ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் திரைக்கு வந்த 'அமரன்' படம், ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்ததாக நடிகர் தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் டி சீரியஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிந்தியில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பணிகள் விரைவில் துவங்குகிறது.
முதலில் மகிழ்திருமேனி இயக்கி உள்ள ,அஜித்தின் ' விடா முயற்சி ' படம் இந்த பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்து பின்னர் தள்ளி வைக்கப்பட் டது.இந்தாண்டு அவரின் இரு படங்கள் வெளியாகின் றன. மற்றொருபுறம் ஆதிக் ரவிச்சந் திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார். இதன் படப் பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் ஏப்., 10ல் படம் வெளியீடு என அறிவித்துள்ளனர்.
அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள ,ஷங்கர் இயக்கத்தில், சரண், இயாரா அத்வானி நடிப்பில் தெலுங்கில் பான் இந்தியா படமாக ஜன., 10ல் திரைக்கு வரும் படம் 'கேம் சேஞ்சர்'. இதன் டிரைலர் ஜன 2 ல் வெளியானது. 24 மணி நேரத்தில் தெலுங்கு டிரைலர் 36.24 மில்லியன் பார்வைகளை யுடியூபில் பெற்றது. இப்படம் அனைத்து விதமான தளங்களிலும் 180 மில்லியன் பார்வைகளை பெற்றது.
சிவ கார்த்திகேயன் அளித்த பேட்டியில் "அமீர்கான் என்னை அழைத்து அவரது தயாரிப்பில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும்படி கூறினார். என் கைவசம் உள்ள படங்களை முடித்ததும், அவர் தயாரிப்பில் நடிப் பேன்" என்றார். இதன்மூலம் பாலிவுட்டில் களமிறங்க உள்ளார் சிவகார்த்திகேயன். அமரன் படத்திற்கு பின் ஏ.ஆர். முருகதாஸ், சுதா கெங்கரா, சிபி போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார் சிவ கார்த்திகேயன்.
மகாராஜா தமிழ் திரைப்படம் ஒரு அசாதாரண நிகழ்வில் தனது மகளுக்கு நீதி தேடும் ஒரு மனிதனைச் சுற்றி வருகிறது. நிகழ்வுகளின் வியத்தகு திருப்பத்தில், பாதிக்கப்பட்டவரின் உண்மையான தந்தை முக்கிய எதிரியாக இருப்பதைக் காணலாம். இப்படத்தில்விஜய்சேதுபதி, அனுராக்காஷ்யப், மம்தாமோகன்தாஸ், சச்சனா நமிதாஸ், திவ்யபாரதி, அபிராமி, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூன் 14, 2024 அன்று இந்திய திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் தற்போது Netflix இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.விஜய் சேதுபதியின் தமிழ் திரைப்படத்தின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பாருங்கள். இப்படம் சமீபத்தில் வெளிநாட்டு சந்தையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியதுவர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலாவின் கூற்றுப்படி, ஒரு வெளிநாட்டு சந்தையில் இவ்வளவு நல்ல வியாபாரம் செய்த முதல் தமிழ் திரைப்படம் மகாராஜா. இப்படம் சீனாவில் நவம்பர் 29, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தியாவை விட அண்டை நாட்டில் சிறப்பாக செயல்பட்டது. டிக்கெட் விண்டோஸில் படம் பலமான வேகத்தில் தொடர்வதால், படம் விரைவில் சீனாவில் ரூ 100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கலாம்.
2024ல் தமிழில் 230 படங்கள் வெளியாகின. 2025ல் அதை விட அதிக படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. 2025 ஆண்டு முதல் வெள்ளிக்கிழமையான ஜன., 3ல் "பயாஸ் கோப், எக்ஸ்ட்ரீம், கலன், லாரா" ஆகிய படங்கள் வெளியாகின்றன.
படம் ஜன.10ல் ரிலீசாக உள்ள ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்துள்ளனர். இப்பட விழாவில் பேசிய ஷங்கர், "30 ஆண்டுகளாக திரை வாழ்வில் தெலுங்கு ரசிகர்கள் எனக்கு அளித்து வரும் அன்பிற்கு நன்றி. இந்த படத்தை எனது பாணியில் தனித்துவமான ஒரு கதையில் இயக்கி இருக்கிறேன். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்'' ராம்சரண் மூன்று விதமான கெட்டப் புகளில் நடித்திருக்கிறார்.
அமுதா சாரதியின் வசனம். இயக்கத்தில் உருவாகி வரும் 'சன்னிதானம் பி.ஓ' படத்தில் யோகி பாபு, கன்னட நடிகர் ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் மூவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இயக்குனர் கூறுகையில், ''சபரிமலைக்கு பயணிக்கும் பக்தர்கள் செல்லும் வழியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே இத்திரைப்படம். தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் 5 மொழிகளில் கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
கடந்தாண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால்,எஸ். ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'மார்க் ஆண்டனி'. தொடர் தோல்வியை சந்தித்த விஷாலுக்கு இப்படம் வெற்றி தந்தது. இந்த படத்தின் 2ம் பாகத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது அஜித்தின் 'குட் பேட் அக்லி' பட வேலைகளில் உள்ள ஆதிக், அதை முடித்ததும் மார்க் ஆண்டனி 2 பட பணியில் இறங்க உள்ளார்.
அஜித்தின் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்கள் அடுத்தாண்டு வெளி யாக உள்ளன. இதையடுத்து கார் ரேஸில் பங்கேற்கும் அஜித் அதை முடித்ததும் ஐந்தாவது முறையாக மீண் டும் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வந்தது. ஆனால் இப்போது வெங்கட் பிர புவும் அஜித்திடத்தில் ஒரு கதை சொல்லியிருக்கி றாராம். இவர்களில் யார் படத்தில் அஜித் நடிப்பார் என்பது தெரியவரும். விரைவில்.