பிரான்சில், உள்ளரங்கு சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி 25, பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 8.07 வினாடியில் இலக்கை அடைந்து 3வது இடம் பிடித்த ஜோதி, தேசிய சாதனையுடன் பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஜோதி, பந்தய துாரத்தை 8.04 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், இலக்கை குறைந்த நேரத்தில் கடந்து தனது சொந்த தேசிய சாதனையை மீண்டும் முறியடித்தார்.ஆண்களுக்கான 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் தேஜாஸ் ஷிர்ஸ் (7.68 வினாடி) வெண்கலம் வென்றார்.
கிரிக்கெட் ரஞ்சி கோப்பை, தமிழகம் வெற்றி இந்திய கிரிக்கெட் போர்டு (PCCI,) சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடத்தப்படு கிறது. சேலத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டி யில் தமிழகம், சண்டிகர் அணிகள் மோதின. ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி 209 ரன் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தியது. ஆறு போட்டியில், 3 வெற்றி, 3 'டிரா' என 25 புள்ளிகளுடன் தமிழக அணி 'டி' பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது. பெண்கள் 'டி-20' உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா. மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. நேற்று, கோலாலம்பூரில் நடந்த 'குரூப்-1' பிரிவு, 'சூப்பர்-6' போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. குரூப்-1' பிரிவில் முதலிடம் பெற்ற இந்தியா(9 புள்ளி) அரையிறுதிக்குள் நுழைந்தது. குத்துச்சண்டைலாஸ் வேகாசில் நடந்த தொழில்முறை குத்துச் சண்டையில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், 'நாக் - அவுட்' முறையில் அமெரிக்காவின் ஆல்டன் விக்கின்சை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடர் மெல்போர் னில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பைனலில் உலகின் 'நம்பர்-1 வீராங்கனையான பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீசை 29, ('நம்பர் - 14') எதிர்கொண்டார்.2 மணி நேரம், 4 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ், 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, ஆஸ்திரேலிய ஓபன். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் மேடிசன் கீஸ் வென்ற முதல் பட்டம். கோப்பை வென்ற மேடிசன் கீசிற்கு, ரூ. 30 கோடி. இரண்டாவது இடம் பிடித்த சபலென் காவுக்கு ரூ.16.4 கோடி வழங்கப்பட்டன.
கிரிக்கெட் உலக கோப்பைக்குப் பின் இந்திய அணி கடைசியாக, சென்னையில் கடந்த 2023 அக். 8ல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றது. 474 நாளுக்குப் பின் இந்திய அணி, மீண்டும் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்குகிறது. இரு அணிகளும் 25 'டி-20' போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 14, இங்கிலாந்து 11ல் வென்றன. சேப்பாக்கத்தில் முதல் முறையாக மோத உள்ளன .செஸ் இந்தியா சார்பில் மலேசியாவில் ஜோஹர் சர்வதேச செஸ் தொடரில் இனியன் (தமிழகம்), ராகுல் உட்பட மொத்தம் 84 பேர் பங்கேற்ற னர். 9 சுற்று போட்டி நடந்தன. சமீபத்தில் சென்னையில் நடந்த சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் கோப்பை வென்ற இனியன், மீண்டும் சிறப்பாக செயல்பட்டார்.முதல் 2 சுற்றில் வெற்றி பெற்ற இவர், 3வது சுற்றில் 'டிரா' செய்தார். அடுத்த 5 சுற்றில் வெற்றி பெற்றார். கடைசி, 9வது சுற்றில் இனியன், வியட்நாமின் நிகுவேன் வானை வீழ்த்தினார்.8.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்த 22 வயது இனியன் கோப்பை வென்றார். ஹாக்கி ஹாக்கி இந்தியா லீக் பைனலில் சூர்மா, ஒடிசா அணிகள் மோதுகின்றன.ராஞ்சி (ஜார்க்கண்ட்), ரூர்கேலாவில் (ஒடிசா) பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் நடக்கிறது. மொத்தம் 4 அணிகள் லீக் சுற்றில் மோதின. ஒடிசா, முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்தது. ஆறு போட்டியில், 4 வெற்றி உட்பட 13 புள்ளி களுடன் முதலிடம் பிடித்த சூர்மா அணி பைனலுக்கு முன்னேறியது.நாளை, ராஞ்சியில் நடக்கவுள்ள பைனலில் சூர்மா, ஒடிசா அணிகள் விளையாடுகின்றன.
மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் சாத்விக் - சிராக் தோல்வி.இந்தோனேஷியாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் தொடர் நடக்கிறது.இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, காய்லாந்தின் கிட்டினுபோங் கெட்ரென், டெச்சபோல் ஜோடியை சந்தித்தது.சாத் விக், சிராக் ஜோடி 20-22, 21-23 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோடோ மோதினர். இதில் லக்சயா சென் 16- 21, 21-12, 21-23 என போராடி வீழ்ந்தார். டென்னிஸ்ல் சஹாஜா காலிறுதிக்குள் நுழைந்தார்.பெங்களூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சஹாஜா, ரஷ்யாவின் டிமோபீபாவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 6-1 என வசப்படுத்திய சஹாஜா, அடுத்த செட்டை 3-6 என இழந்தார். மூன்றாவது செட்டினை 6-1 என கைப்பற்றினார். 2 மணி நேரம், 2 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா, 6-1, 3-6, 6-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
நெதர்லாந்தில் சர்வதேச செஸ் மாஸ்டர்ஸ் பிரிவின் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட்டை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 72வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் இவர் பெற்ற இரண்டாவது வெற்றி இது.ஐந்து சுற்று முடிந்த நிலையில்,நேற்று சர்வ தேச செஸ் கூட்டமைப் பின் ('பிடே') 'லைவ்' ரேட்டிங் பட்டியல் வெளியானது. உலக சாம்பியன் குகேஷ், 2784 புள்ளியுடன் இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார். உலக அளவில் 'நம்பர்-4' வீரர் ஆனார். நெதர்லாந்து தொடரில் 2 வெற்றி (3 'டிரா') பெற்றதால் 7 புள்ளி கூடுதலாக பெற, இந்த முன்னேற்றம் கிடைத்தது.
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. கோலாலம் பூரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, இலங்கை அணிகள் மோதின 'டாஸ்' வென்ற இலங்கை அணி பீல் டிங்' தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்தது. இலங்கை அணி 20 ஓவரில் 9 விக் கெட்டுக்கு 59 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 6 புள்ளிகளுடன் 'ஏ' பிரி வில் முதலிடம் பிடித்து 'சூப்பர்-6' சுற்றுக்குள் நுழைந்தது.
கோல்கட்டாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது 'டி-20' போட்டி, நாளை சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று சென்னை வந்தனர். 7 ஆண்டுக்குப் பின் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 'டி-20' போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது
குளிர்கால விளையாட்டு “கேலோ இந்தியா' 19 அணிகளை சேர்ந்த 428 பேர் பங்கேற்கும் ,'கேலோ இந்தியா' குளிர்கால விளை யாட்டு லடாக்கில், இன்று துவக்கம். 19 அணிகளை சேர்ந்த 428 பேர் பங்கேற்பு. ஐஸ் ஹாக்கி, ஸ்கேட்டிங் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பெங்கால் அணி வெற்றிஹாக்கி இந்தியா லீக் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது .போட்டியில் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் டில்லியை வீழ்த்தியது. இது, பெங்கால் அணியின் 2வது வெற்றியானது. CRIKET முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி வெற்றிஅபிஷேக் சர்மா 20 பந்தில் அரைசதம் விளாச, முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி 12.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 'டி-20' தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண் டாவது 'டி-20' போட்டி, வரும் 25ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்தியாவின் குகேஷ், அர்ஜுன், நார்வேயின் கார்ல்சன், அமெரிக்காவின் காருணா, நகமுரா, சீனாவின் வெய் யி நார்வே செஸ் தொடரில் (மே 26 ஜூன் 6) பங்கேற்கின்றனர்.