வாட்ஸ் அப் மூலம் அரசு சான்றிதழ்கள் பெறலாம் விருதுநகரில் புதிய சேவை.
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி உள்ளிட்ட 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை.
7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தேவையான சான்றிதழ் விவரம் மற்றும் ஆதாரங்களை அனுப்பினால், சான்றிதழ் நேரடியாக வாட்ஸ்அப்பிலேயே கிடைக்கும்.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 78452-52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பொதுமக்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம்.
0
Leave a Reply