கிரிக்கெட் முதல் டெஸ்டில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதின .
நேற்று துவங்கிய கிரிக்கெட் முதல் டெஸ்டில் ஆமாதாபாத் மைதானத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண் டீஸ் கேப்டன் ராஸ்டன் சேஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு சுருண்டது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட முடிவில் 38 ஓவரில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் மட்டும் பின்தங்கியிருந்தது. ராகுல் (53), கேப்டன் சுப்மன் கில் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று இந்திய பேட்டர்கள் கைவசம் ,8 விக்கெட் இருக்கும் நிலையில், விளையாடி, வலுவான ஸ்கோரை எட்டலாம்.
0
Leave a Reply