ஸ்வீட் கார்ன் சூப்.
தேவையான பொருட்கள்:-
ஸ்வீட் கார்ன் (மக்காச்சோளம்) - 1 கப்,
பொடியாக நறுக்கிய கேரட் - 2 ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 2 ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்,
வெண்ணெய் அல்லது எண்ணெய் - 1 ஸ்பூன்,
சோள மாவு (Cornflour) - 1 ஸ்பூன் (அரை கப் தண்ணீரில் கரைத்தது),
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - 2 முதல் 3 கப் .
செய்முறை :-
எடுத்துக்கொண்ட 1 கப் சோளத்தில், பாதியை மட்டும் தனியாக எடுத்து
மிக்சியில் போட்டு மையாக அரைத்துக்கொள்ளவும்.
மீதமுள்ள முழு சோளத்தை தனியாக வைக்கவும்.
பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு,
கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து லேசாக வதக்கவும்.
அதனுடன் முழு சோளம் மற்றும் அரைத்த சோள விழுதைச் சேர்த்து,
தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மிதமான தீயில் 10
நிமிடங்கள் கொதிக்க விடவும்.
சோள மாவு தண்ணீரை அதனுடன் ஊற்றி கிளறவும். சூப் லேசாக
கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடலாம். சூடான சுவையான ஸ்வீட்
கார்ன் சூப் தயார்.
0
Leave a Reply