நவி மும்பையில் நடந்த பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பெண்கள் உலக கோப்பை தொடரில் முறையாக முதன் சாம்பியன் ஆகி புதிய வரலாறு படைத்தது.இந்திய அணி வீராங்கனைகள், தாஜ் ஓட்டலில் தங்கி, நேற்று மாலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.வீராங்கனைகள் அனைவரும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) 'லோகோ' பொறித்த, 'நேவி புளு' நிறத்தினால் ஆன 'கோட்', 'சூட்' அணிந்தருந்தனர். உலக கோப்பை தொடரில் அரையிறுதி, பைனலில் பங்கேற்று, கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா, காலில் காயமடைந்த பிரதிகா, வீல் சேருடன் வந்திருந்தார்.உலக கோப்பையை ஹர்மன் பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, மோடியிடம் வழங்கினர். மோடியை குறிக்கும் வகையில், 1ம் எண் கொண்ட, 'நமோ' என்ற பெயர் பொறித்த, நீல நிறஜெர்சியை வழங்கினர். இதில் இந்திய அணி வீராங்கனைகள் அனை வரும் கையெழுத்திட்டு இருந்தனர். வீராங்கனை களுக்கு பிரதமர் மோடி பாராட்டுதெரிவித்தார். தங்களது வெற்றி அனுப வங்களை வீராங்கனைகள் பகிர்ந்துகொண்டனர்.
நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் (50 ஓவர்), இந்திய அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36, முக்கிய காரணம். இவரது தந்தை ஹர்மந்தர் சிங் புல்லாருக்கு கிரிக்கெட், கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது. பின் பஞ்சாப் மோகா நகர கோர்ட்டில் கிளார்க் பணியில் 'செட்டில்' ஆனார். தந்தை பயிற்சி அளிக்க, இளம் வயதிலேயே ஹர்மன் பிரீத், கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். தற்போது 'உலகை' வென்று உச்சம் தொட்டுள்ளார். கிரிக்கெட் பற்றி அதிகம் அறியாத ஒருவர், நம் நாட்டின் பெண்கள் கிரிக்கெட்டில் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கனவு கண்டது பெரிய விஷயமல்லவா. தனிப்பட்ட முறையில் உலக கோப்பை வென்ற தருணம் மிகவும் உணர்ச் சிகரமானது. கிரிக்கெட் விளையாட துவங்கிய நாளில் இருந்து உலக கோப்பை வெல்வதே கனவாக இருந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால், கோப்பையை 'மிஸ்' செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் எனகூறினார்.உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் அவரது டில்லி வீட்டில் இன்று மாலை சந்தித்து ,பாராட்டு விழா நடக்க உள்ளது. இதற்காக ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட இந்திய அணியினர், மும்பையில்இருந்து தனி விமானம் மூலம் நேற்று டில்லி வந்தனர்.
செஸ் உலக கோப்பை 11வது சீசன் கோவாவில் மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று துவங்கியது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடுகின்றனர்.முதல் போட்டியில் பல்கேரியாவின் மார்டின் பெட்ரோவை, இந்தியாவின் அர்ஜுன், 37 வது நகர்த்தலில் வெற்றிபெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் லாரா (814 புள்ளி), 2 இடம் முன்னேறி, முதலிடம் பிடித்தார்.17 புள்ளியை இழந்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (811) 2வது இடம் பெற்றார். 9 இடம் முன்னேறிய இந்தியாவின் ஜெமிமா (658), ,டாப்-10' பட்டியலில் இடம் (10 வது) பிடித்தார்.இந்தியாவின் தீப்தி (657), பவுலர் தரவரி சையில் 5வது இடத்தில் நீடிக்கிறார்.ஐ.சி.சி., சார்பில் பெண்கள் உலக கோப்பை கனவு அணி வெளியிடப்பட்டது. இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்த ஹர்மன்பிரீத் கவுருக்கு இடமில்லை.இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்தி சர்மா என மூவர் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் லாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி ,(50 ஓவர்) இந்திய அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.கடைசிதருணத்தில் தீப்தி சர்மா ஓவரில் தென் ஆப்ரிக்கா வின் டி கிளர்க் அடித்தபந்தை ஹர்மன்பிரீத் கவுர் 'கேட்ச்' பிடித்தது, இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கியது. உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகள், 'எங்கள் மூவர்ணக் கொடி உயரே பறக்கும், நாம் ஒன்றாக எழு வோம், ஒன்றாக செயல்படுவோம், ஒன்றாக வெல்வோம், வீ ஆர் டீம் இந்தியா,' என,வெற்றி கீதம் பாடினர்.
உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய பெண்கள் அணிக்கு, இந்திய பி.சி.சி.ஐ கிரிக்கெட் போர்டு சார்பில் ரூ. 51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை (50 ஓவர் ) பைனலில் ஆட்ட நாயகி விருது வென்ற இளம் வீராங்கனையானார் (21 ஆண்டு, 278 நாள்) இந்தியாவின் ஷைபாலி வர்மா.உலக கோப்பை (ஒருநாள் போட்டி ) வென்ற இந்திய கேப்டன்கள் கபில்தேவ் (1983). தோனி (2011). பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (2025).
டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர், 11500 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து மீண்டும் 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார்.பிரான்சில் நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் ஒற்றையர் பைனலில் அசத்திய சின்னர் 6-4, 7-6 என கனடாவின் பெலிக்ஸ் அகுர்- அலியாஸ்சிமியை வீழ்த்தினார்.நடப்பு சீசனில் 5வது பட்டம் வென்ற இவர், ஒட்டுமொத்தமாக 23வதுகோப்பை வென்றார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (11250 புள்ளி) 2வது இடத்துக்கும் ,நோவக் செர்பியாவின் ஜோகோவிச் (4580) 5வது இடத்தில் நீடிக்கிறார்.
பெண்களுக்கான 'டபிள்யு. டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் சென்னையில், ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய ஜானிஸ் டிஜென், ஜென், 2வது செட்டை 6-3 என வென்றார்.ஜானிஸ் டிஜென் இரண்டு மணி நேரம் நீடித்த பைனலில் ,6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, டபிள்யு.டி.ஏ., டூர் ஒற்றையரில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றினார்.
செஸ் உலக கோப்பை 11வது சீசன் கோவாவில் , இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், திவ்யா உள்ளிட்ட 206 பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்தியாவின் பிரனேஷ்,கஜகஸ்தானின் சட்பெக் அக் மெடினோவா மோதினர். முதல் போட்டியில் பிரனேஷ் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் பிரனேஷ், 44வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். முடிவில் பிரனேஷ் 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, அஜர்பெய்ஜானின் அகமது அகமத்ஜடா மற்றொருபோட்டியில் மோதினர். இரண்டு போட்டியிலும் 2.0-0.0 என வென்ற சூர்ய சேகர் 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடர் துபாயில், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள் ஸ்டேன் டிங் எஸ்.எச். 1' பிரிவில் இந்தியாவின் அவனி லெஹரா பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 626.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் அவனி, 249.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.கலப்பு 50 மீ., 'பிஸ்டல் எஸ்.எச். 1' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின்சந்தீப் குமார் (543.6 புள்ளி), ஆகாஷ் (539.11) முதலிரண்டு இடங்களைபிடித்தனர்.அடுத்து நடந்த பைனலில் ஆகாஷ், 223.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சந்தீப் (220.5) வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.