25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


விளையாட்டு (SPORTS)

Jan 02, 2025

தேசிய வாள்சண்டை போட்டி சாம்பியன்ஷிப்பில் பவானி தேவி தங்கம் வென்றார்.

 கேரள மாநிலம் கண்ணுாரில், தேசிய வாள்சண்டை போட்டி சாம்பியன்ஷிப் 35வதுசீசன்நடக்கிறது.பெண்களுக்கான 'சாப்ரே' பிரிவு பைனலில் தமிழகத்தின் பவானி தேவி, கேரளாவின் சன்னி அல்கா மோதினர். அபாரமாக ஆடிய பவானி 15-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பவானி தேவி தேசிய சாம்பியன்ஷிப் அரங்கில் வென்ற 12வது தங்கப்பதக்கம். ஆண்களுக்கான 'போயில்' பிரிவில் பிபிஷ், ஆண்களுக்கான 'சாப்ரே' பிரிவில் கிஷோநிதி ,தலா ஒரு தங்கம் வென்றனர். இத்தொடரில் மூன்று தங்கம் வென்ற தமிழகம், தனிநபர் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Jan 01, 2025

உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை வைஷாலி.

 அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக 'ரேபிட் அண்ட் பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது.பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, இரண்டாவது முறையாக (2019, 2024) சாம்பியன் ஆனார்.அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகமாக நகர்த்துதல்) முறையில் போட்டி நடந்தது. 108 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் வைஷாலி (தமிழகம்). 9.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, 'நாக் அவுட்' முறையிலான காலிறுதிக்கு முன்னேறினார்.முதல் போட்டியில் 'டிரா' செய்த வைஷாலி, அடுத்த இரு போட்டியில் சறுக்கினார். இதையடுத்து 0.5-2.5 என தோல்வியடைந்து, வெண் கலப்பதக்கம் பெற்றார்.  "கடந்த 2021 முதல் இந்திய செஸ் நட்சத்திரங்கள் உலக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உலக 'ரேபிட்' தொடரில் ஹம்பி சாம்பியன் ஆனார். 'பிளிட்ஸ்' தகுதிச்சுற்றில் வைஷாலி சிறப்பாக செயல்பட்டார். அடுத்து வெண்கலம் வென்றது மகிழ்ச்சி,'' என சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத் தலைவர், இந்தியாவின் ஆனந்த்  கூறினார்.

Jan 01, 2025

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற பெங்கால் அணி

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியாலீக்6வது சீசன்நடக் கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்கால், கோனாசிகா (விசாகப்பட் டினம்) அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டி யில் ஐதராபாத் அணியை வீழ்த்திய பெங்கால் அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.

Dec 31, 2024

இந்திய வீராங்கனை வைஷாலி  உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில், உலக 'ரேபிட் அண்ட் பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான உலக 'ரேபிட்' பிரிவில் இந்தியா வின் கொனேரு ஹம்பி, இரண்டாவது முறையாக ப (2019, 2024) சாம்பியன் ஆனார். அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகமாக நகர்த்து தல்) முறையில் போட்டி நடந்தது. இதில் மொத்தம் 108 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் 11வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி (தமிழ கம்), அமெரிக்காவின் காரிஸ்சா மோதிய போட்டி 'டிரா' ஆனது.இதையடுத்து 11 சுற்றில் 8 வெற்றி, 3 'டிரா' செய்த வைஷாலி, மொத்தம் 9.5 புள்ளி பெற்று,முதலிடம் பிடித்தார்.

Dec 31, 2024

துப்பாக்கி சுடுதல்

தேசிய துப்பாக்கி சுடுதல் போபாலில் நடக்கும், 10மீ.,ஏர் ரைபிள் பிரிவில் மகாராஷ்டிராவின் அனன்யா நாயுடு, தங்கம் வென்றார். தமிழகத்தின் நர்மதா நிதின், வெண்கலம் பெற்றார்.

Dec 03, 2024

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய அணியினர்

மஸ்கட்டில் பெண்களுக்கான ஜூனியர் ஆசிய ஹாக்கி (டிச. 7-15) நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, நடப்பு சாம்பியனான இந்திய அணியினர், பெங்களூருவில் இருந்து புறப்பட்டனர். 

Dec 03, 2024

ஆசிய ஹேண்ட்பால் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது

இந்தியாவில் பெண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 20வது சீசன் நேற்று துவங்கியது. இந்தியா, ‘நடப்பு சாம்பியன்' தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. பிரிவிலும் ஒவ்வொரு  பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதன் முதல் பாதியில் இந்திய அணி 16-10 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் ஹாங்காங் அணி ஆதிக்கம் செலுத்த,முடிவில் இந்திய அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

1 2 ... 98 99 100 101 102 103 104 105 106 107

AD's



More News