25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Dec 25, 2024

'மகாராஜா' இயக்கிய நித்திலன் சாமிநாதனருக்கு சொகுசு கார் பரிசு

 ரூ.100 கோடிக்கு மேல் வசூலை கடந்த விஜய் சேதுபதியின் 50வது படமாக இந்தாண்டு வெளியான படம் 'மகாராஜா'. நித்திலன் சாமிநாதன் இயக்கினார்.. இப்போது சீனாவிலும் 80 கோடி வசூலை கடந்துள்ளது. மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர், நித்திலனுக்கு 80 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார். 

Dec 25, 2024

சிறந்த நடிகர்  விஜய் சேதுபதி, சிறந்த நடிகை சாய் பல்லவிக்கு விருது

மகாராஜா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும், அமரன் படத்திற்காக சிறந்த நடிகை சாய் பல்லவி, சிறந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் விருது  சென்னையில் நடந்த 22வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் பெற்றனர். இவர்கள் தவிர அரவிந்த்சாமி(மெய்யழகன் படம்), தினேஷ்(லப்பர் பந்து படம்) உள்ளிட்ட பலரும் விருது பெற்றனர். 

Dec 25, 2024

நடிகர் தனுஷ் சந்திரபாபு வாழ்க்கை  வரலாறு படத்தில் நடிக்க உள்ளார் .

 தமிழ் சினிமாவில் நடிகர், காமெடியன், இயக்குனர்., பாடகர் 60, 70 கால கட்டத்தில் கலக்கியவர் சந்திரபாபு.1974ல் அவர் இயற்கை எய்தினார். இவரின் வாழ்க்கையை படமாக உருவாக்க நடிகர் தனுஷ் அவரது வேடத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கான பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே இசையமைப்பாளர் இளைய ராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dec 25, 2024

2024ம் ஆண்டு வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 27ல் 10 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 27ல் "அலங்கு, பீமா சிற்றுண்டி, இது உனக்கு தேவையா, கூரன், மழையில் நனைகிறேன், நெஞ்சு பொறுக்குதில்லையே, ராஜாகிளி, திரு மாணிக்கம், தி ஸ்மைல் மேன், வாகை" ஆகிய 10 படங்கள் வெளியாவதாக அறிவிக் கப்பட்டுள்ளன. மோகன் லாலின் மலையாள படமான 'பரோஸ்', கிச்சா, சுதீப்பின் கன்னட படமான 'மேக்ஸ்' ஆகியவையும் தமிழில் டப்பிங் ஆகி வெளி யாக உள்ளது.

Dec 25, 2024

நடிகர் மோகன்லால், முதன் முறையாக நடித்து, இயக்கியுள்ள “பரோஸ் “ 3டி கண்ணாடி .அணியாமலேயே பார்க்கும் வகையில் உருவாக்கியுள்ளது

 ” 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள மலையாள நடிகர் மோகன்லால், முதன் முறையாக நடித்து இயக்கியுள்ள படம் 'பரோஸ்'. 3டியில் இப்படம் ரிலீசாகிறது. மோகன்லால் கூறுகையில்"இப்படம்தான்நான்இயக்கும்முதலும்கடைசியுமானதிரைப்படம். இந்தபடத்தை 3டிகண்ணாடி.அணியாமலேயேபார்க்கும்வகையில்உருவாக்கியுள்ளோம். இதில் இருவர் தான் இந்தியர்கள்; வெளிநாடுகளை சேர்ந்தவர்களே நடித்துள்ளனர்" என்றார்.

Dec 25, 2024

முகேன்ராவின் மலேசியாவில் உருவான 'ஜின்'' என்றால் பேய் அல்ல. அது அமானுஷ்ய சக்தியின் இன்னொரு வடிவம்.

வழக்கமான பேய் படங்களை பார்ப்பவர்களுக்கு இது வித்யாசமான அனுபவத்தை தரும் ,டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பவ்யா திரிகா உள் ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஜின்'. இயக்குனர் கூறுகையில் 'ஜின்' என்றால் பேய் அல்ல. அது அமானுஷ்ய சக்தியின் இன்னொரு வடிவம். நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும்.. மலேசியாவை கதைக்களமாக வைத்து படம் 8 மாத உழைப்பில் 'ஜின்' கதாபாத்திரம் உருவாக் கப்பட்டுள்ளது. 

Dec 18, 2024

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 12 நடிகைகள்

ராஷ்மிகா-   8 கோடிஐஸ்வர்யா ராய்  - 10 கோடி அனுஷ்கா சர்மா - 12 கோடி நயன்தாரா - 12 கோடி வித்யா பாலன் - 14 கோடி ஸ்ரத்தா கபூர் - 15 கோடி த்ரிஷா - 15 கோடி கரீனா கபூர் - 18 கோடி கத்ரினா கைப் - 22 கோடி ப்ரியங்கா சோப்ரா - 24 கோடி அலியா பட் - 20 கோடி தீபிகா படுகோன் - 30 கோடி சம்பளம் 

Dec 18, 2024

தமிழில் அறிமுகமாகும் மாடல் அழகி

மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும் மோனிஷா சென் தமிழில் புதிய படம் ஒன்றில் நாயகியாக அறிமுகமாகிறார்.இவர் கூறுகையில், “இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமா இன்று அசைக்க முடியாத உயரிய இடத்தில் உள்ளது. இப்போது நானும் தென்னிந்திய சினிமாவில் அடி யெடுத்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். இது எனக்கான நேரம். படம் பற்றி தயாரிப்பு நிறுவனமே முறைப்படி அறிவிக்கும்" என்றார்.

Dec 18, 2024

கீர்த்தி சுரேஷ் காதலரை கரம்பிடித்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நீண்டகாலமாக தனது பள்ளி காலம் முதல் நண்பராக இருந்து வரும் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்தார். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் கோவாவில் திருமணம், ஹிந்து முறைப்படிநடைபெற்றது. 

Dec 18, 2024

நயன்தாரா, த்ரிஷாவுக்கு, 'ஷாக்' கொடுக்கும், மஞ்சுவாரியர்

மலையாள  சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும். மஞ்சுவாரியர் தமிழில், தனுஷ், அஜித் மற்றும் ரஜினி என. முன்னணி, 'ஹீரோ'களின்படங்களில்அடுத்தடுத்துநடித்தார்; தற்போது, விஜய்சேதுபதியுடன், விடுதலை 2 படத்தில்நடித்துவருகிறார்.இதையடுத்து, மஞ்சுவாரியரை கதையின் நாயகியாகவைத்து, படம் இயக்கினால் அந்த படத்தை மலையாளசினிமாவிலும் பெரிய அளவில் வியாபாரம் செய்யலாம் என்பதால், ஏற்கனவே, நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகளிடம் கதை சொல்லி இருக்கும் சில இயக்குனர்கள் தற்போது, மஞ்சுவாரியர் பக்கம் திரும்பி இருக்கின்றனர். இதனால், மேற்படி, இரு நடிகையரும், இந்த நடிகை தங்களது மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்து விடுவார் போலிருக்கே என, பலத்தஅதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 2 ... 64 65 66 67 68 69 70 ... 90 91

AD's



More News