25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Oct 23, 2025

விக்ரம், அனிருத் உடன் இணையும் ''ஹாய்'

''ஹாய்' பட இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆக் ஷன் கதையில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதன் மூலம் ,முதன்முறையாக இவர் விக்ரமுடன் இணைகிறார். 

Oct 23, 2025

'டீசல்' படம் தங்கத்தை விட அதிகமதிப்புமிக்க எரிபொருள், உலகத்திற்கு பின்னால் நடக்கும் கதை.

ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்த 'டீசல்' படம் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ரிலீஸாகிறது. ஹரிஷ் பேசியதாவது, ஆக்ஷன் ரோல் பண்ணியிருக்கேன் .தங்கத்தை விட அதிகமதிப்புமிக்க எரிபொருள் உலகத்திற்கு பின்னால் நடக்கும் கதை, மக்களுக்கு படமாக இருக்கும், என அறிவித்துள்ளனர்.

Oct 23, 2025

'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தியில் ரீமேக் .

தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப பில் வெளியான படம் 'சங் கராந்திகி வஸ்துனம்' இந்தாண்டு பொங்கலுக்கு ,இதை ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். அனீஸ் பாஸ்மி இயக்க, ஹீரோவாக அக்ஷய் குமாரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.

Oct 23, 2025

'தி டார்க் ஹெவன் என்ற  படத்தில் ஹீரோவான 'டிவி' நடிகர் சித்து.

டிவி சீரியலில் ஹீரோவாக நடித்த சித்து, இப்போது 'தி டார்க் ஹெவன் என்ற  படத்தில் ஹீரோவாகிவிட்டார். பாலாஜி இயக்கி உள்ளார். இப்பட விழாவில் பேசிய சித்து, "இதில்  போலீஸ் அதிகாரியாக வருகிறேன்  கிரைம் திரில்லர் கதை. காட்டுப்  பகுதியில் அதிக நாட்கள் படப் பிடிப்பு நடந்தது. தர்ஷிகா ஹீரோயின். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. பாசிடிவ் விஷயங்கள் குறைந்து விட்டது. 

Oct 23, 2025

இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோ ஆகிறார்.

முன்னணி இசையமைப்பாளராக தமிழ், தெலுங்கில் இருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். தெலுங்கில் வேணு இயக்கத்தில் உருவாகும் 'எல்லம்மா' என்ற படத்தின் மூலம் இவர் நாயகனாக அறிமுகமாகிறாராம். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Oct 23, 2025

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் நவ., 14ல் 'காந்தா' ரிலீஸ்

நடிகர் எம். கே.தியாகராஜ பாகவதர், பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு பின்னணியில் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'காந்தா' உருவாகி உள்ளது. நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளர். தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் நவ.14ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

Oct 23, 2025

அட்லி உடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்" என்றார் ரன்வீர் சிங் .

அட்லி ,அல்லு அர்ஜூனை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்கி வருகிறார் இதில் நாயகியாக தீபிகா படு கோனே நடிக்கிறார். தீபிகாவின் கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் மும்பையில் . நடந்த நிகழ்ச்சி ஒன்றில், "அட்லி தற்போது இயக்கி வரும் படம் இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கப் போகிறது. சிலிர்ப்பூட்டும் காட்சிகள் உள்ளன. அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்" என்றார்.

Oct 23, 2025

'மகுடம்' படத்தின் இயக்குனரான ரவி அரசு விலகி விட ,விஷால் இயக்குனராக மாறி படத்தை எடுத்து வருகிறார்.

 ரவி அரசு இயக்கி விஷால்,துஷாரா விஜயன் நடிக்கும் மகுடம்  ' படத்தை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துள்ள நிலையில் ரவி அரசு விலகிவிட அவருக்கு பதில் விஷாலே இயக்குனராக மாறி படத்தை எடுத்து வருகிறார். இதை அதிகாரப்பூர்வமாக விஷால் அறிவித்ததோடு இயக்குனராக எடுக்கும் முதல் முயற்சி., பொறுப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு" என தெரிவித்துள்ளார். விஷாலுக்கும், ரவி அரசு மற்றும் அவரது உதவியாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை தான் இதற்கு காரணம் என்கிறார்கள்

Oct 16, 2025

'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் தீபிகாவுக்கு பதில் சாய் பல்லவி.

சாய் பல்லவி, நாக் அஸ்வின் இயக்கிய பிரபாஸின் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் நாயகியாக நடித்த தீபிகா படுகோனே விலகியதை அடுத்து, சாய் பல்லவியிடம் இயக்குனர் பேச்சு நடத்தி வருகிறார்.அடுத்தாண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், அதற்குள் அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.

Oct 16, 2025

நாகார்ஜுனாவின் 'லாட்டரி கிங்' 100வது படத்தில் மகன்கள் நாகசைதன்யா, அகில்.

தமிழ் இயக்குனர் ரா.கார்த்திக் ,நடிகர் நாகார்ஜூனாவின் 100வது படத்தை 'லாட்டரி கிங்' என தலைப்பு வைத்து இயக்குகிறார்.. இதில் நாகார்ஜூனாவின் மகன்களும் நடிகர்களுமான நாகசைதன்யா, அகில் இரு வரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக் கிறார்கள். ஏற்கனவே 'மனம்' படத்தில்  3 தலைமுறையினர் இணைந்து நாகார்ஜூனா, அவரது தந்தை நாகேஸ்வர ராவ், மகன் நாகசைதன்யா என நடித்திருந்தனர்

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 90 91

AD's



More News