25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Mar 17, 2025

சுவிட்சர்லாந்து பாட்மின்டன் இந்திய நட்சத்திரங்கள்.

'சுவிஸ் ஓபன்சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் இன்று துவங்குகிறது.  இந்திய நட்சத்திரங்களுக்கு ராசியான இத்தொடரில் இம்முறை பெண்கள் ஒற்றையரில் சிந்து, மாளவிகா, ஆகர்ஷி, ரக்சிதா, அனுபமாநேரடியாக முதல் சுற்றில் களமிறங்குகின்றனர். கடந்த வாரம் ஆல்இங்கிலாந்து பாட்மின்டனில் முதல் சுற்றில் தோல்வியடைந்தார் சிந்து.  இம்முறை தனக்கு ராசியான சுவிட்சர்லாந்து மண்ணில் களிமிறங்குகிறார் சிந்து. கடந்த 2019ல் இங்கு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இவர், 2022ல் சுவிட்சர்லாந்து தொடரில் கோப்பை வென்றார்.   பெண்கள் இரட்டையரில் திரீசா -காயத்ரி, பிரியா-ஆர்த்தி ஜோடியும், கலப்பு இரட்டையரில் சதிஷ் குமார் - வரியாத் ஜோடியும் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.  ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், அனுபவ பிரனாய், கிரண் ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Mar 17, 2025

ரஷ்ய வீராங்கனை  பரிபாஸ் ஓபன் டென்னிசில்  மிர்ரா ஆன்ட்ரீவா சாம்பியன் .

பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, உலகின் 'நம் பர்-1 பெலாரசின் அரினா சபலென்கா மோதினர்.சிறப்பாக ஆடிய ஆன்ட்ரீவா 2-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார்..    

Mar 17, 2025

விளையாட்டு போட்டிகள் 18TH MARCH

டேபிள் டென்னிஸ்இந்தியாவின் சுதிர்தா, ஸ்வஸ்திகா, தியா, மானுஷ் ஷா, ஸ்னேகித் ஆகியோருக்கு சென்னை 'ஸ்டார் கன்டென்டர்' (மார்ச் 25-30) தொடரில் 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி. டென்னிஸ்இந்தியாவின் ராம் குமார் ஸ்பெயினில் நடக்கும் ஐ.டி.எப்., தொடருக்கான தகுதிச் சுற்று முதல் போட்டியில் 4-6,6-7 என இத்தாலியின் ஜுவாரெசிடம் தோல்வியடைந்தார். கால்பந்து ‘ஐ-லீக்' போட்டி பஞ்சாப்பின் லூதியானாவில் நடந்தது. ‘கேரளா அணி 3-1 என, நாம்தாரி அணியை வீழ்த்தியது. கேரளா அணி (9 வெற்றி, 31 புள்ளி) 4வது இடத்தில் நீடிக்கிறது.  அபுதாகிர் பாரா பவர் லிப்டிங் தங்கம் வென்றார் .இந்திய பாரா பவர் லிப்டிங் அமைப்பு சார்பில், உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில்,  22வது சீனியர், 17வது ஜூனியர் தேசிய பாரா பவர் லிப்டிங் சாம்பின்ஷிப் நடக்கிறது.இதில் தமிழகம் உட் பட 28 மாநிலத்தை சேர்ந்த, 280க்கும் மேற் பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர், தமிழகம் சார்பில் 30 பேர் விளையாடுகின்றனர்.ஜூனியர் ஆண்களுக்கான 49 கிலோ பிரிவில் தமிழகத்தின் அபுதாகிர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.   

Mar 16, 2025

இந்திய ஹாக்கி நட்சத்திரங்கள் ஹர்மன்பிரீத், சவிதாவுக்கு விருது.

இந்திய ஹாக்கி நட்சத்திரங்கள் ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. 1975ல் உலக கோப்பை வென்ற இந்திய ஹாக்கி ஜாம்பவான்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மலேசியாவில் நடந்த உலக கோப்பை பைனலில் (1975, மார்ச் 15) பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, மேஜர் தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது, ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. நேற்று டில்லியில் எச்.ஐ., தலைவர் திலிப் டிர்கே தலைமையில் ஏழாவது ஆண்டு விழா நடந்தது. மத்திய விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, எச்.ஐ., அமைப்பின் பொதுச்செயலர் போலா நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹாக்கி இந்தியா சிறந்த வீரர், வீராங்கனை விருதுகள்.சிறந்த வீரர் ஹர்மன்பிரீத் சிங் -ரூ.25 லட்சம்சிறந்த வீராங்கனை சவிதா புனியா-ரூ.25 லட்சம்கோல்கீப்பர் சவிதா புனியா- ரூ.5 லட்சம்தற்காப்பு வீரர் அமித் ரோஹிதாஸ் -ரூ.5 லட்சம்'மிட்பீல்டர்' ஹர்திக் சிங்- ரூ.5 லட்சம்முன்கள வீரர் அபிஷேக்- ரூ.5 லட்சம்இளம் வீரர் அராய்ஜீத் சிங்- ரூ.10 லட்சம்இளம் வீராங்கனை தீபிகா குமாரி-ரூ.10 லட்சம். 

Mar 16, 2025

'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ் லாம் தொடர் செஸ்: விதித் முதலிடம் பிடித்தார்

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ் லாம் தொடர் முடிவில் அதிக புள்ளி பெற்ற வீரர் சாம்பியன் ஆவார். இதன் இரண்டாவது தொடர் ஏப்.7-14ல் பாரிசில் நடக்க உள்ளது. இதன் 'ரவுண்டு -16' போட்டியில் இந்தியா வின் விதித் குஜ்ராத்தி, முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் மோதினர். இதில் விதித் 1.5-05 என வென்றார். காலிறுதியில் இந்தியாவின் பிரனவ், அரையிறுதியில் ஈரானின் அமினை வீழ்த்தினார். பைனலில் விதித், ஹங் கேரியின் ரிச்சர்டு ராப்போர்ட் மோதினர்.இதில் 1.5-05 என்ற கணக்கில் விதித் பெற்று முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.8.7 லட்சம் பரிசு கிடைத்தது. 

Mar 16, 2025

'பார்முலா-1' கார் பந்தயத்தில், லாண்டோ நோரிஸ் 'சாம்பியன்'

24 சுற்றுகளாகநடப்புஆண்டுக்கான 'பார்முலா-1' கார்பந்தயஉலகசாம்பியன்ஷிப்நடத்தப்படுகிறது.முதல்சுற்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்தது. நேற்று,'பைனல் ரேஸ்'' நடந்தது. பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 42 நிமி டம், 06.304 வினாடியில் கடந்த 'மெக்லாரன் மெர்சி டஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பறினார். 

Mar 16, 2025

சச்சின் அணி சாம்பியன் சர்வதேச மாஸ்டர்ஸ் தொடரில், வெற்றி பெற்றது.

இந்தியாவில், சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ('டி-20') முதல் சீசன் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற வீரர் கள் பங்கேற்றனர்.நேற்று, சட்டீஸ்கர் மாநிலம் மாநிலம் ராய்ப் பூரில் நடந்த பைனலில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.முதலில் 'பேட்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன் எடுத்தது.இந்திய அணிக்கு கேப்டன் சச்சின் (25) நல்ல துவக்கம் கொடுத்தார். அம்பதி ராயுடு (74) அரைசதம் கடந்தார். பின் இணைந்த யுவராஜ் சிங் (13*), ஸ்டூ வர்ட் பின்னி (16) ஜோடி வெற்றிக்கு கைகொடுத்தது. இந்திய அணி 17.1 ஓவரில் 149/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Mar 16, 2025

இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) பாலா தேவி கோல்.

இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) பாலா தேவி கோல்இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) 8வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த 8வது சுற்று லீக் போட்டியில் ஸ்ரீபூமி, சேது அணிகள் மோதின. இதில் ஸ்ரீபூமி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்ரீபூமி அணி சார்பில் பாலா தேவி 'கோல் (39, 49, 65வது நிமிடம்) அடித்தார். சேது அணிக்கு ஹதிஜா நந்தகோ (37 வது நிமிடம்), லிஷாம்பாபினா தேவி (89வது) தலா ஒரு கோல் அடித்து ஆறு தல் தந்தனர்.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த மற்றொரு போட் டியில் நிடா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹோப்ஸ் அணியை வென்றது. ஸ்பெஷல் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டில் இந்தியாவுக்கு 33 பதக்கம். இத்தாலியில், அறிவு சார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடந்தது. இதன்  கடைசி நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, 6 வெண்கலம் என, 9 பதக்கம் கிடைத்தது. இந்திய நட்சத்திரங்கள், 8 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 33 பதக்கம் வென்றனர். ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ராஷ்மிகா-வைதேகி 'சாம்பியன்' தாய்லாந்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர். இரட்டையர் பிரிவு பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, வைதேகி சவுத்ரி ஜோடி, 'நம்பர்-2' ஆக உள்ள தாய்லாந்தின் புனின், ஜாப்பானின் யூகி நைட்டோ ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. கால்பந்து  'ஐ-லீக்' போட்டி  'ஐ-லீக்' போட்டி  ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் அணி 4-0 என ஷில்லாங் லஜோங் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் 27 புள்ளியுடன் (7 வெற்றி) 5வது இடத்துக்கு முன்னேறியது.  பாட்மின்டன்சீனாவின் ஜின் வா குவோ, பாங் ஹுய் சென் ஜோடி ,ஆல் இங்கிலாந்து ஓபன் பைனலில் 21-16, 10-21, 23-21 என சக நாட்டை சேர்ந்த யான் ஷே பெங், யா ஜின் வெய் ஜோடியை வென்றது. T20 கிரிக்கெட் பெண்கள். மும்பையில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) 3வது சீசனுக்கான பைனலில் மும்பை அணி (149/7), 8 ரன் வித்தியாசத்தில் டில்லியை (141/9) வீழ்த்தி, கோப்பை வென்றது. இது, உலகின் பல்வேறு பகுதி களில் நடக்கும் 'டி-20' லீக் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த 12வது கோப்பை.

Mar 14, 2025

விளையாட்டு போட்டிகள்.15th MARCH

சைக்கிளிங்: இந்தியா தேசிய சாதனை. துருக்கியின் கொன்யா நகரில் யு.சி.ஐ., டிராக் நேஷன்ஸ் கோப்பை சைக்கிளிங் தொடர் நடக்கிறது. முதல் நாளான நேற்று ஆண்கள் அணிகளுக்கான டீம் ஸ்பிரின்ட் பிரிவில் தகுதிச்சுற்று நடந்தது.இதில் 16 அணிகள் பங்கேற்றன. டேவிட் பெக்ஹாம், எசோவ் ஆல்பன், ரோஜித் சிங் இடம் பெற்ற இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி 44.187 வினாடி நேரத்தில் வந்து, 11வது இடம் பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தது. எனினும் இந்திய ஆண்கள் அணிக்கு இது புதிய தேசிய சாதனை(43.302) ஆனது. முன்னதாக இந்திய அணி,44.451 வினாடி நேரத்தில் வந்து இருந்தது. ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 13 பதக்கம். இத்தாலியில், அறிவு சார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. நேற்று நான்கா வது நாள் போட்டி நடந்தன .ஆல்பைன் ஸ்கீயிங் 'எம் 04' பிரிவில் இந்தியாவின் தீபக் தாகூர் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இப்பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் ஆனார். ஆல்பைன் ஸ்கீயிங் 'எம் 05' பிரிவில் கிரிதர், தங்கம், வசப்படுத்தினார். இந்த இரு பிரிவிலும் இந்தியா வின் அபிஷேக் குமார், ராதா தேவி வெள்ளி வென்றனர்.நேற்று 'ஸ்னோஸ்ஷூ யிங்(பனிச்சறுக்கு) போட் டிகளில் இந்தியாவுக்கு 2 தங்கம்,3 வெள்ளி,1 வெண்கலம் என 6 பதக்கம் கிடைத்தன.50 மீ., எம் 03 பிரிவில் வாசு திவாரி தங்கம் வென்றார். 200 மீ., எம் 12 பைனலில் அசத்திய அனில் குமார், தங்கம் வசப்படுத்தினார். இதுவரை இந்தியாவுக்கு 8 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கம் கைப்பற்றியுள்ளது.பாட்மின்டன் இந்தியா ஏமாற்றம், இங்கிலாந்தின் பர்மிங் ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண் கள் ஒற்றையர் காலிறுதி யில், உலக தரவரிசையில் 15வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென்.'நம்பர் -6' வீரரான சீனாவின் ஷி பெங்லியுடன் மோதினார்.முதல் செட்டை லக் சயா சென், 10-21 என இழந்தார்.இரண்டாவது செட்டில் போராடிய போதும், 16,21 என கோட்டை விட்டார். முடிவில் லக்சயா சென் 10–21, 16–21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். 

Mar 14, 2025

100 வது ஆண்டு ஹாக்கி இந்தியா

100 வது ஆண்டு ஹாக்கி இந்தியா(எச்.ஐ.,) அமைப்பு 1925, நவ. 7ல், குவாலியரில் துவங்கப்பட்டது. இந்தி யாவில் துவக்கப்பட்ட முதல் தேசிய விளையாட்டு அமைப்பு இது. தற்போது நுாற்றாண்டு கொண்டாட்டம் துவங்கி யுள்ளது.இதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் பல்வேறு புதிய தொடர் கள் நடத்தப்பட உள்ளன. ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் திலிப் டிர்கே கூறுகையில்,"திறமையானவர்களை கவுரவிக்க உள்ளோம். நமது வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு விருதுகள் ஊக்கம் அளிக்கும்.இந்திய ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக ரூ.12 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.சர்வதேச ஹாக்கி அமைப்பின் உறுப்பி னராக 1925ல் இந் தியா சேர்ந்தது. இதன் நுாற்றாண்டு விழாவையும் கொண்டாட உள்ளோம்," என்றார்.   ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 13 பதக்கம் வென்றது. 8 / (1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980) கைப்பற்றியது.1960 வெள்ளி, 1968, 1972, 2021, 2024 என நான்கு முறை வெண்கலம் வென்றது.

1 2 ... 152 153 154 155 156 157 158 ... 171 172

AD's



More News