25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


விளையாட்டு (SPORTS)

Jan 17, 2025

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் பைனலுக்கு இந்தியாவின் அன்கிதா ரெய்னா ஜோடி முன்னேறியது.

டில்லியில் பெண்களுக் கான ஐ.டி.எப்., டென் னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியா வின் அன்கிதா ரெய்னா, பிரிட்டனின் நெய்தா பெய்ன்ஸ் ஜோடி, இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ரியா பாட்யா ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை அன்கிதா ஜோடி 6-2 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. முடி வில் அன்கிதா ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

Jan 16, 2025

இன்று முதல் 'கிங்' சர்வதேச செஸ் தொடர்.

நெதர்லாந்தில் டாடா சர்வதேச செஸ் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் 'உலகசாம்பியன்' குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, வைஷாலி, திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

Jan 16, 2025

டென்னிஸ்  கர்மான் கவுர் தண்டி ,தடை தாண்டி  16 மாதத்திற்கு பின் களமிறங்கினார்

டென்னிஸ் . இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி ,தடை தாண்டி  16 மாதத்திற்கு பின் களமிறங்கினார் டில்லி டென்னிஸ் தொடரில் களமிறங்கியது மகிழ்ச்சி," என்றார்பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து இந்திய ஓபன் சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை, 'நம்பர்-16' ஆக உள்ள சிந்து, 46வது இடத்திலுள்ள ஜப்பானின் மனாமி சுய்ஜுவை எதிர் கொண்டார்.முதல் செட்டை சிந்து 21-15 என வசப்படுத்தினார்.தொடர்ந்து அடுத்த செட்டையும் இவர், 21-13 என கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார் . 

Jan 16, 2025

தோல்வியடைந்து  வெளியேறிய இந்தியர்

அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ‘நம்பர்-2’ வீரர் வேலவன் செந்தில்குமார் (தமிழகம்), இத்தொடரின் ‘நம் பர்-3' அந்தஸ்து பெற்ற எகிப்தின் தரேக் மோமெனை எதிர் கொண்டார்.  27 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் வேலவன், 0-3 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். காலிறுதியில் மனுஷ் தோல்வி .ஓமனில், உலக டேபிள் டென்னிஸ் கண்டென்டர் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் மனுஷ்ஷா, ஜப்பானின் சோராவை வீழ்த்தினார்.  முடிவில் மனுஷ் 0-3 கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

Jan 16, 2025

இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு 2025ம்  ஆண்டினை சிறப்பானதாக மாற்றுவோம் ஸ்மிருதி மந்தனா நம்பிக்கை 

இந்தியாவில் பெண்களுக்கான ஒருநாள் உலக கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் -  செப்டம்பரில் நடக்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் 'ரவுண்டு ராபின்' முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். 'டாப்-4' அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.இதற்குதயாராகும் வகையில் இந்திய பெண்கள் அணி, சொந்த மண்ணில் பல்வேறு தொடர்களில் பங்கேற்கிறது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் (3-0), அடுத்து அயர்லாந்து (3 - 0) அணிகளுக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா .. இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு 2025ம்  ஆண்டினை சிறப்பானதாக  மாற்றுவோம் ஸ்மிருதி மந்தனா நம்பிக்கை .

Jan 16, 2025

பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் ஒடிசா வெற்றி

ஜார்க்கண்ட்டில் பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் நடக்கிறது. 4 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் ஒடிசா வாரியர்ஸ், பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின.  போட்டி 1-1 என சமனில் முடிந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இதில் இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன.  முடிவில் ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

Jan 15, 2025

இந்தியாவின் மந்தனா, பிரதிகா சதம் அடித்து கோப்பையை கைப்பற்றி வெற்றி.

இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா அசத்தல் துவக்கம் தந்தனர். மந்தனா 70 பந்தில் சதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 233 ரன் சேர்த்த போது, மந்தனா (135 ரன், 80 பந்து, 7×6, 12×4) அவுட்டானார். சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த பிரதிகா, ஒரு நாள் அரங்கில் தனது முதல் சதம் கடந்தார்.  இந்திய பெண்கள் அணி ஒருநாள் அரங்கில் அதிகபட்சமாக 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு  435 ரன் குவித்தது. ஜெமிமா (4), தீப்தி (11) அவுட்டாகாமல் இருந்தனர். ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த இந்திய வீராங்கனை வரிசையில் முதலிடத்தில் தொடர்கிறார் மந்தனா  (10) மிதாலி  (7), ஹர்மன்பிரீத் கவுர் (6) அடுத்து உள்ளனர்.அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 304 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Jan 15, 2025

சண்டிகரில் ஜூனியர் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென் னிஸ் தொடர் . கோவையை சேர்ந்த மாயா காலிறுதிக்குள் நுழைந்தார்.

 சண்டிகரில் ஜூனியர் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென் னிஸ் தொடர் ,பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-5' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் மாயா ரேவதி, பிரான்சின் இவா மரியேவை சந்தித்தார்.முதல் செட்டை கோவையை சேர்ந்த மாயா, 6-3 என கைப்பற்றி. முடிவில், 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, எளிதாக வசப்படுத்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாயா, ரஷ்யாவின் பொலினா ஜோடி, செர்பியாவின் ஜான்கோவிச், ரஷ்யாவின் அன்னா ஜோடியை 6-4, 6-2 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.  

Jan 15, 2025

சர்வதேச ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் ,ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் 'நம்பர்-2' வீரர் வேலவன் செந்தில்குமார் (தமிழகம்), போர்ச்சுகலின் ருய் சோரசை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-6என கைப்பற்றிய வேலவன், அடுத்த செட்டை 11-5 என வசப்படுத்தினார். தொடர்ந்து மூன்றாவது செட்டிலும் அசத்திய இவர், 11–6 வென்றார்.முடிவில் வேலவன் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

Jan 14, 2025

செஸ் தொடர் பரிசு தொகையில்  ,அதிகம் சம்பாதித்து முதலிடம் பிடித்த குகேஷ்.

உலக செஸ் சாம்பியன் ஷிப்பில் வென்ற ரூ. 8.62 கோடி உட்பட, மொத்தம் பங்கேற்ற 8 தொடரில், குகேஷ் ரூ. 13.60 கோடி சம்பாதித்துள்ளார். சீனாவின் டிங் லிரென், 5 தொடர்களில் ரூ. 10.20 கோடி சம்பாதித்து, இப்பட்டியலில் இரண்டாவதாக உள்ளார். உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் (ரூ. 5.46 கோடி), நான்காவது இடம் பிடித்தார்.இந்தியாவின் பிரக்ஞானந்தா, 11 தொடர்களில் ரூ. 1.74 கோடி சம்பாதித்து, 'டாப்-10' பட்டியலில் இடம் பிடித்தார். இவர் 9வது இடம் பெற்றார்.இந்தியாவின் மற்ற நட்சத்திரங்கள் கொனேரு ஹம்பி (ரூ. 1.06 கோடி, 13வது இடம்), அர்ஜுன் (1.03 கோடி, 15வது) என இருவரும் 'டாப்-15' பட்டியலில் இடம் பெற் றனர்.   உலக செஸ் நட்சத்திரங் கள் கடந்த 2024ம் ஆண்டு சம்பாதித்த பரிசுத் தொகை விபரம் தெரியவந்துள்ளது. இதன்படி, 18 வயதில் இளம் உலக சாம்பியன் ஆன இந்தியாவின் குகேஷ், முதலிடத்தில் உள்ளார்.

1 2 ... 85 86 87 88 89 90 91 92 93 94

AD's



More News