. காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் பிரஞ்சலி பிரஷாந்த் துமால் (573.14 புள்ளி), அனுயா பிரசாத் (569.15) முதலிரண்டு இடம் பிடித்தனர். பைனலில் பிரஞ்சலி, 34 புள்ளி களுடன் முதலிடம் பிடித்துதங்கத்தை தட்டிச் சென்றார். பிரஞ்சலி கைப்பற்றிய 3வது பதக்கம். கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் சகவீரர்அபினவ் தேஷ்வாலுடன் இணைந்து தங்கம் வென்ற இவர், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர் பிரிவில் வெள்ளி கைப்பற்றினார். தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் தங்கம் வென்ற அனுயா, 23 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார். இம்முறை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என, 16 பதக்கம் கிடைத்து உள்ளன.
சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி(21 வயதுக்குட்பட்டோர்)நடக்கிறது. இதில்இந்தியா,ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், அர்ஜென்டினா உள்பட 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி 28-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சிலியை எதிர்கொள்கிறது.தமிழ்நாட்டில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியை பார்க்க டிக்கெட்டுகள் இலவசம் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. www.ticketgenie.inஎன்ற இணையத் தளத்திலோ அல்லது ஆக்கி இந்தியாவின் அதிகாரபூர்வ செயலியிலோபதிவு செய்து டிஜிட்டல் டிக்கெட்டுகளை பெற்று போட்டியை நேரில் பார்க்கலாம்.ஒரு நபருக்கு 4 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், 'இலவச டிக் கெட்டுகளை வழங்குவதன் மூலம் தமிழகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மாணவ,மாணவிகள், இளம் விளையாட்டு வீரர்கள், அவரது குடும்பத்தினர், ஆக்கி பிரியர்களுக்கு போட்டியை நேரில் பார்ப்பதற்கான கதவினை திறப்பதே எங்களது இலக்கு. சர்வதேச ஹாக்கி யை அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம்' என்றார்.
சுப்மன் கில்கழுத்து வலி காரணமாக, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி பங்கேற்கிறது. ராஞ்சியில் முதல் போட்டி வரும் நவ. 30ல் நடக் கவுள்ளது. ராய்பூர் (டிச.3),விசாகப்பட்டனத்தில் (டிச. 6) மீதமுள்ள போட்டிகள் ராய்பூரில் நடக்கவுள்ளன. 15 பேர் கொண்ட இந்திய அணி இத் தொடருக்கு அறிவிக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் சிட்னியில், 'சூப்பர் 500' தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் லக்சயா சென் 24, ஜப்பானின் யூஷி டனாகா 26, மோதினர். முதல் செட்டை 21-15 ,2வது செட்டை 21-11 என லக்சயா கைப்பற்றி, நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். நடப்பு ஆண்டில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றி, சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்தியரானார். கடினமாக பயிற்சி மேற்கொண்டு நடப்பு சீசனில் முதல் பட்டம் வென்றதில் மகிழ்ச்சி," என்றார் லக்சயா சென்.சமீபத்தில் முடிந்த யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி கோப்பை வென்றிருந்தார்
பெண்களுக்கான'டி-20' உலககோப்பைஇந்தியா,இலங்கையில், பார்வையற்றோர்முதல்சீசன்நடந்தது.இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன.இலங்கை தலைநகர் கொழும்புவில்நேற்று, நடந்த பைனலில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தீபிகா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.நேபாள அணிக்கு பிமலா ராய் (26), சரிதாகிமிரே (35) ஆறுதல் தந்தனர். நேபாள அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 114 ரன் எடுத்தது. இந்திய அணி 12.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது.இந்திய அணி இத்தொடரில் 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஐந்து லீக் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, பைனலில் நேபாளத்தை அரையிறுதியில் வென்றது.
'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட் மின்டன் தொடர் சிட்னியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், சக வீரர் ஆயுஷ் ஷெட்டி பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட் 19–19, 21–21 என இழுபறியாக இருந் தது. பின் லக்சயா 23-21 என வென்றார்.இரண்டாவது செட்டை 21-11 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் லக்சயா 23-21, 21-11 என நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு நுழைந்தார். ஆண்கள் இரட்டை யர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந் தியாவின் சாத்விக்சாய் ராஜ், சிராக் ஷேட்டிஜோடி, இந்தோனேஷியா வின் பிக்ரி, அல்பியான் ஜோடியை சந்தித்தது.இந்திய ஜோடி 19-21, இந்திய 15-21 என தோல்வியடைந்தது.
நேற்று அயர்லாந்து நாட்டு அணியினர், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ., 28ல் துவங்க உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக, மதுரை விமான நிலையம் வந்தனர்.. மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பிரவீன்குமார், விமான நிலையத்தில் வரவேற்றார். வீரர்கள், அணியைச் சேர்ந்தவர்களுக்கு துாத்துக்குடியின் பெருமை சொல்லும் வகையில் சங்குபாசியும் வரவேற்கும் முகமாக சந்தனமாலையும் அணிவித்தார். தொடர்ந்து பரி வட்டத் துண்டை அணிவித்து கவுரவித்தார். மகளிர் சுயஉதவிக்குழுவினரின் ஆர்கானிக் சோப்பு உட்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டகம், போட்டிக்கான லோகோவை வீரர்களுக்கு வழங்கினார்.விமான நிலைய வாசலில் பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம், கரகாட்ட குழுவினர் காத்திருந்தனர். வீரர்கள் வெளியே வந்ததும், தாரை தப்பட்டை முழங்க, பாரம்பரிய ஆட்டத்துடன் வீரர்களை வரவேற்றனர். உற்சாகமடைந்த வீரர்கள், சந்தோஷத்துடன் கூடவே நடனமாடி ,தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். .மதுரையின்வரவேற்பை வியந்து ரசித்தனர்
உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில்நடந்தது.இதில் இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்று குவித்தது. வீராங்கனைகள் மீனாட்சி ஹூடா, நிகாத்ஜரீன், பிரீத்தி பவார், ஜாய்ஸ்மின் லம்போரியா, அருந்ததி சவுத்ரி, நிபுர் ஷெரான், பர்வீன் ஹூடா, வீரர்கள் சச்சின் சிவாச், ஹிதேஷ் குலியா ஆகியோர் தங்கப்பதக்கத்தை முத்தமிட்டனர். உலகக் கோப்பையில் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு, இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது.இதில் கலந்து கொண்ட இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய் சிங் நமது வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வதை உறுதி செய்ய வேண்டும். , 'உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு அற்புதமாக இருந்தது. நாம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டியது அவசியமானதாகும் அடுத்து வரும் காமன்வெல்த், ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டியில் நமது குத்துச்சண்டை வீரர்கள் பதக்கம் வெல்வதற்கு தேவையான எல்லா உதவிகளும், முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். வீரர்களின் பயிற்சிக்கு சிறந்த பயிற்சியாளர்களை நியமிப்பது, ஒவ்வொரு எடைப்பிரிவிலும் பல குத்துச்சண்டை வீரர்களை வளர்த்தெடுப்பது, நாடு முழுவதும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு சில எடைப்பிரிவில் நமது வலிமையை அதிகரிப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என்றார்.
காதுகேளாதோருக்கான 'டெப் லிம்பிக்ஸ்' 25வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனை என, 73 பேர் பங்கேற்கின்றனர்.இந்தியா சார்பில் திக் ஷா தாகர் 24, பெண்களுக்கானகால்ப் போட்டியில்,. மூன்று சுற்றுகளின் முடிவில் 205 புள்ளிகளுடன் (68,65,72) முதலிடம் பிடித்த திக்ஷா, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, 'டெப்லிம்பிக்ஸ்' வர லாற்றில் திக் ஷா கைப் பற்றிய 2வது தங்கம், 3வது பதக்கம் ஆனது. கடந்த 2017ல் வெள்ளி வென்ற இவர், 2021ல் தங்கம் வென்றிருந்தார்..இந்தியாவின்ஹர்ஷ் சிங் (238 புள்ளி), விபு தியாகி (240) ஆண்களுக்கான கால்ப் போட்டியில் பங்கேற்று முறையே 12, 14வது இடம் பிடித்தனர்.
உலக 15 குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ் தொடர் கிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,), பைனலுக்கு முதன்முறையாக இந்திய நட்சத்திரங்கள் முன்னேறி வரலாறுபடைத்தனர். இந்தியாவின் அருந்ததி பெண்களுக்கான 70 கிலோ பிரிவு பைனலில், 5-0 என உஸ்பெகிஸ்தானின் அசிசா ஜோகிரோவாவை வீழ்த்தி தங்கம் வென்றார். இந்தியாவின் மீனாக் ஷி பெண்களுக்கான 48 கிலோ பிரிவு பைனலில் ,5-0 என்ற கணக்கில் உஸ் பெகிஸ்தானின் போசி லோவா பர்ஜோனாவை தோற்கடித்து தங்கத்தை வென்றார். இந்தியாவின் பிரீத்தி பெண்களுக்கான 54 கிலோ பிரிவு பைனலில் ,5-0 என இத்தாலியின் சிரின் சராபியை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார். (80+ கிலோ) இந்திய வீராங்கனை நுபுர் ஷியோரன் 5-0 என உஸ்பெகிஸ்தானின் சோடிம் போவாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.இந்திய வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (51 கிலோ, எதிர்: ஜூவான் யி குவோ, சீனதைபே), ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ, எதிர்: உ ஷிஹ் யி, சீனதைபே), பர்வீன் ஹூடா (60 கிலோ, எதிர்: தகுச்சி அயாகா, ஜப்பான்) மற்ற எடைப்பிரிவு பைனலில் தங்கத்தை கைப்பற்றினர்.இந்தியாவின் பூஜா ராணி (80 கிலோ) பைனலில் வெள்ளி பதக்கம் கைப்பற்றினார்.சச்சின் சிவாச், ஹிதேஷ் குலியாஆண்களுக்கான பைனலில் தங்கம் வென்றனர். இந்திய வீரர்களான ஜதுமணி சிங் (50 கிலோ), அங்குஷ் பங்கல் (80 கிலோ), அபினாஷ் (65 கிலோ), பவான் பர்த்வால் (55 கிலோ), நரேந்தர் (+90 கிலோ) பைனலில் வெள்ளி வென்றனர்.