படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது 'உஸ்தாத் பகத்சிங்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் படத்தை கேவிஎன் நிறுவனம் எடுக்க முன் வந்துள்ளது. தமிழ் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், எச்.வினோத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

Nov 13, 2025

இசையமைப்பாளர் இளையராஜா குடும்பத்தின், அடுத்த வாரிசு யத்தீஸ்வர் ராஜா!

இளையராஜாவை தொடர்ந்து, அவரது மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரணி ஆகியோரும். இசை துறைக்கு வந்தனர்., கார்த்திக் ராஜாவின் மகனும், இளையராஜாவின் பேரனுமான யத்தீஸ்வர் ராஜாவும், 'போற போக்குல' என்ற பெயரில் ஒரு ஆல்பத்துக்கு இசையமைத்து பின்னணி பாடியுள்ளார். இந்த ஆல்பத்தை ரஜினி, கமல் வெளியிட்டுள்ளனர். திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் தயாராகி வருகிறார், யத்தீஸ்வர் ராஜா.

Nov 13, 2025

கிண்டலடித்த ரசிகர் : சூரி  தகுந்த பதிலடி!

குடும்பத்துடன் நடிகர் சூரி தனது சொந்த ஊரான ராஜாக் கூரில் தீபாவளி கொண்டாடிய வீடியோவை பகிர்ந்தார். "திண்ணைல் கிடந்த வனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" ரசிகர் ஒருவர் கிண்டலாக பதிவிட் டார். அதற்கு சூரி, "திண்ணையில் மட்டும் இல்லை நண்பா”,” பல நாட்கள் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்”... இவைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும், மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினால், வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்" என தகுந்த பதிலளித்துள்ளார்.

Nov 13, 2025

'டாடா' இயக்குனர் கணேஷ் துருவ் படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில்  துருவ் நடித்து வெளியான 'பைசன்' படம் வரவேற்பை பெற்றுள்ளது. அவரை தேடி நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன. அவற்றில் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபுவின் இந்த படம் தொடர்பான பணிகள் துவங்கி உள்ளன. தற்போது ரவி மோகனை வைத்து தற்போது “கராத்தே பாபு” படத்தை இயக்கும் கணேஷ் அடுத்து துருவ் படத்தை இயக்குகிறார். 

Nov 06, 2025

'டியூட்' படம் மூலம் ரூ.100 கோடி வசூலை கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் ,கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் , வெளியான படம் உலகம் அளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. பிரதீப் 'லவ்டுடே, டிராகன்' படங்களை தொடர்ந்து 'டியூட்' படம் மூலம் ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை கொடுத்துள்ளார்.இவரின் ஹாட்ரிக் ஹிட் படங்களில் மலையாள நடிகைகள் நடித்தது ராசியாக பார்க்கப்படுகிறது. 'லவ் டுடே ' யில் இவானா, 'டிராகன்'ல் அனுபமா பரமேஸ்வரன், 'டியூட்'ல் மமிதா பைஜூ நடித்தனர்.

Nov 06, 2025

சர்வதேச திரைப்பட விழாவில் பிரைட் ப்யூச்சர் பிரிவில் திரையிட தேர்வாகி உள்ள 'மயிலா' திரைப்படம்.

 நடிகை செம்மலர் அன்னம் முதன்முறையாக 'மயிலா' என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படம் அடுத்தாண்டு நெதர்லாந்தில் நடக்கும் 55வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிரைட் ப்யூச்சர் பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது. கிராம பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை பேச உள்ளது. நடிகை செம்மலர் அன்னம் சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார்.

Nov 06, 2025

நடிகர் நாகார்ஜூனாவின் 100வது படத்தில் 2வது நாயகியாக நடிகை சுஷ்மிதா பட்.

நடிகர் நாகார்ஜூனாவின் 100வது படத்தை ஆர்.கார்த்திக் இயக்குகிறார். இதன் ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக 3 நடிகைகள் நடிப்பதாகவும், அதில் ஒருவராக ஹிந்தி நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். 2வது நாயகியாக தமிழில் 'லவ் மேரேஜ்' படத்தில் நடித்த சுஷ்மிதா பட் இணைந்துள்ளார். 3வது நாயகியை தேர்வு செய்வதில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

1 2 ... 32 33 34 35 36 37 38 ... 90 91

AD's



More News