25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Apr 29, 2025

29TH APRIL IPL MATCH.  DELHI - KOLKATTA

 APRIL 28-ம் தேதி  டெல்லியில்,   கொல்கத்தா, டெல்லி அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  கொல்கத்தா அணி 204/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 190/9 ரன்கள்  தோல்வியடைந்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SUNIL NARINE தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

Apr 29, 2025

கிரிக்கெட் பெண்களுக்கான  முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்…..

 கிரிக்கெட்  பெண்களுக்கான  முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்…..பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.முதல் போட்டி யில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது. நேற்று தனது இரண்டாவது போட்டி யில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர் கொண்டது. 'டாஸ்' வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.   இந்திய அணி 50 ஓவரில் 276/6 ரன் எடுத்தது . 49.2 ஓவரில் 261 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி  தென் ஆப்ரிக்கா தோற்றது.ஸ்னே ராணா 5 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகி ஆனார். சுதிர்மன் கோப்பை பாட்மின்டன்சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் சீனாவில், இந்திய அணி 'டி' பிரிவில் இங்கிலாந்து, இந்தோனேஷியா, டென்மார்க் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதல் போட்டியில் இந்தியா 1-4 என டென் மார்க்கிடம் தோற்றது. இரண்டாவது போட்டி யில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில், இந்திய அணி, வலிமை யான இந்தோனேஷி யாவை சந்தித்தது. முதலில் நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோஜோடி, 10-21, 21-18, 21-19 சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் இந்தோனேஷியாவின் டாப்ட், மேக்லண்ட் ஜோடியை சாய்த்தது. இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் பிரியா, ஷ்ருதி ஜோடி 10-21, 9-21 என இந்தோனேஷி யாவின் மாயாசரி, ரதாந்தி ஜோடியிடம் தோற்று , 1-4 என்ற கணக்கில்காலிறுதி வாய்ப்பை இழந்தது

Apr 28, 2025

28TH APRIL IPL MATCH GUJARAT - RAJASTHAN

 APRIL 28-ம் தேதி  ஜெய்ப்பூரில்,  ராஜஸ்தான், குஜராத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  குஜராத் அணி 209/4 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 212/2  ரன்கள்  எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக VAIBHAV SURYAVANSHI (38 Ball 101 Run) தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Apr 28, 2025

ஐ.பி.எல் கிரிக்கெட் 14 வயது சூர்யவன்ஷி சதம்அடித்து சாதனை.

ஐ.பி.எல்.ல் குறைந்த வயதில்ஐ.பி.எல்.ல்அறிமுகம் ஆன வீரர் என்ற பெருமைக்குரிய பீகாரைச் சேர்ந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் நிர்வாகம் ரூ.1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தனது முதல் இரு ஆட்டங்களில் 34மற்றும் 16 ரன்கள் வீதம் எடுத்த சூர்யவன்ஷி 3 -வது ஆட்டத்திலேயே சதம்அடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.மொத்த ஸ்கோரில் 94ரன்களை பவுண்டரி, சிக்சர் மூலம் 35 பந்துகளில் சதத்தை எட்டிய சூர்யவன்ஷி எடுத்து விட்டார். ஒட்டு மொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரராக திகழ்கிறார். இதற்கு முன்பு 18 வயதுக்கு குறைந்த வீரர் யாரும் சதம் அடித்ததில்லை. 

Apr 28, 2025

28 TH APRIL விளையாட்டு போட்டிகள்

டேபிள் டென்னிஸ்  தெற்காசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப்நேபாள தலைநகர் காத்மாண்டுவில்,19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியா, நேபாளம் மோதின.பிரிதா, அனன்யா, ஹர்தீ படேல், தியா இடம் பெற்ற இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.பெண்கள் 15 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான பைனலில் பிரீத்தி பால், ஆருஷி நந்தி,ஆத்விகா அராவல், தன்மயி சஹா இடம் பெற்ற இந்திய அணி 3-0 என இலங்கையை வீழ்த்தி தங்கத்தை வென்றது. 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தனிநபர் பைனலில் இந்தியாவின் சோப்தா 3-1 வீரர் குஷால் என சக பாலமுருகனை வென்றார். 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தனிநபர் பைனலில் இந்தியாவின் அனன்யா 3-1 என பிரிதாவை  வீழ்த்தி தங்கம் வென்றார்.இரட்டையரில் (15, 19 வயது) ஆதிக்கம் செலுத்திய இந்திய நட்சத்திரங்கள் 6 தங்கத்தையும் தட்டிச் சென்றனர்.இந்தியாவுக்கு 13 தங்கம், 3 வெள்ளி என, மொத்தம் 16 பதக்கம் கிடைத்தது.  குத்து சண்டை 17, 15, வயதுக்குட்பட் டோருக்கானஆசியகுத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானில், நேற்று, 17 வயதுக்குட்பட்டோருக் கான அரையிறுதி போட்டிகள் நடந்தன.பெண்களுக்கான 46 கிலோ பிரிவு அரையிறுதி யில் இந்தியாவின் குஷி சந்த், உக்ரைனின் ஒலெக் சாண்ட்ரா செரெவாடா மோதினர். இதில் குஷி சந்த் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.  ஆசிய பேஸ்பால்: இந்தியா தகுதி பெண்களுக்கான ஆசிய கோப்பை பேஸ்பால் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, இலங்கை, ஈரான் அணிகளை வீழ்த்தி முதலிடம்பிடித்தது. அடுத்து நடந்த 'சூப்பர் ரவுண்டு சுற்றில் இந்தோ னேஷியாவிடம் வீழ்ந்தஇந்தியா, தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முடிவில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தோனேஷியா, இந்தியா அணிகள் பைனலுக்கு (ஏப். 29) முன்னேறின.இவ்விரு அணிகள், ஆசிய கோப்பை பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றன. இந்திய அணி, தொடர்ந்து 4வது முறையாக (2017, 2019, 2023, 2025) ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது.

Apr 27, 2025

27TH APRIL IPL MATCH.

27TH APRIL IPL MUMBAI - LUCKNOW TEAMAPRIL27ம் தேதி மும்பையில், லக்னோ, மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 215/7 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி 161/10 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக WILL JACKS தேர்ந்தெடுக்கப்பட்டார். APRIL 27ம் தேதி  பெங்களுர், டெல்லி அணிAPRIL 27ம் தேதி டெல்லியில், பெங்களுர், டெல்லி அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 162/8 ரன்கள் எடுத்தது.,அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 165/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KIRUNAL PANDYA தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 27, 2025

மஹாராஷ் டிராவின் ஷாம்பவி, துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

  குமார் சுரேந்திர சிங் நினைவு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் டில்லியில், பெண்களுக்கான 10 மீ., ''ஏர் ரைபிள்' பிரிவு தகு திச் சுற்றில் மஹாராஷ் டிராவின் ஷாம்பவி, 633.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித் தார். அடுத்து நடந்த பைனலில் 16 வயது வீராங்கனை ஷாம்பவி, 252.9 புள் ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பைனல் வரை சென்ற ஹரியானாவின் ரமிதா (252.1 புள்ளி) வெள்ளி வென் றார். உலக சாம்பியன்ஷிப்பில் 'வெண்கலம் வென்ற மேற்கு வங் கத்தின் மெஹுலி கோஷ் (231.0) வெண்கலத்தை கைப்பற்றினார். ஜூனியர் பெண்கள் பிரிவு (10 மீ., 'ஏர் ரைபிள்') பைனலில் ரமிதா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.ஷாம்பவி வெள்ளி, வெண்கல பதக்கத்தை, மன்யா மிட்டல் (உ.பி.,) வென்றனர். 

Apr 27, 2025

போலந்தில் கிராண்ட் செஸ் தொடர்.

 இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர விந்த் சிதம்பரம் உட்பட 10 பேர்  பங்கேற்றபோலந்தில் கிராண்ட் செஸ் தொடர் நேற்று துவங்கியது. முதலில் 'ரேபிட்' செஸ் நடக்கிறது. முதல் போட்டியில் பிரக்ஞானந்தா, பிரான்சின் மேக் சிம் வாசியர் மோதினர்.இதில் விளையாடிய பிரக்ஞானந்தா, முதலில் பின் தங்கினார். பின் வாசியர் செய்த தவறுகளை சரியாக பயன்படுத்திய பிரக்ஞானந்தா, போட்டியின் 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அரவிந்த் சிதம்பத்தை இரண்டாவது போட்டியில் விளையாடிய பிரக்ஞானந்தா, , 59 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 4.0 புள்ளியுடன் முதலிடத்தில்  உள்ளார். அரவிந்த் சிதம் பரம் (1.0) 8வது இடத்தில் உள்ளார். 

Apr 27, 2025

கொழும்பில் ஒருநாள் கிரிக்கெட் தொடர்.

ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்பில் பங்கேற்றுள்ள  இந்தியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத,. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை சந்தித்தது. போட்டிக்கு முன் மழை கொட்டி தீர்த்ததால் ஆட்டம் 39 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்திய வீராங்கனைகள் கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 29.4 ஓவர் களில் ஒரு விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. பிரதிகா ராவல் 50 ரன்களுடனும், ஹர்லீன் தியோல் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஸ்மிர்தி மந்தனா 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.நாளை நடைபெறும் 2-வது லீக்கில் இந் தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் போட்டி நாளை நடைபெறும்.. 

Apr 27, 2025

கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ்,

டபிள்யு. டி.டி., டேபிள் 'கன்டெண்டர்' டென்னிஸ் தொடர் டுனிசியாவில் ,கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட் டாலே ஜோடி, ஜப்பானின் சோரா மட்சுஷிமா, மிவா ஹரிமோடோ ஜோடியை சந்தித்தது. .இந்திய ஜோடி 3-2 (11-9, 5-11, 14-12, 3-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. டபிள்யு.டி.டி., 'கன்டெண்டர்' கலப்பு இரட்டையரில் பட்டம் வென்ற 2வது இந்திய ஜோடியானது.இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தாக்கர் ஜோடி, 2-3  (11-8, 7-11, 11-8, 9-11, 10-12) என்ற கணக்கில் ஜெர்மனியின் பெனடிக்ட் டுடா, ஆன்ட்ரி பெர் டெல்ஸ்மியர் ஜோடியி டம்  .ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.  குத்து சண்டை 15,17 வயதுக்குட்பட்டோருக் கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்ஜோர்டானில் நடக்கிறது. நேற்று, 17 வயதுக்குட் பட்டோருக்கான காலிறுதி போட்டி நடந்தது.பெண்களுக்கான 60 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், ஜோர்டானின் அயா அல்ஹாசனாத் மோதினர். சிம்ரன் ஜீத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.பின், 70 கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை ஹிமான்ஷி, பாலஸ்தீனத்தின் பராஹ் அபூ லைலாவை வென்றார்.ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் அமன் சிவாச் (63 கிலோ), தேவன்ஷ் (80 கிலோ) வெற்றி பெற்றனர். இந்தியாவுக்குஇத்தொடரில் 43 பதக்கம் உறுதியானது. இதில்  17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 18 பதக்கம்,15 வயதுக்குட்பட் டோர் பிரிவில் 25 பதக்கம் வென்றனர்.

1 2 ... 153 154 155 156 157 158 159 ... 182 183

AD's



More News