25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


விளையாட்டு (SPORTS)

Jan 29, 2025

உத்தரகாண்ட்டில் இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு நடக்கிறது

ஆண்களுக்கான 100 மீ., பட்டர்பிளை போட்டி நடந்தது. தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பெனெடிக்சன் ரோகித், 53.89 வினாடி நேரத்தில் வந்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 4X100   மீ., ரிலே போட்டியில் தமிழக அணி (3 நிமிடம், 29.92 வினாடி) வெள்ளி வென்றது. பெண்களுக் கான 4x100 மீ., ரிலே போட்டியில் தமிழகம், வெண்கலம் கைப்பற்றியது. . 

Jan 29, 2025

விளையாட்டு போட்டிகள் jan 30th

கூடைப்பந்து பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் 125-67 என சத் தீஷ்கரை வென்றது. தமிழக ஆண்கள் அணி 76-69 என சர்வீசஸ் அணியை வீழ்த்தியது. துப்பாக்கி சுடுதல்,  துப்பாக்கிசுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச் சுற்றில் ஹரியானாவின் ரமிதா, 634.9 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். தமிழகத்தின் நர்மதா, மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆண்கள் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் பஞ்சாப் பின் விஜய்வீர் சித்து 587 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார்.    கிரிக்கெட் சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்த வீரர்களுக்கான தர வரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரி சையில் இந்தியாவின் திலக் வர்மா, 832 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 'நம்பர் -2' இடத்துக்கு முன்னேறினார். பவுலர்களுக்கான தரவரிசையில் தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி, 679 புள்ளிகளுடன் 25வது இடத்தில் இருந்து 'நம்பர்-5' இடத்துக்கு முன்னேறினார். ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (255) முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஹாக்கி ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழகம், உ.பி .. அணிகள் மோதின. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த பெங்கால் (19 புள்ளி), சூர்மா (19), ஐதராபாத் (18), தமி ழகம் (18) அணிகள் அரையிறுதிக்கு (ஜன.31) முன்னேறின. செஸ் நெதர்லாந்தில், சர்வ தேச செஸ் தொடரின் 87வது சீசனில் வெள்ளை நிற காய்களுடன் விளை யாடிய குகேஷ், 43வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் குகேஷ் பெற்ற 4வதுவெற்றி இது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரக்ஞா னந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியிடம் தோல்வியடைந்தார். இந்தியா வின் அர்ஜுன், சீனாவின் வெய் இ மோதிய போட்டி 'டிரா' ஆனது.ஒன்பது சுற்று முடிவில் இந்தியாவின் குகேஷ், 6.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.

Jan 28, 2025

19 வயதுக்குட்பட்ட தொடரில் முதல் சதம் அடித்த வீராங்கனை என சாதனை படைத்த திரிஷா

பெண்களுக்கான 'டி-20'உலக கோப்பை, 19 வயதுக்குட்பட்ட தொடரில் முதல் சதம் அடித்த வீராங்கனை என சாதனை படைத்தார் இந்தியாவின் திரிஷா (110 ரன்), இந்திய அணி 20 ஓவரில் 1விக்கெட்டுக்கு 208 ரன் குவித்ததுகோலாலம்பூரில் ஜன. 31ல் நடக்கும் முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

Jan 28, 2025

இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

இந்தியாவின் 38வதுதேசியவிளையாட்டுஉத்தரகாண்ட்டில்நேற்றுதுவங்கியது.டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்டுவானி, ருத்ரபூர், ஷிவ்பூரி, நியூ டெஹ்ரி உள்ளிட்ட 11 இடங்களில், 18 நாள் நடக்கும். 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.நீச்சல், துப்பாக்கிசுடு தல், மல்யுத்தம், பாட் மின்டன், ஹாக்கி, குத்துச் சண்டை, பளுதுாக்குதல் கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உட்பட 32 விளையாட்டுகளில் போட்டிகள் நடக்கின்றன.நேற்று இதற்கான துவக்கவிழா,அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதமர் மோடி மைதானத்தை வலம் வந்தார். மேடையில் இவருக்கு பாரம்பரிய தொப்பி, சால்வை உள்ளிட்ட நினைவு பொருள் வழங்கப்பட்டன. டேராடூனில் உள்ள ராஜிவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தேசிய விளையாட்டு துவக்கவிழா நடந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல், மொத் தம் 25,000 பேர் திரண்டு கண்டுகளித்தனர். தேசிய விளையாட்டினை ரூ. 350 கோடி செலவில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு புதிய கட்டுமான பணிகள் செய்யப்பட்டதால், ரூ.1000 கோடி வரை செலவாகியுள்ளது. உத்தரகாண்ட் தேசிய விளையாட்டில் மொத்தம் 450 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளன. இதேபோல தலா 450 வெள்ளி, வெண்கலப் பதக்கமும் வழங்கப்படும். 

Jan 28, 2025

தெற்காசிய பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்ட) கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி.

தெற்காசிய பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்ட) கால்பந்து சாம்பியன்ஷிப் வரும் ஜூலை 1-11-ல் வங்கதேசத்தில் நடக்க உள்ளது.2026ல் பெண்களுக்கான ஏ.எப்.சி., ஆசிய கோப்பை தகுதிச்சுற்றுக்கு ,தயாராகும் வகையில் இந்திய பெண்கள் அணி பல்வேறு தொடர்களில் பங்கேற்கிறது. இதன் ஒரு பகுதியாக, துருக்கி சென்று மூன்று போட்டிகளில் நட்பு போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்திய அணி பெங்களூரு பயிற்சி முகாமில் இருந்து  ,அடுத்த மாதம் துருக்கி (அன் டல்யா) செல்கிறது. இங்கு பிப். 19ல் ஜோர்டானை சந்திக்கும். அடுத்து பிப். 22ல் ஹாங்காங், பிப். 25ல் ரஷ்யாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

Jan 27, 2025

'டி-20' மூன்றாவது போட்டி இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடக்கிறது.

இந்தியா விளையாடிய 5  'டி-20' போட்டியில் 4 வென்றது 1, தோல்வி). இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டா (7 விக்.,), சென்னையில் (2 விக்.,) நடந்த போட்டியில் வென்ற இந்திய அணி, 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடக்கிறது.   

Jan 27, 2025

தேசிய மினி ரோல் பால் போட்டியில் கோவை மாணவர்கள் அணி வெண்கலம்  கைப்பற்றியது.

அசாமின் கவுகாத்தியில், 11 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான தேசிய 'மினி ரோல் பால்' சாம்பியன்ஷிப் 14வது சீசன் நடந்தது. சிறுவர்களுக்கான லீக் சுற்றில் முதலிடம் பிடித்த தமிழக அணி, அரையிறுதியில் 2-7 என அசாமிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.சிறுமிகளுக்கான லீக் சுற்றில் முதலிடம் பிடித்த தமிழக அணி, அரையிறுதியில் 3-5 என ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது .

Jan 27, 2025

உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டு திருவிழா இன்று துவக்கம்.

இந்தியாவின் 38வதுதேசியவிளையாட்டுஉத்தரகாண்ட்டில்இன்றுமுறைப்படிதுவங்குகிறது.டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்டுவானி, ருத்ரபூர், ஷிவ்பூரி,நியூ டெஹ்ரி என 7 இடங்களில், 18 நாள் நடக்கும். 38 அணி களில் இருந்து 10,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர்.ஒலிம்பிக்கில்இடம்பெறும்தடகளம், நீச்சல், துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம், பாட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல் கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.தவிர பாரம்பரிய கபடி, கோ கோ இடம் பெற்றுள்ளன. களரி, யோகாசனம் உட்பட 4 விளையாட்டுகள் கண்காட்சி போட்டியாக (பதக்கம் இல்லை) நடக்க உள்ளன.

Jan 27, 2025

ஐ.சி.சி.,விருது தேர்வுக்கு  பும்ரா, மந்தனா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக், இலங்கையின் கமிந்து மெண்டிஸ் பரிந்துரைக்கப்பட்டனர்.இதில்சிறந்தடெஸ்ட்வீரராகபும்ரா 31,தேர்வானார். 

Jan 26, 2025

ஒடிசா ஹாக்கி அணி  கோப்பை வென்றது.

ராஞ்சியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் பைனலில் சூர்மா ஹாக்கி கிளப் (பஞ்சாப், ஹரி யானா), ஒடிசா வாரியர்ஸ் அணிகள் மோதின. ஒடிசா அணியின் ருதுஜா(20வது நிமிடம்), ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதற்கு சூர்மா அணிக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் பென்னி ஸ்குவிப்(28) ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார்.ஒடிசா அணிக்கு ருதுஜா(56) மீண்டும் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது. 

1 2 ... 98 99 100 101 102 103 104 105 106 107

AD's



More News