25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Mar 25, 2025

25th MARCH GUJARAT  - PUNJAB

25-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத், பஞ்சாப், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 243/5 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 232/5, ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SHREYAS IYER தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Mar 25, 2025

ஆசிய கோப்பை கால்பந்து தொடர் முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று நேற்றுதுவங்கியது. 24 அணிகள், ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும்.புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசியகோப்பை தொடருக்கு தகுதி பெறும்.உலகத் தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று ஷில்லாங்கில் (மேகாலயா) நடந்த முதல் போட்டியில், 185 வது இடத்திலுள்ள வங்கதேசத்தை எதிர்கொண்டது.  முதல் பாதி கோல் எதுவுமின்றி சமனில் முடித்தது. இரண்டாவது பாதி   முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி டிரா ஆனது. 

Mar 25, 2025

ஏழு ஆண்டுக்குப் பின் சர்வதேச 'இந்தியன் ஓபன்” ஸ்குவாஷ்

 சர்வதேச 'இந்தியன் ஓபன் ஸ்குவாஷ்  இந்தியாவில் ஏழு ஆண்டுக்குப் பின் மும்பையில்.பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் ' நம்பர் -3' வீராங்கனை இந்தியாவின் அனாஹத் சிங், ஸ்பெயினின் கிறிஸ்டினாகோமசை சந்தித்தார். இதில் அனா ஹத் சிங் 3-1(11-5, 9-11, 11-5, 11-2) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் ஜோஷ்னா 3-0 என (11– 1, 11 7, 11-8) போர்ச்சு கலில் சோபியாவை வீழ்த்தினார். இத்தொட ரின் 'நம்பர்-1' சக வீராங்கனை ஆகான்ஷா, 3-1 என (6-11, 11-8, 11-7, 11-4) தான்வியை சாய்த்து. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அபே சிங், 3-0 என (11-5, 11-8, 11-7) பிரான்சின் மெல்வினை வென்றனர்.

Mar 25, 2025

('பிடே') சார்பில்  சர்வதேச செஸ் கூட்டமைப்பு ரூ.8 லட்சம் பரிசு பெற்ற இந்தியாவின் ஹரிகா .

. ('பிடே') சார்பில்  சர்வதேச செஸ் கூட்டமைப்பு பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரீ' தொடர் நடத்தப்படுகிறது. இதன் 4வது சுற்று சைப்ரசில் நடந்தது. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்றனர்.9வது, கடைசி  சுற்றில் ஹரிகா, உக்ரைனின் அனா முசிசுக். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, போட்டியின் 40 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். இந்தியாவின் திவ்யா, ஜெர்மனியின் -எலிசபெத் மோதிய மற் றொரு போட்டியும் 'டிரா' ஆனது. ஒன்பது சுற்றுகளின் முடிவில் இந்தியாவின்ஹரிகா, 5.0 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கல பதக்கம் கைப்பற்றினார். இவருக்கு ரூ.8 லட்சம் பரிசு கிடைத்தது. 

Mar 24, 2025

IPL கிரிக்கெட் 24-ம் தேதிபோட்டி DELHI - LUCKNOW

IPL கிரிக்கெட்MARCH24ம்தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றபோட்டியில் டெல்லி, லக்னோ, அணிமோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி209/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம்இறங்கிய டெல்லி அணி211/9, ரன்கள் எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக AUSHUTOSH SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Mar 24, 2025

விளையாட்டு போட்டிகள்  25TH MARCH

செஸ் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரீ தொடர் நடக்கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.இதன் 8வது சுற்றில் திவ்யா, ஆஸ்திரியாவின் படெல்கா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 71வது நகர்த்தலில் முதல் வெற்றியை பதிவு செய்தார். மற்றொரு போட்டியில் ஹரிகா (கருப்பு), ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோரியாச்சினா (வெள்ளை) மோதினர். இப்போட்டி 37வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.எட்டு சுற்றுகளின் முடிவில் ஹரிகா (4.5 புள்ளி), திவ்யா (3.5) முறையே 3, 7வது இடத்தில் உள்ளனர். மல்யுத்தம் ஆசிய மல்யுத்த 'சீனியர்' சாம்பியன்ஷிப் இன்று ஜோர்டானில் துவங்குகிறது. கிரிகோ ரோமன் பிரிவில் 10, 'பிரீஸ்டைல்' பிரிவில் 20 (10 ஆண் +10 பெண்) என இந்தியா சார்பில் மொத்தம் 30 பேர் களமிறங்குகின்றனர்.இதில் 20 வயதுக்குட் பட்டோருக்கான சாம்பியன்ஷிப்பில் உலக 2 முறை தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அன்டிம் பங்கல், சாதிக்க உள்ளார்.23வயது பிரிவின் உலக சாம்பியன் ரீத்திகா ஹூடா (76 கிலோ), 17 வயது பிரிவு உலக  சாம்பியன் மான்சி லாதெர் (68 கிலோ), மணிஷா (62 கிலோ) உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது.ஆண்கள் பிரிவில் தீபக் புனியா, 'சீனியர்' அரங்கில் பதக்கம் வெல்ல காத்திருக்கிறார். கிரிக்கெட் சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி, மும்பையை வீழ்த்தியது. தொடரை வெற்றியுடன் துவக்கிய மகிழ்ச்சியில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டநிலையில், பிரிமியர் போட்டியில் மட்டும் பங்கேற்கிறேன். ஒவ் வொருமுறைகளமிறங்கும் போது, நான் சிறப்பாக விளையாட வேண்டுமென ரசிகர்கள் விரும்புவது ஒரு அற்புதமான உணர்வு. இன்னும் சில  காலம் விளையாடலாம். கால்பந்து ஆசிய கோப்பை கால் பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது.இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச் சுற்று இன்று துவங்குகிறது. 24 அணிகள், ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கும்.ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம் .

Mar 23, 2025

IPL கிரிக்கெட் விளையாட்டு போட்டி KOLKATTA - BENGALORE

IPL கிரிக்கெட் விளையாட்டுபோட்டி -22ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா, பெங்களுர் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 174/8 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பெங்களுர் அணி 177/3, ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KRUNAL PANDYA தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

Mar 23, 2025

IPL கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் MARCH 23-ம் தேதி வெற்றி பெற்றவர்கள்.

HYDERABAD - RAJASTHAN23ம் தேதி ஹதராபாத்தில் நடைபெற்ற ஹதராபாத், ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹதாராபாத் அணி 286/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 242/6, ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ISHAN KISHAN தேர்ந்தெடுக்கப்பட்டார்.CHENNAI - MUMBAI23ம் தேதி சென்னையில் நடைபெற்ற சென்னை மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அணி 155/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 158/6, ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக NOOR AHMAD தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Mar 23, 2025

விளையாட்டு போட்டிகள் 23 RD MARCH

மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டு வில்வித்தையில், ஷீத்தல் தேவி 'தங்கம்' வென்றார்.டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா' விளையாட்டு 2வது சீசன் நடக்கிறது.பெண்களுக்கான தனிநபர் 'காம்பவுண்ட்' பிரிவு பைனலில் ஜம்மு காஷ் மீரின் ஷீத்தல் தேவி 18, ஒடிசாவின் பாயல் நாக் 17, மோதினர்.ஷீத்தல் தேவி 109-103 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். 2023ல் நடந்த முதல் சீசனில் இவர், தங்கம் வென்றிருந்தார்.உலக கோப்பை செபக் தக்ரா இரட்டையரில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்றது.பீஹாரில், உலக கோப்பை செபக்தக்ரா 5வது சீசன் நடக்கிறது பெண்கள் இரட்டையர் பைன்லில் மியான்மர் மோதின. இந்தியா, அணிகள்இதில் ஏமாற்றிய இந்திய அணி 0-2 (9-  15, 9-15) என்ற கணக்கில்  தோல்வியடைந்தது. உலக கோப்பை பெண்கள் இரட்டையரில் முதன் முறையாக வெள்ளி வென்று இந்தியா வரலாறு படைத்தது .

Mar 21, 2025

ஐ.ஒ.சி.. புதிய தலைவர் கிறிஸ்டி கவன்ட்ரி

சர்வதேச ஒலிம்பிக் சங்க (ஐ.ஒ.சி.,) புதிய தலைவராக ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சர், ஒலிம்பிக் நீச்சலில் இரு முறை தங்கம் வென்ற முன்னாள் வீராங்கனை கிறிஸ்டி கவன்ட்ரி 41, தேர்வு செய்யப்பட்டார்.ஒலிம்பிக் தினமான ஜூன் 23 பொறுப்பேற்க உள்ள கிறிஸ்டி கவன்ட்ரி, 131 ஆண்டு IOC. வரலாற்றில் முதல் பெண் தலைவர், முதல் ஆப்ரிக்கர்  என்ற பெருமை பெற்றார். 2036ல் ஒலிம்பிக் போட்டி நடத்த இந்தியா முயற்சித்து வருவது குறித்து கிறிஸ்டி  கவன்ட்ரி ஒலிம்பிக் நடத்தும் நாடு குறித்த பேச்சுவார்த்தை விரைவுபடுத்தப்படும். இதற்கென உள்ள செயல் முறைகள், தற்போது நடந்து வருகின்றன.

1 2 ... 150 151 152 153 154 155 156 ... 171 172

AD's



More News