25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெள்ளித்திரை

Oct 29, 2024

தீபாவளி ரிலீஸ் படங்கள்

தீபாவளி ரிலீஸ் படங்கள்சிவகார்த்திகேயனின் - அமரன், ஜெயம் ரவியின் - பிரதர், கவினின் - ப்ளடி பெக்கர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்,ஆகிய படங்கள் நாளை 31-ம் திே தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. அஜீத்தின் விடா முயற்சி டிரெய்லர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.

Oct 24, 2024

கிடைக்கிற கேப்பில் படங்களை வெளியிடும் சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள்

கிடைக்கிற கேப்பில் படங்களை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள். இன்று அக். 25ல் "ஆங்காரம், தீபாவளி போனஸ், கண் பேசும் வார்த்தைகள், காட்டேணி, ல்தகா சைஆ, லூஸி, ஒற்றைப் பனை மரம், சேவகர், சீன் நம்பர் 52" ஆகிய 9 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

Oct 23, 2024

பான் இந்தியா படமாக உருவாகும் 'நாகபந்தம்'

தெலுங்கில் அபிஷேக் நாமா இயக்கத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகும் படம் 'நாகபந்தம்'. இதை பான் இந்தியா பட மாக வெளியிடும் நோக்கில் உருவாக் குகின்றனர். இதன் படப்பிடிப்பை நடிகர் சிரஞ்சீவி துவக்கி வைத் தார். "இதன் கதை இந்தியாவில் உள்ள  108 விஷ்ணு கோயில்களுடன் தொடர்புடைய  நாகபந்தத்தைச்சுற்றி நடக்கும். மந்திரம், மர்மம் மற்றும் சாகசங்கள் அடங்கிய புதிய சாம்ராஜ்யத் திற்கு இந்த படம் அழைத்துச் செல்லும்" என்கிறார் அபிஷேக் நாமா.

Oct 23, 2024

ஜெயம் ரவி டைரக்ட் செய்யும் முதல் படம்

நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தை விட்டு தனியாக பிரிந்து சென்ற பின் தன து தொழிலில் அதிக கவனம் எடுத்து வருகிறார் அந்த வகையில் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அதோடு ஒரு படத்தை டைரக்ட் செய்யவும் செய்கிறார் இந்த படத்தின் கதாநாயகனாக யோகிபாபு நடிக்க இருக்கிறார்.

Oct 23, 2024

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் பிள்ளைகளை வளர்க்கும் சூரி

“என் பிள்ளைகளுக்கு சொல்லும் அறிவுரை" நீயும் உங்க அம்மாவும் காஸ்ட்லியா துணி எடுக்க போற கடைக்கு வெளியே தான் நான் வேல செஞ்சிட்டு,சாப்பிட்டு இருந்தேன்". "நான் மேல. நீங்க கிழனு என் குழந்தைங்க மனசுல ஒரு துளி கூட எண்ணம் வந்துடக்கூடாது'கிழனு நினைக்கும் போது, உங்க அப்பா கிழ இருந்து தான் வந்தார்னு நினைச்சுக்கோங்க"

Oct 23, 2024

13 வயதில்  ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்  கதீஜா 3 மொழிகளில் பாடிய எந்திரன் பாடல்.

எந்திரன் படத்தில் "புதிய மனிதா பூமிக்கு வா பாடலில் வரும் மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய், உனது ஆற்றலால் உலகை மாற்றுஎந்த,எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு,  நிலையிலும் உண்மையாயிரு வரிகள் தனது 13 வயதில் மூன்று மொழிகளில் பாடியது ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் தான் - 

Oct 23, 2024

மூச்சு விடமால்  வேகமாக பாடிய அனிருத்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிர தீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம் பெனி' சுருக்க மாக 'எல்.ஐ.கே என குறிப்பிடுகின்றனர். அனி ருத் இசையமைக்கும் இந்த படத்திலிருந்து 'தீமா' எனும் முதல் பாடலை வெளியிட் டுள்ளனர். விக்னேஷ் சிவன் பாடலை எழுத அனிருத்தே பாடி உள்ளார். முதல் முயற்சி யாக மூச்சு விடாமல் வேகமாக பாடியுள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

Oct 23, 2024

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வேட்டையன்.

ரஜினியின் 170வது படமான இதை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் ஏற்கனவே மனசிலாயோ, ஹண்டர் வண்டார் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன.வேட்டையன் படத்தின் முதல் 20 நிமிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரின் மாஸ் மொமண்ட்ஸையும் கொண்டாடும்படி உள்ளது.. மொத்தத்தில் வேட்டையன் மாஸ் பிளஸ் கிளாஸ் நிறைந்த மெசேஜ் உள்ள படம். முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி Above average என பதிவிட்டு உள்ளார்.வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தின் கதையை முதலில் சூர்யாவுக்கு தான் சொல்லி இருந்தாராம் இயக்குனர் ஞானவேல், ஆனால் இது ரஜினிகாந்துக்கு பொருத்தமாக இருக்கும் என சூர்யா சொன்னதை அடுத்து தான் சூப்பர்ஸ்டாரை வைத்து வேட்டையன் படத்தை எடுத்திருக்கிறார் ஞானவேல்.வேட்டையனுக்கு பிளாக்பஸ்டர் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜெயிலர் பட சாதனையை முறியடிக்குமானு தெரியல, ஆனா அத விட ரொம்ப நல்ல படம். ஞானவேல் எங்க ஜெயிக்குறார்னா ரசிகர்களுக்கு மாஸ் மொமண்ட்ஸ படம் பூரா உறுத்தல் இல்லாம தெளிச்சு வெச்சுருக்காரு. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத படம்..

Oct 16, 2024

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் 'கொம்பு சீவி'

பொன்ராம் இயக்கத்தில்நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில்“ கொம்பு சீவி “படத்தை இயக்கினார். சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கொம்பு சீவி என தலைப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கதை 1996ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வைகை அணை பகுதியில் நடந்தது .

Oct 16, 2024

ரூ.500 கோடி வசூலைக் கடந்த 'தேவரா'

 கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜூனியர் என்டிஆர், சைப் அலிகான், ஜான்வி கபூர் நடிப்பில் செப்., 27ல் வெளியான படம்'தேவரா'.16 நாட்கள் முடிவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூனியர் என்டிஆர் தனி நாயகனாக நடித்த படம் ஒன்று ,500 கோடி வசூலை கடப்பது இதுவே முதல் முறை.

1 2 ... 66 67 68 69 70 71 72 ... 86 87

AD's



More News