.பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடக்கஉள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்திய அணி சூர்ய குமார் யாதவ் தலைமையில் களம் காணுகிறது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு ,எந்த 20 ஓவர் தொடரையும் இழக்காமல் இந்திய அணி முதல் முறையாக உள்ளூர் சூழலில், முழுவீச்சில் ஆயத்தமாகிறது.ஐ.சி.சி. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை பெண்களுக்காக இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி அதே உத்வேகத்தில் 20 ஓவர் உலகக் கோப்பையையும் வெல்ல ஆர்வம் காட்டுகிறது.
விளையாட்டு ரசிகர்களுக்கு புதிதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு பெரும் விருந்து படைக்கும் ஆண்டாக அமையப்போகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் நிறைய முக்கியமான போட்டிகள் அரங்கேறப் போகின்றன.
உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில், முதலில் 'ரேபிட்' பிரிவு போட்டிகள் நடந்தன. இந்தியாவின் அர்ஜுன் 22, பெண்கள் பிரிவில் இந்தி யாவின் கொனேரு ஹம்பி 38, இதன் ஓபன் பிரிவில் ,வெண்கலம்கைப்பற் றினர்.அடுத்து, 'பிளிட்ஸ்' முறையில் (அதிவேகம்) ,மொத்தம் 19 சுற்று போட்டிகள் நடந்தன. இந்தி யாவின் அர்ஜுன், 15.0 புள்ளியுடன் முதலிடம்பிடித்தார். அமெரிக்காவின் பேபியானோ (14.0), ஐந்து முறை உலக சாம்பி யன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் (13.5), உஸ் பெகிஸ்தானின் நாடிர்பெக் (13.0) அடுத்த 3 இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.ஆனந்த், வைஷாலிக்குப் பின் உலக 'பிளிட்ஸ்' தொடரில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் அர்ஜுன். .உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' என ஒரு தொட ரின், இரு பிரிவிலும் பதக்கம் வென்றஆனந்துக்குப் பின், அர்ஜுன் 2வது இந்திய வீரர் ஆனார் அர்ஜுன்.
துவக்க வீரர் அபிஷேக் சர்மா 25. ரோகித் சர்மா ஓய்வுக்குப் பின், இந்திய 'டி-20' அணியின் 'டி-20' அரங்கில் ரன் குவித்து வருகிறார்.சர்வதேச பேட்டர் தரவரிசையில் 908 புள்ளியுடன் உலகின் 'நம்பர்-1 வீரராக திகழ்கிறார். இந்தியா, பஞ்சாப், ஐதராபாத் (பிரிமியர் தொடர்) அணிகளுக்காக ரன் மழை பொழிகிறார். 2025ம் ஆண்டில் இவர் மொத்தம் 1602 ரன் எடுத்துள்ளார். உள்ளூர், சர்வதேச 'டி-20'ல் ஒரு ஆண்டில் குறைந்தது,1000 ரன் எடுத்த வீரர்களில், 200க்கும் மேல் என பேட்டிங் 'ஸ்டிரைக் ரேட்' வைத்துள்ள முதல் வீரர் என சாதனை படைத்தார் அபிஷேக். கடந்த ஆண்டு விளையாடிய அனைத்து போட்டியிலும் இவரது பேட்டிங் 'ஸ்டிரைக் ரேட்' 202.01 ஆக உள்ளது.
இந்தியாவின் ஆமதாபாத்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இந்தியாவின்ஆமதாபாத்தில் ,ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி sowdhri, சக வீராங்கனை பிரதியூஷாவை எதிர் கொண்டு ,முதல் செட் 6-4 , அடுத்த செட்டை 6-1 என வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் செய்லி, சந்தீப்தி, பூஜா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.இந்தியாவின் சோஹா, தம்ஹன்கர், தேபாஸ், அரோரா (அமெ ரிக்கா) ஜோடி, பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினர்.
2026 ஜன. 15 முதல் பிப். 1 வரை புரோ மல்யுத்த லீக் 5வது சீசன் இந்தியாவில், நடக்கவுள்ளது. ஹரி யானா, மும்பை, பஞ்சாப், டில்லி, மகாராஷ்டிரா, உ.பி., என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.2026 ஜன. 3ல் டில்லியில் இதற்கானவீரர், வீராங் கனைகள் ஏலம், நடக்கவுள்ளது. இதில் இந்திய வீரர் அமன் ஷெராவத்தின் 21, அடிப்படை ஏலத் தொகை ரூ.18 லட்சமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.பாரிஸ் ஒலிம்பிக் (2024), ஆசிய விளையாட் டில் (2022) வெண்கலம் வென்றிருந்தார் . ஜப்பான் வீராங்கனை ,ஒலிம்பிக்கில் பதக்கம் 2020ல் தங்கம், 2024ல் வெண்கலம்) வென்ற யுய் சுகா சியின் அடிப்படை ஏலத்தொகை ரூ. 18 லட்சமாக உள்ளது. ரூ.10 லட்சமாக உலக சாம்பியன்ஷிப் (வெள்ளி), ஆசிய விளை யாட்டு (வெள்ளி), காமன் வெல்த் விளையாட்டில் (தங்கம்) பதக்கம் வென்ற இந்திய வீரர் தீபக் புனியா, காமன்வெல்த் விளையாட் டில் தங்கம் கைப்பற்றிய நவீன், இந்திய வீராங்கனைகளான அன்டிம் பங்கல், அன்ஷு மாலிக் ஆகியோர் ஆகியோரது அடிப்படைஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் பிரிவில் மற்றொரு இந்திய வீரர் சுஜீத் கல்கல், இடம் பெற்றுள்ளார்..
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் டில்லியில், ஜூனியர் பெண்களுக்கான 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் டில்லியை சேர்ந்த ஆத்யா கட்யல், 15 வயது ,112 முறை இலக்கை தாக்கினார். சிறப்பாக செயல்பட்ட ஆத்யா, 42 முறை இலக்கை தாக்கி, சிறப்பாக செயல்பட்டுமுதலிடம் பெற்று தங்கம் தட்டிச் சென்றார். சபீரா (41) வெள்ளி தமிழகத்தின் தனிஷ்கா (28) வெண்கலம் வென்றனர்.தமிழகத்தின் தனிஷ்கா, நிலா, ஆந்த்ரா இடம் பெற்ற அணி, 295 புள்ளிஎடுத்து அணிகளுக்கான பிரிவில் இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றனர். டில்லியின் ஆத்யா, பாவ்யா, அனன்யா (323) இடம் பெற்ற அணி தங்கம் வென்றனர்.274 புள்ளி எடுத்த ராஜஸ்தானுக்கு (தர்ஷனா, மைத்ரேயி, மஹிகா) வெண்கலம் கிடைத்தது.
ஐந்து போட்டி கொண்ட‘டி-20' தொடரில் இந்தியாஇலங்கை பெண்கள் அணி, முதல் நான்கு போட்டியிலும் இந்தியா வென்றது. ஐந்தாவது போட்டி நேற்று, திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் நடந்தது.துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ரேணுகாவுக்குநேற்று ஓய்வு தரப்பட்டது. ஸ்னே ராணா அணிக்கு திரும்பினார். இலங்கை அணி 20 ஓவரில் 160/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், தர வரிசை பட்டியல் வெளியானது. இந்திய அணி துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பேட்டர்வரிசையில் (767 புள்ளி), 3வது இடத்தில் தொடர்கிறார். முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியாவின் பேத் மூனே (794), வெஸ்ட் இண்டீசின் ஹீலே (774) உள்ளனர். இந்தியாவின் தீப்தி சர்மா பவுலர்கள் வரிசையில் (738), 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான 3வது போட்டியில் 4 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா (705), 8 இடம் முன்னேறினார்'ஆல் ரவுண்டர்' வரிசையில் தீப்தி சர்மா (387) 3வது இடத்தில் தொடர்கிறார்.
ஹாங்காங்கில் சர்வ தேச ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஹாங்காங்கில் ,இந்தியாவின் இளம்பரிதி, அபிஜீத் குப்தா, விசாக் உட்பட மொத்தம் 131 பேர் பங்கேற்றனர்.இந்திய வீரர்கள் விசாக், இளம்பரிதி 9வது, கடைசி சுற்றில் மோதினர். இப்போட்டி 28 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் அமர்டுவ்சின், 7.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றினார்.விசாக் (7.0), சீனாவின் பெங்ஜியாங்ஜியன் (7.0) சமபுள்ளி பெற்றனர்.'டை பிரேக்கர்' புள்ளியில் முந்திய ஜியாங்ஜியன், வெள்ளி வென்றார். விசாக்கிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.