ஓபன் ஸ்குவாஷ் தொடர் அமெரிக்காவில், சிலிக்கான் வேலியில் ,முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங் 3-0 (12-10, 11-7, 13-11) என, எகிப்தின் கரீம் எம் ஹம்மாமியை வீழ்த்தினார். இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றொருமுதல் சுற்றுப் போட்டியில் 0-3 (3-11, 5-11, 9-11) என எகிப்தின் கரீம் எல்டோர்கியிடமும் , இந்திய வீரர் ரமித் டான்டன் 2-3 (10-12, 11-5, 11-4, 9-11, 8-11) ஹங்கேரியாவின் பாலாஸ் பர்காஸிடம் தோல்வியடைந்தனர்.
மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ,சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசனில் . 'நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, ஆஸ்திரேலியா உள் ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, நியூசிலாந்து அணிகள் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு அர்ஷ்தீப் சிங் (2வது நிமிடம்), சுனில் (15வது அராய்ஜீத் சிங் (26வது) தலா ஒரு கோல் அடித்து ,முதல் பாதி முடிவில் இந்திய அணி 3-0 என முன்னிலையில் இருந்தது.இந்தியாசார்பில் ரோமன் குமார் (47வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். ஆட்டநேரமுடிவில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று ,2வது வெற்றியை பதிவு செய்தது.
உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அசாமின்கவுகாத்தியில், (தனிநபர், இரட்டையர்) இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் உன்னதி ஹூடா, தன்வி சர்மா, ரக் ஷிதா ஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.டில்லி பாதி மாரத்தான் ஓட்டத்தில் இந்தியா சார்பில் அபிஷேக் பால் (1:04.17), 8 (1:11.23) முதலிடம் பிடித்தனர்.கென்யாவின் அலெக்ஸ் மடாடா (59.50 நிமிடம், ஆண்கள்), லிலியன் கசாய்ட் ரெங் கெருக் (1:07.20, பெண்கள்) சாம்பியன் பட்டம் வென்றனர்.உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப், 'ஸ்கீட்' பிரிவில்ஏதென்சில் இந்திய வீராங்கனை ரைசா தில்லான், 16வது இடம் பிடித்தார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பாவ்தேக் சிங் கில், 38வது இடம் பிடித்தார்.ஆசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் ஆமதாபாத்தில், பெண்களுக்கான வாட்டர் போலோ போட்டியில் 8வது இடம் பிடித்த இந்தியா, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்றது. ஆண்கள், பெண்கள் பிரிவில் சீனா தங்கம் வென்றது.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ,மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை உள்பட 13 இடங்களில் நடந்து வருகிறது.சென்னை வேளச்சேரியில் நடந்து வரும்தொடரின் 11-வது நாளான நீச்சல்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான 1,500 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் செங்கல்பட்டை சேர்ந்த கவீன்ராஜ் 16 நிமிடம் 54.97 வினாடிகளில் இலக்கைகடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். சென்னை வீரர் சாய் கணேஷ் வெள்ளிப்பதக்கமும், நெல்லை வீரர் லியோனர்ட் வெண்கலப்பதக்கமும் வென்றனர். 100 மீட்டர் பட்டர்பிளையில் ரோகித்பெனிடிக்சன் (செங்கல்பட்டு), 100 மீட் டர் பிரீஸ்டைல் ஜாஷூவா தாமஸ் (சென்னை) நிதிக் நாதெல்லா (செங்கல்பட்டு), 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக்கில் சுதேஷ் குமார் (செங்கல்பட்டு), ஆகியோர் இதன் 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் ,தங்கப்பதக்கத்தை வென்றனர்.
இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ் தான் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றுமுடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன்,'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி முதலில்இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். முடிவில் இந்தியா 48.5 ஓவர்களில் 330 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களுக்குமேல்எடுத்தமுதல்அணிஎன்றபெருமையைஇந்தியாபெற்றது. ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்து 3 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக 'பாரா பவர்லிப்டிங்' சாம்பியன்ஷிப் தொடர் எகிப்தில், ஜூனியர் ஆண்கள் 72 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் வினய் பங்கேற்றரர். முதலிரண்டு வாய்ப்புகளில் 137, 142 கிலோ தூக்கிய இவர், கடைசி வாய்ப் பில் 147 கிலோ தூக்கியது செல்லாது என நடுவர்கள் அறிவித்தனர். இருப்பினும் அதிகபட்சமாக 142 கிலோ துாக்கிய வினய், முதலிடத்தை உறுதி செய்து தங்கத்தை வென்றார்.
கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில், காலிறுதியில் தென் கொரியாவை வீழ்த்திய இந்தியா, முதன் முறையாக பதக்கத்தை உறுதி செய்தது ..இந்தியா, ‘நடப்பு சாம்பியன்' இந்தோனேஷியா அணிகள் நேற்று நடந்த அரையிறுதியில் மோதின. உன்னதி ஹூடா, பார்கவ் ராம், விஸ்வா தேஜ், விஷாகா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்திய அணி 0-2 (35-45, 21-45) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது.உலக ஜூனியர் பாட்மின்டனில், கலப்பு அணிகளுக்கான இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. தனிநபர் பிரிவு போட்டிகள் அக். 13 முதல் நடக்கவுள்ளன.
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் ,சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், உலக கன்டெண்டர் சீரிஸ் தொடர். 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கானஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜெனிபர் வர்கீஸ் ஆஸ்திரேலியாவின் கான்ஸ்டன்டினாவை சந்தித்தார். ஜெனிபர்,முதல் செட் 11-5 என, அடுத்த செட்டை 11-6 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் கடும் போராட்டத்துக்குப் பின் 13-15 என இழந்தார்.முடிவில் ஜெனிபர் 3-1 என்ற (11-5, 11-6, 13-15, 11-5) கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.இந்தியாவின் ஜெனிபர், சுதான்ஷர் ,19 வயது பிரிவு கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் 3-0 (14-12, 11-9, 12-10) செட்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னி வின், சியுக் டங் ஜோடியை வென்று, பைனலுக்குள் நுழைந்தனர்.
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 55, ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 62. முன்னாள் அமெரிக்காவில் உலக சாம்பியன்கள் மோதும் 'கிளச்' செஸ் தொடர் நடக்கிறது.கடைசியாக 1995ல் நடந்த உலக சாம்பியன் ஷிப்பில் இருவரும் மோதினர். தற்போது 30 ஆண்டுக்குப் பின் மீண்டும் இருவரும் மோதுகின்றனர். மொத்தம் 12 போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளில் 4 போட்டி நடந்தன.முதலில் நடந்த இரு போட்டி 'டிரா' ஆகின. மூன்றாவது போட்டி யில் ஆனந்த், துவக்கத்தில் முந்திய ஆனந்த், அடுத்தடுத்த செய்த தவறுகள் செய்ய, காஸ்பரோவ் ஆதிக்கம் செலுத்தினார். பின் மீண்டு வந்தார் ஆனந்த்.போட்டியின் 50 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இருவரும் மோதிய நான்காவது போட்டி 'டிரா' ஆனது. முதல் நாள் முடிவில் ஆனந்த் 1.5-2.5 என்ற கணக்கில் பின்தங்கினார்.
2027ல் ஆசிய கோப்பை கால் பந்து தொடர் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 134 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.இந்திய அணி மூன்றாவது போட்டியில், தரவரி சையில் 158 வது இடத்திலுள்ளசிங்கப்பூர் அணியை எதிர்கொண் டது. கோல் கீப்பர் குர்பி ரீத்சிங் கேப்டனாக கள மிறங்கினார். முதல் பாதி ஸ்டாப்பேஜ்' நேரத்தில் சிங்கப்பூர் வீரர் இக் ஷான் பன்டி, ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 0-1 என பின் தங்கியது.இரண்டாவது பாதி போட்டியின் கடைசி நிமிடத்தில் (90 வது) ரஹிம் அலி, கோல் அடித்து கைகொடுக்க, தோல்வியில் இருந்து தப்பியது இந்திய அணி. முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மீண் டும் அக். 14ல் கோவாவில் நடக்கும் போட்டியில் மோத உள்ளன.இதுவரை 3 போட்டியில் 2 டிரா, 1 தோல்வியுடன் இந்திய அணி, 2 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.