கிரிக்கெட் டெஸ்ட் தொடர்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ,முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
பர்மிங்காம் போன்று லார்ட்சிலும் சாதிக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர் .. இந்தியா-இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில், இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.. முந்தைய போட்டியில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதால், அவரும் கடும் பயிற்சி மேற்கொண்டனர்
0
Leave a Reply