அர்ஜென்டினாவில் உலககோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் தங்கப் பதக்கம் வென்ற ருத்ராங்க்ஷ்.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா (634.5 புள்ளி), ருத்ராங்க் ஷ் பாட்டீல் (633.7) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.மற்ற இந்திய வீரர்களான அங்குஷ் கிரண் ஜாதவ் (631.5), திவ்யான்ஷ் சிங் பன்வார் (628.0), ஹசாரிகா (624.6) பைனலுக்கு தகுதி பெறத் தவறினர்.
அடுத்து நடந்த பைனலில் ருத்ராங்க்ஷ்,252.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்..இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 4 பதக்கம் வென்ற இந்தியா,முதலிடத்தை சீனாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
0
Leave a Reply