25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Jan 24, 2026

பெலாரசின் சபலென்காஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் 

மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்,  பெண்கள்ஒற்றை யர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, பெலாரசின் சபலென்கா, 55வது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொட போவாவை எதிர்கொண்டார். . 2 மணி நேரம், 4 நிமி டம் நீடித்த இப்போட்டியின் முடிவில் சபலென்கா 7-6, 7-6 என வெற்றி பெற்றார். உலகின் 'நம்பர்-1’ வீரர், ஸ்பெயினின் அல்காரஸ், 32வது இடத்திலுள்ள பிரான்சின் மவுடெட்  ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் மோதினர். 2 மணி நேரம், 7 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அல்காரஸ், 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 

Jan 24, 2026

இந்திய கிரிக்கெட்அணி T- 20 இரண்டாவது போட்டியில், வெற்றி பெற்றது

5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் , இந்தியாவந்துள்ள நியூசிலாந்து அணி பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது.நேற்று இரண்டாவது போட்டி, சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவ ரில் 208/6 ரன் எடுத்தது, இந்திய அணி 15.2 ஓவரில் 209/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Jan 24, 2026

இந்தோனேஷிய பாட்மின்டனில் சிந்துவுக்கு 'ரெட் கார்டு’.

'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின் டன் தொடர் இந்தோனேஷியாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-13' வீராங்கனை, இந்தியாவின் சிந்து, 'நம்பர்-4' ஆக உள்ள சீனாவின் யு பெய் செனை எதிர்கொண் டார். முதல் செட்டை சிந்து 13-21 என இழந்தார்.இரண்டாவது செட்டில் சிந்து 12-11 என முன்னிலையில் இருந்தார். அப்போது பெய் சென் அடித்த பந்து, உள்ளே விழுந்ததாக, 'லைன்' நடுவர் அறி வித்தார். ஆனால் பந்துவெளியே சென்றதாக சிந்து, அதிருப்தி தெரிவித்தார். அப்பீலை எதிர்த்து 'ரீப்ளே' செய்யும் 'சாலஞ்சர்' வாய்ப்பு ஏற்கனவேமுடிந்து விட்டதால், சிந்து ஏமாற்றம் அடைந்தார்.சர்வீசை சந்திக்க சிந்து தயாராக இருந்த போதும், நடுவரின் இச்செயல் அனைவருக்கும் வியப்பு தந்தது.  சிந்து கோபமடைந்து, நடுவர்ஜோயர்க்ஹுபெர்டிஸ்(ஜெர்மனி)மைதானத்துக்குஅழைத்துவாக்குவாதம்செய்தார்.முடிவில் 'ரெட் கார்டு' திரும்பப் பெறப்பட்டது.நடுவர் ஜோயர்க்ஹுபெர்டிஸ் (ஜெர்மனி) சிந்துவுக்கு 'எல்லோ கார்டு' காண்பித்தார். அடுத்து 12-16 என பின்தங்கினார் சிந்து. அப்போது, பெய் சென்சர்வீசை எதிர்கொள்ள தாமதம் செய் ததாக தெரிவித்த நடுவர், உடனே 'ரெட் கார்டு' காண் பித்தார். இதனால் பெய் செனுக்கு கூடுதலாக ஒருபுள்ளி (12-17) கிடைத்தது.

Jan 23, 2026

விளையாட்டு போட்டிகள் 23RD JANUARY 2026

பார்வையற்ற பெண் களுக்கான தேசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் ('டி-20'), புவனேஸ்வரில் ஒடிசா அணி (173/4) 32 ரன் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை (141/5) வென்றது.தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிப் போட்டிடில்லியில்,  பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் திலோத்தமா சென் முதலிடம் பிடித்தார்.சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசனுக்கானலீக் போட்டி அசாமில் கேரளா அணி 3-1 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது. 

Jan 23, 2026

செர்பியாவின் ஜோகோ விச், இத்தாலியின் சின்னர், போலந்தின் ஸ்வி யாடெக் உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்,. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லி மோதினர். ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

Jan 23, 2026

நேற்று டபிள்யு. பி. எல்., தொடரில் குஜராத் அணி,உ.பி., அணியை 45 ரன்னில் வீழ்த்தி மூன்றாவது வெற்றி பெற்றது .

நேற்று நடந்த பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு. பி.எல்.,) தொடருக்கான லீக் போட்டியில்  குஜராத்தின் வதோதராவில் குஜராத், உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற உ.பி., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. உ.பி., அணி 17.3 ஓவரில் 108 ரன்,குஜராத் அணி 20 ஓவரில் 153/8 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Jan 23, 2026

இந்தியாவின் சிந்து இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறி, பாட்மின்டன் சர்வதேச ஒற்றையர் பிரிவில் 500வது வெற்றியை பதிவு செய்தார்.

'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் இந்தோனேஷியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் மோதினர்.சிந்து 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இது, பாட்மின்டன் சர்வதேச ஒற்றையர் பிரிவில் சிந்து பெற்ற 500வது வெற்றி.இதுவரை 732 போட்டியில், 500 வெற்றி, 232 தோல்வியை பெற்றுள்ளார். 6வது சர்வதேச நட்சத்திரமான முதல் இந்தியர் ஆனார். 

Jan 23, 2026

டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரி குகேஷ் வெற்றி பெற்றார்.

டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 88வது சீசன்நெதர்லாந்தில்,  நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர். 'நடப்பு உலக சாம்பியன்' 'குகேஷ், செக்குடியரசின் தாய் டாய் வான் நுயென் ஐந்தாவதுசுற்றில் மோதி,51வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார்.  3 புள்ளிகளுடன் 4 வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

Jan 22, 2026

டபிள்யு. டி.டி., கன்டென்டர் டேபிள்டென்னிஸ்  இந்தியாவின் மணிகா பத்ரா, மனுஷ் ஷா வெற்றி.

ஓமனில், டபிள்யு. டி.டி., கன்டென்டர் டேபிள்டென்னிஸ் தொடர் ஓமனில்,பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, ரஷ்யாவின் மரியா பான்பிலோவா மோதினர். இதில் மணிகா 3–2 (9–11, 11-8, 11-7, 8-11, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் மனுஷ் ஷா, சீன தைபேயின் குவான்-ஹாங் குவோ  ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதினர். இதில் மனுஷ் ஷா 3-0 (11-6, 11-5, 11-5) என வெற்றி பெற்றார். இந்தியாவின் ஸ்வஸ்திகா கோஷ், தனிஷா ஜோடி 3-1 (7-11, 11-6, 11-4, 11-9) என ஸ்லோவாகியாவின் டாட்டியானா, பிரிட்டனின் டின்-டின் ஹோ ஜோடியை பெண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில்  வென்றனர்.

Jan 22, 2026

யூத் டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரில், இந்தியாவின் திவ்யான்ஷி இரண்டாவது இடம் பிடித்தார்.

யூத் டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர்கத்தார் தலைநகர் தோஹாவில் ,17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, தென் கொரியாவின் உஇங் ஸ்யுவானை எதிர்கொண்டு முதல் செட்டை திவ் யான்ஷி 11-6 என கைப் பற்றினார். அடுத்த இரு செட்டை 5-11, 4-11 என இழந்தார்.4வது செட்டை 11-4 என வென்று பதிலடி தந்தார். வெற்றியாளரை  முடிவு செய்யும் 5வது, கடைசி செட்டில் திவ்யான்ஷி, 5-11 என நழுவவிட்டார். முடிவில் திவ்யான்ஷி 2-3 என்ற செட் கணக்கில் தோல்வி யடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார். இந்தியா வின் ஆதித்யா, அன்கோ லிகா ஜோடி, 15 வயதுக்கு உட்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ,ஸ்பெயினின் அலெக்சாண்டர், ஆஸ்திரி யாவின் சோபியா ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய 4 3-0 (11-4, 11-9, 11-7) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. 

1 2 ... 70 71 72 73 74 75 76 ... 181 182

AD's



More News