25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


 ஹரி - விஷால்  கூட்டணியில் “ரத்னம் “திரைப்படம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 ஹரி - விஷால்  கூட்டணியில் “ரத்னம் “திரைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் ரத்னம். கமர்ஷியல் கிங் என தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார்.இதுவரை ஹரி- விஷால் கூட்டணியில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்கள் வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே வரவேற்பை ரத்னம் படம் பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், ரத்னம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் வெளிவந்த முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளது . 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News