25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை வைஷாலி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை வைஷாலி.

 அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக 'ரேபிட் அண்ட் பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது.பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, இரண்டாவது முறையாக (2019, 2024) சாம்பியன் ஆனார்.அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகமாக நகர்த்துதல்) முறையில் போட்டி நடந்தது. 108 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் வைஷாலி (தமிழகம்). 9.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, 'நாக் அவுட்' முறையிலான காலிறுதிக்கு முன்னேறினார்.முதல் போட்டியில் 'டிரா' செய்த வைஷாலி, அடுத்த இரு போட்டியில் சறுக்கினார். இதையடுத்து 0.5-2.5 என தோல்வியடைந்து, வெண் கலப்பதக்கம் பெற்றார்.  

"கடந்த 2021 முதல் இந்திய செஸ் நட்சத்திரங்கள் உலக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உலக 'ரேபிட்' தொடரில் ஹம்பி சாம்பியன் ஆனார். 'பிளிட்ஸ்' தகுதிச்சுற்றில் வைஷாலி சிறப்பாக செயல்பட்டார். அடுத்து வெண்கலம் வென்றது மகிழ்ச்சி,'' என சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத் தலைவர், இந்தியாவின் ஆனந்த்  கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News