மதுரை, சென்னையில் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை நடைபெற உள்ள போட்டிக்கான சின்னமாககாங்கேயன் காளையை தமிழக அரசு தேர்வு செய்தது. இதற்கு அலங்காநல்லூர் ஹாக்கிக்கு ஜல்லிக்கட்டு -. வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் காளை சின்னத்துடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீதி உலா வந்த னர்.
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி ஆண்களுக்கான போட்டிகள், தமிழகத் தில் சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந் தேதி தொடங்கி டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கஇருக்கிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டிகளுக்காக புதிதாக ஹாக்கி மைதானம், வீரர்கள், முக்கிய பிரமுகர்கள், பார்வையாளர்கள் அமரும் இடம் என அனைத்தும் தீவிரமாக அமைக்கப்பட்டு பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.வெளிநாட்டு வீரர்கள் முன்னதாக வந்து பயிற்சி மேற்கொள்ள இரு ப்பதால், ரேஸ்கோர்ஸ் மைதானத்தை சுற்றிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார், மைதானத்தின் உள் வளாக பகுதிகளில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், மோப்ப நாய் உதவியுடன்மைதானத்தை சுற்றிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன் ஜப்பான்தலைநகர் டோக்கியோவில், இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் அபினவ் தேஷ்வல், பிரஞ்சலிபிரஷாந்த் துமால் ஜோடி துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் 569.20 புள்ளி களுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு இந்திய ஜோடி அனுயா பிரசாத், வினோத் குமார் ஜோடி (553.10 புள்ளி) 7வது இடம் பிடித்தது.பைனலில் அபினவ், பிரஞ்சலி ஜோடி 16-6 என்ற கணக்கில் சீனதைபேயின் யா-ஜு காவோ, மிங்-ஜூய் ஹசு ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றனர்.இந்தியாவின் குஷாக்ரா சிங் ரஜாவத் ஆண்களுக்கான 50 மீ.. ரைபிள் புரோன்' பிரிவு தகுதிச் சுற்றில், 608.7 புள்ளிகளுடன் 7 வது இடம் பிடித்து பைனலுக்குள்நுழைந்தார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய குஷாக்ரா 224.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.
உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ் கிரேட்டர் நொய்டா வில் (உ.பி.,),. பெண்களுக்கான 57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம் போரியா 24, கஜகஸ்தானின் உல்சான் சர் சென்பெக் மோதினர். இதில் ஜெய்ஸ்மின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.இந்தியாவின் நிகாத் ஜரீன் (51 கிலோ) மற்றொரு அரையிறுதியில் 5-0 என கனிவா குல்சேவரை வென்றனர்.இந்தியாவின் ஜது மணிசிங்ஆண்களுக்கான 50 கிலோ பிரிவு அரையிறுதியில் 5-0 என, ஆஸ்திரேலியாவின் ஓமர் இசாசை வீழ்த்தினார். இந்தியாவின் பவான் பாத்வால்மற்றொரு அரையிறுதியில் (55 கிலோ)5-0 என இங்கிலாந்தின் எல்லிஸ் டிரோபிரிட்ஜை தோற்கடித்தார். அரையிறுதியில் இந்தியாவின் சச்சின் சிவாச் (60 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ) வெற்றி பெற்றனர்.அரையிறுதியில் தோல்வியடைந்த இந் தியாவின் ஜகளோ (55 கிலோ), நீரஜ் போகத் (65 கிலோ), சுமித் (75 கிலோ) அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் பெற்றனர்.
உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில், மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர்.இந்தியா சார்பில் அர்ஜூன் எரிகைசி 22, மட்டும் காலிறுதியில் பங்கேற்கிறார். இதில் அர்ஜுன், சீனாவின் வெய் இ இருவரும் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது.அர்ஜுன்,நேற்று இரண்டாவது போட்டியில் ,32 நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஸ்கோர் 1.0-1.0 சமனில் உள்ளது. ரஷ்யாவின் ஆன்ட்ரே -அமெரிக்காவின் ஷாக்லாந்து, உஸ் பெகிஸ்தானின் சிந்தரோவ்- மெக்சிகோவின் மார்டினஸ் இடையிலான காலிறுதியின் இரண்டாவது போட்டிகள் 'டிரா' ஆகின.இன்று வெற்றியாளரை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடக்கிறது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி, உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர்.
காது கேளாதோருக்கான 'டெப் லிம்பிக்ஸ்' 25வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், நடக்கிறது. இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் பங்கேற்கின்றனர். 10 மீ., 'ஏர் ரைபிள்' துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணி,தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் 23, மஹித் சாந்து 21, ஜோடி, தென் கொரி யாவின் ஜியான் டெய்ன்,கிம்ஊரிம் ஜோடியை சந்தித்தது.துவக்கத்தில் முன்னிலை 4-0 என பெற்ற இந்திய ஜோடி, முடிவில் 17-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. தனுஷ் டோக்கியோ 'டெப்லிம் பிக்சில்' வென்ற இரண்டாவது தங்கம். முன்னதாக இவர், தனிநபர் 10 மீ., ‘ஏர் ரைபிள்' பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தவிர - பெண்களுக்கான தனிநபர் பிரிவில் வெள்ளி வென்ற மஹித் சாந்துவுக்கு இது முதல் தங்கம் ஆனது.வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 10 மீ., 'ஏர் ரைபிள்' கலப்பு அணிகள் இந்தியாவின் முர்டசா வானியா, கோமல் மிலிந்த் ஜோடி, 16-12 என உக்ரைனின் லைகோவா, ஒலெக்சாண்டர் ஜோடியை வீழ்த்தியது.இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்றுள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் (உ பி,) உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ், பெண்களுக்கான 48கிலோ ,பிரிவு அரையிறுதியில், உலக சாம்பியன்,இந்தியாவின் மீனாக்ஷி 24, தென் கொரியாவின் பாக் சொரோங்கை 5-0 என வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார். இந்தியாவின் அருந்ததி (70 கிலோ)முன்னாள் யூத் உலக சாம்பியன் அரையிறுதியில் ஜெர்மனியின்லியோனியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். 60 கிலோ பிரிவுஅரையிறுதியில் இந்தியாவின் பர்வீன், உலக குத்துச்சண்டை கோப்பையில் வெள்ளிவென்ற போலந்தின் அனெட்டாவை 3-2 என வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார்.இந்திய வீரர் அன்குஷ் பங்கல், 80 கிலோ பிரிவு அரையிறுதியில் 5-0 என ஆஸ்திரேலியாவின் மர்லான் செவ்ஹானை வீழ்த்தினார். இந்தியாவின் நுாபுர் (80+), உக்ரைனின் மரியாவை, வென்றார். இந்தியாவின் அபினாஷ் (60), பிரீத்தி (54) தங்கள் பிரிவில் பைனலுக்கு முன்னேறினர். இதுவரை இந்திய நட்சத்திரங்கள் 7 பேர் (5 வீராங்கனைகள், 2 வீரர்) பைனலுக்கு முன்னேறினர். இந்தியாவின் ஸ்வீட்டி (70), அரையிறுதியில் கிரீன்ட்ரீயிடம் (ஆஸி.,) தோற்று, வெண்கலம் வென்றார்.
ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர்இத்தாலியின் டுரின் நகரில் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-2'. இத்தாலியின் ஜானிக் சின்னர், ‘நம்பர்-1' வீரர், ஸ்பெயினின் அல்காரஸ்,. இந்த ஆண்டில் இருவரும் ஆறாவது முறையாக நேருக்கு நேர் மோதினர்.முதல் செட்டை சின்னர் 7-6 என வசப்படுத்தினார். இரண்டாவது 5-5 செட் என இழுபறியாக இருந்தது. பின் சின்னர் 7-5 என கைப்பற்றி ,வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோப்பை தக்க வைத்துக் கொண்டார்.. இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு கிடைத்தது. அல்காரஸ் ரூ 24 கோடி பெற்றார்.
காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் ('டெப்லிம் பிக்ஸ்') 25வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் பங்கேற்கின்றனர்.பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் ,இந்தியா சார்பில் அனுயா, பிரஞ்ஜலி பங்கேற்றனர்.டெப்லிம்பிக் தகுதிச்சுற்றில் 572 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்த பிரஞ்ஜலி, புதிய உலக சாதனை படைத்தார். அனுயா 564 புள்ளியுடன் மூன்றாவது இடம் பெற்றார். இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.இதில் அனுயா, 241.1 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். பிரஞ்ஜலிக்கு (236.8) வெள்ளி கிடைத்தது.'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில், ஆண்களுக்கான 10 மீ., 2022 டெப்லிம்பிக்கில் தங்கம் வென்ற, இந்தியாவின் அபினவ் தேஷ்வல், உலக சாதனையை 576 புள்ளி) சமன் செய்து, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் 235.2 புள்ளி மட்டும் எடுத்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.அனுயா பிரசாத் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியா இதுவரை இந்தப் போட்டிகளில் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
சவுதி அரேபியாவில் ,ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் நடக்க உள்ளது. இதற்கான 3வது கட்ட தகுதிச் சுற்றில் இந்தியா, ஆசிய கோப்பை வாய்ப்பை இழந்தது. இன்று தாகாவில் நடக்கும் தனது கடைசி போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு சிட்னியில் நடக்கும் சாலஞ்சர் கோப்பை முதல் சுற்றில் இந்தியாவின் கரண் சிங் 7-6, 6-3 என்ற நேர்செட்டில் சக வீரர் ஆர்யன் ஷாவை வென்றார். இன்று சிட்னியில் ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர்,. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஒற்றையர்பிரிவில் லக்சயா, பிரனாய் இதில் பங்கேற்கின்றனர்.உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் எகிப்தின் கெய்ரோவில் ,ஆண்களுக்கான 25 மீ. சென்டிரல் பயர் பிஸ்டல் பிரிவில்இந்தியாவின் குர்பிரீத் சிங், வெள்ளிப்பதக்கம் வென்றார். இத்தொடரில் 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் இந்தியா 13 பதக்கம் வென்று பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.