ஹிந்தியில் தனுஷ் நடித்து ஆனந்த் எல் ராய் இயக்கிய 'தேரே இஷ்க் மெயின்' படம் நவ., 28ல் ரிலீசாகிறது. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் 'ரிவால்வர் ரீட்டா'. டார்க் காமெடி கலந்த ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இருமுறை அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. நவ., 28ல் ரிலீஸாகும் என புதிய தேதியை அறிவித்துள்ளனர்.
'அமரன்' திரைப்படம் இந்திய பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது படக்குழுவினருக்கு ஒரு பெரிய கௌரவமாகும். கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்காக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி, அனைத்து முக்கிய உறுப்பினர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தனர்.கோவாவில் நடைபெற்ற56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய பிறகு விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.சிவகார்த்திகேயன் கூறுகையில்,“நான் நடித்த ஒரு படம் இவ்வளவு பெரிய விழாவில் அங்கீகரிக்கப்பட்டது எனக்கு ஒரு பெரிய மரியாதை.'அமரன்' ஒரு வருடம் முன்பு வெளியானாலும், இன்றைய அனுபவம் படத்தின் முதல் நாளின் உணர்வை மீண்டும் கொண்டுவருகிறது. இது ஒரு நடிகருக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சி," என்று அவர் கூறினார்.மேலும், இந்தப் படத்தை உருவாக்கும் பயணம், கதையின் ஆழம், வீரர்களின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் ஆகியவை தன்னைப் பெரிதும் பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.'அமரன்' படக்குழுவுடனான தனது பிணைப்பை சிவகார்த்திகேயன் பகிர்ந்து கொள்கிறார். சாய் பல்லவி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடனான இந்த தருணத்தை அனுபவிப்பது தன்னை ஒரு புதிய படத்தின் தொடக்கப் புள்ளியில் மீண்டும் கொண்டு வந்ததாகவும் சிவகார்த்திகேயன் கூறினார். 'அமரன்' சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பது தனக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அவரது உரை முழுவதும் உணரப்பட்டது.
VIJAY TV பாடகரான பூவையார் ஜெயவேல் இயக்கத்தில் 'ராம் அப்துல்லா ஆண்டனி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் . இன்று படம் ரிலீஸாகிறது. பூவையார் கூறுகையில், "நான் கதை நாயகனாக நடித்த படம் பல தடைகளை தாண்டி வருவது மகிழ்ச்சி. தன் தந்தை புகைபிடிக்கும் பழக்கத்தால் தான் உயிர் இழந்தார் என் படங்களில் புகைபிடிக்கும் காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்றார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினி, கமல், விஜய், கார்த்தி போன்ற நடிகர்களின் படங்களை இயக்கி பிரபலமானவர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். நாயகியாக வாமிகாகபிநடிக்கிறார். 'டிசி' எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் தேவதாஸ் கதாபாத்திரத் தில் லோகேஷூம், சந்திரா கதாபாத்திரத்தில் வாமிகாவும் நடிக்கின்றனர். அதிரடி ஆக்ஷன் கதையில் இவர்களின் பெயர் சுருக்கமே 'டிசி' தயாராகிறது.
'அனந்தா என்ற தலைப்பில் சாய் பாபா பற்றிய பக்தி படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட் டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் விரைவில் ரிலீசாகிறது. 'அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட பல படங் களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. புட்டபர்த்தி சாய்பாபாவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் மகிமை சொல்லும் படமாக வருகிறது அனந்தா. இந்த பட விழாவில் பேசிய சுரேஷ் கிருஷ்ணா, "நான் புட்டபர்த்தி சென்றேன். இவ்வளவு ஆண்டுகள் எங்கே இருந்த, ஏன் வரலை, இப்ப வந்துட்டே என்று பாபா பேசினார். எனக்கு அழுகை வந்தது. ஒருநாள் அதிகாலை 3:30 மணிக்கு என் கன வில் பாபா வந்து விபூதியை கொட்டினார். தயாரிப்பாளர் கனவிலும் பாபா வந்து படம் பண்ணுவது பற்றி பேசினார். சத்யசாய் பக்தர்களுக்கும் இது முழுமையான பக்தி படமாக இருக்கும்'' என்றார்.
விஜய் அவரது கடைசி படமாக அறிவித்து, நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் வினோத் இயக்கத்தில் ஜன., 9ல் ரிலீஸாகிறது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ நடித்துள்ளனர். படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் விஜய் நிற்க அவரை அவர்கள் தொட்டு வரவேற்பது போல் உள்ளது. படத்தின் முதல் பாடல் நவ. 8 ல் வெளியானது.
மூத்த இயக்குனர் எஸ்.பி., முத்துராமன், 'அறியாத பசங்க' பட விழாவில் ,"80 ஆண்டு பாரம்பரிய மிக்க நிறுவனமான ஏ.வி.எம் இன்று படங்கள் தயாரிப்பதில்லை. இதை அவர்களிடம் கேட்டேன்.படம் தயாரித்து விடலாம். வியாபாரம் செய்வது கஷ்டம் என்றனர். பக்கா ஸ்கிரிப்ட் இருந்தால் தான் ஒரு படத்தை தொடங்குவர். அதனால் தான் ஏ.வி. எம்., படங்கள் வெற்றி பெற்றன. உழைப்பு, ஒழுக்கம் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம்" என்றார்.
'மா வந்தே' என்ற படம் ஹிந்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை தழுவி உருவாகி, பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர்.கிராந்தி குமார் இயக்க, பிரதமர் மோடியின் வேடத்தில் உன்னி முகுந்தன் நடிக்கிறார். பிரதமர் மோடியின் அம்மா ஹீரா பென் வேடத்தில் நடிகை ரவீனா டாண்டன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
'வாரணாசி' என தலைப்பு வைத்து, ராஜமவுலி இயக்கத்தில் ,மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, நடிக்கும் படத்திற்கு ,ஹைதராபாதில் நடந்த விழாவில் படக்குழு அறிவித்தது. விழாவில் மகேஷ்பாபு, "இது என் கனவு திரைப்படம். இதன் மூலம் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். ஒட்டுமொத்த இந்தியாவும் 'வாரணாசி' ரிலீஸ் ஆனதும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்" என்றார்.
கோபி சந்த் மலினேனி தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை இயக்கிறார். வரலாற்று பின்னணியில் பிரமாண்ட ஆக்ஷன் படமாக ,மகாராணி வேடத்தில் நயன் தாரா நடிக்கிறார். நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இதற்கான அறிவிப்பு வெளியானது. 4வது முறையாக நயன்தாரா பாலகிருஷ்ணா ஜோடி சிம்ஹா, ஜெய் சிம்ஹா ஸ்ரீ ராம ராஜ்யம் ஆகிய படங்களுக்கு பின் இணைகின்றனர்.