டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 88வது சீசன்நெதர்லாந்தில், நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர். 'நடப்பு உலக சாம்பியன்' 'குகேஷ், செக்குடியரசின் தாய் டாய் வான் நுயென் ஐந்தாவதுசுற்றில் மோதி,51வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். 3 புள்ளிகளுடன் 4 வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஓமனில், டபிள்யு. டி.டி., கன்டென்டர் டேபிள்டென்னிஸ் தொடர் ஓமனில்,பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, ரஷ்யாவின் மரியா பான்பிலோவா மோதினர். இதில் மணிகா 3–2 (9–11, 11-8, 11-7, 8-11, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் மனுஷ் ஷா, சீன தைபேயின் குவான்-ஹாங் குவோ ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதினர். இதில் மனுஷ் ஷா 3-0 (11-6, 11-5, 11-5) என வெற்றி பெற்றார். இந்தியாவின் ஸ்வஸ்திகா கோஷ், தனிஷா ஜோடி 3-1 (7-11, 11-6, 11-4, 11-9) என ஸ்லோவாகியாவின் டாட்டியானா, பிரிட்டனின் டின்-டின் ஹோ ஜோடியை பெண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் வென்றனர்.
யூத் டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர்கத்தார் தலைநகர் தோஹாவில் ,17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, தென் கொரியாவின் உஇங் ஸ்யுவானை எதிர்கொண்டு முதல் செட்டை திவ் யான்ஷி 11-6 என கைப் பற்றினார். அடுத்த இரு செட்டை 5-11, 4-11 என இழந்தார்.4வது செட்டை 11-4 என வென்று பதிலடி தந்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் 5வது, கடைசி செட்டில் திவ்யான்ஷி, 5-11 என நழுவவிட்டார். முடிவில் திவ்யான்ஷி 2-3 என்ற செட் கணக்கில் தோல்வி யடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார். இந்தியா வின் ஆதித்யா, அன்கோ லிகா ஜோடி, 15 வயதுக்கு உட்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ,ஸ்பெயினின் அலெக்சாண்டர், ஆஸ்திரி யாவின் சோபியா ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய 4 3-0 (11-4, 11-9, 11-7) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில், பெண்கள்ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் ஜுவோஜுவான் பாய் மோதி,சபலென்கா 6-3, 6-1என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். செர்பியாவின் டேனி லோவிச்சை ,அமெரிக்காவின் கோகோ காப் மற்றொரு போட்டியில் 6-2, 6-2 என, வென்றார்.ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் யானிக் ஹான்ப்மேன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் மோதி, அல்கா ரஸ் 7-6, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-7, 6-2, 6-2, 6-1 என செர்பியாவின் ஹமத் மெட்ஜெடோ விச்சை மற்றொரு போட்டியில் வென்றார். பிரான் சின் அலெக்சாண்டர் முல்லரை ,ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 4-6, 6-3, 6-4 என, தோற்கடிததார்.
முதல் 'டி-20' கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன் வித்தியாசத்தில், நியூசிலாந்தை வென்றது. பேட்டிங்கில் அபிஷேக் சர்மா 35 பந்தில் 84 ரன் விளாசினார்.5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி பங்கேற்றது. நேற்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர், பீல்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 190/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.இந்திய அணி 20 ஓவரில் 238/7 ரன் குவித்து, இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் இந்தோனேஷியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின்மனாமி சுய்சூ மோதினர். சிந்து 22-20, 21–18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-16, 21-17 என சீனதை பேயின் பாய் யு போவை தோற்கடித்தார் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப் பானின் கோகிவடானபே ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதி, ஸ்ரீகாந்த் 21-15, 21-23, 24-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். றொரு இந்தியாவின் லக்சயா சென் 21-13, 16-21, 21-14 என சீனதைபேயின் வாங் டிசூ வெய்யை மற்றொரு போட்டியில் வென்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்முடிந்த கையுடன், 'டி-20' இன்று ஆரம்பமாகிறது. இம்முறை சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்மோதுகின்றன. முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நாக்பூரில் நடைபெற உள்ளது.
சர்வதேச செஸ் தொடர் நெதர்லாந்தில் ,மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.மூன்றாவது சுற்றில் குகேஷ்-அர்ஜுனை சந்தித்து,34 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, செக் குடியரசின் வான் நிகுயேனை ,களமிறங்கிய பிரக்ஞானந்தா, நீண்ட போராட்டத்துக்குப் பின் 75வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். நோடிர் பெக் (உஸ்பெகிஸ்தான்) இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், மோதிய போட்டி, 42 நகர்த்தலில் 'டிரா' ஆனது பிரக் ஞானந்தா (0.5) கடைசி (14) இடத்துக்கு தள்ளப்பட்டார்.மூன்று சுற்று முடிவில் குகேஷ் (1.5), அரவிந்த் (1.5) 7, 8வது இடத்தில் உள்ளனர்.
மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்-2' வீரர், இத்தாலியின் சின்னர், 93வது இடத்திலுள்ள பிரான்சின் ஹியுகோ காஸ்டனை சந்தித்தார்.முதல் இரு செட்டை சின்னர் 6-2, வசப்படுத்தினார். ஹியுகோ காயம் காரணமாக வெளியேற, சின்னர் வெற்றி பெற்றாக அறிவிக்கப்பட்டார். உலகின் 'நம்பர்-5' வீராங்கனை, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா பெண்கள்ஒற்றையர் முதல் சுற்றில், சுலோவேனியாவின் கஜா ஜுவனை எதிர் கொண்டார். முதல் இரு செட்டையும் 6-4, 6-3 என வசப்படுத்திய ரிபாகினா, வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
உலக சாம் பியன்ஷிப் அரங்கில் வெள்ளி (2015) வென்ற ,இந்தியபாட்மின்டன் வீராங்கனை ,கடந்த 2015ல் வெளியான உலக பாட்மின்டன் தரவரி சையில் 'நம்பர்-1' இடம் பிடித்த செய்னா நேவல் 35 பாட்மின்டன் அரங்கில் இருந்துஓய்வு பெற்றுள்ளார் 2016 முதல் முழங்கால் காயம் இருப்பினும், 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018 காமன் வெல்த்தில் தங்கம் கைப்பற்றினார். கடந்த 2024 முதல் காயம் அதிகரிக்க, சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் “எனக்கான நேரம் முடிந்து விட்டது, இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில், பாட்மின்டனில் இருந்து விடை பெறுகிறேன். இந்த ஓய்வு முடிவை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.