25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Nov 03, 2025

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி13 வது சீசனில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை  வென்றது.

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப் பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. முதல் முறையாக நடந்த இந்த சாதனையைஇந்திய ரசிகர்கள் கொண்டாடினர். 13-வது சீசன் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை புறநகரான நவி மும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று  நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதினர் .  திட்ட மிட்டநேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. மழையால் 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரை இறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர்.இந்திய அணி 50 ஓவர்களில் ,7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள்,  வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலக கோப்பையை வென்றது.

Nov 01, 2025

இந்திய பெண்கள் அணிஉலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது.

பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இந்தியா, இலங்கையில், நவி மும்பையில் நடந்த 2வது அரையிறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127*), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89) கைகொடுக்க, இந்திய அணி (341/5, 48.3 ஓவர்) 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை (338/10, 49.5 ஓவர்) வென்றது.பெண்கள் ஒருநாள் போட்டி அரங்கில் இந்திய அணி,  அதிக ரன்னை 'சேஸ்' செய்து வரலாறு படைத்து,3வது முறையாக (2005, 2017, 2025) பைனலுக்கு முன்னேறியது. நாளை, நவி மும்பையில் நடக்கவுள்ள பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இதில் ஜெமிமா 'மேஜிக்' பேட்டிங் தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய பெண்கள் அணிக்கு, சச்சின், கும்ளே, யுவராஜ், கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Nov 01, 2025

புரோ கபடி லீக்12வது சீசன் தொடரில், சாம்பியன் ஆன, டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலை வாஸ், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. நேற்று, டில்லியில் நடந்த பைனலில் புனே, டில்லி அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டில்லி அணியினர், புனே அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் டில்லி அணி 20-14 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட புனே அணிக்கு 14 புள்ளி மட்டும் கிடைத்தது. ஆட்டநேர முடிவில் டில்லி  அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2021-22, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.புரோ கபடி சாம்பியன் டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது. புனே அணிக்கு ரூ.1.8 கோடி கிடைத்தது.

Nov 01, 2025

இந்தியாவின் உன்னதி ஹூடா 'ஹைலோ' ஓபன் சர்வ தேச பாட்மின்டன் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் .

ஜெர்மனியில் 'ஹைலோ' ஓபன் சர்வ தேச பாட்மின்டன் தொடர் ஜெர்மனியில் ,பெண்கள் ஒற்றையர்காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா ('நம்பர்-34'), தைவானின் ஹிசியாங்கை ('நம்பர்-4) எதிர்கொண்டார். உன்னதி முதல் செட்டை 22-20 என கைப்பற்றினார் .அடுத்த செட்டை 21-13 என வசப்படுத்தி, முடிவில் 22-20, 21-13 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். 

Oct 31, 2025

இந்தியா ஆசிய யூத் விளையாட்டில்  ஒரே நாளில் 21 பதக்கம் வென்றது.

ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பஹ்ரைனின் மனாமா நகரில் ,பீச் மல்யுத்தம் 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 55 கிலோ பிரிவுபைனலில் இந்தியாவின் அஞ்சலி, 2-1 என வியட்நாமின் தோம் தாவோவை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றார்.ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சுபாஷ், 2-0 என ஈரானின் அமிராலியை வென்று, தங்கம் வென்றார்.90 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அர்ஜுன், 2-1 என ஈரானின் முகமதுமதியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார். மற்ற - இந்திய வீரர்கள் ரவிந்தர் (80 கிலோ), சுஜாய் (70 கிலோ) பைனலில் தோற்க, வெள்ளிப்பதக்கம் வென்றனர்.இந்தியாவின் சந்திரிகா (50 கிலோ), பெண்களுக்கான குத்துச்சண்டை பைனலில்  5-0 என உஸ்பெகிஸ்தானின் கும்ரின் சோவை வென்று ,தங்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் ஆஹானா (50 கிலோ), வடகொரியாவின் ஜோங் ஹயாங்கை வென்று தங்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் குஷி சந்த் 46கிலோ பிரிவில், 4-1 என ஜின் ஜியுவை (சீனா) வென்று, தங்கம் வென்றார். இதுவரை இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 17 வெண்கலம், என மொத்தம் 47 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது.

Oct 31, 2025

கிரிக்கெட் பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை பைனலுக்குஇந்திய அணி முன்னேறியது.

பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இந்தியா, இலங்கைவில், நடக்கிறது.இதன் பைனலுக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது.நவி மும்பையில் உள்ள டி.ஒய்.  பாட்டீல் மைதானத்தில் நேற்று,  நடந்த 2வது அரையிறுதியில் இந்தியா, ‘நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணி   49.5  ஒவரில்  338 ரன்னுக்கு  ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 48.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 341 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி 3வது முறையாக (2005, 2017, 2025) உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது. 

Oct 31, 2025

ஆஸ்திரேலியாவின் 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் ,பயிற்சியின்போது கழுத்தில் பந்து தாக்கியதால்  மரணம் .

ஆஸ்திரேலியாவின் 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின். பெர்ன்ட்ரீ கல்லி, ராவ்வில்லே, எடிசன் பார்க் கிளப் அணிகளுக்காக விளையாடினார்.'T-20' போட்டிக்கு தயாராகும் வகையில், மெல்போர்னின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள பெர்ன்ட்ரீ கல்லி மைதானத்தில் சக வீரர்களுடன் இணைந்து, கடந்த அக். 28ல் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது 'த்ரோடவுன்' முறையில் சக வீரர் ஒருவர் வீசிய பந்தை எதிர்கொண்டார் பென். தலையில் 'ஹெல்மெட்' அணிந்திருந்த போதும், பந்து  கழுத்து, தலைப்பகுதியில் பலமாக தாக்கியது. உடனடியாக மயங்கி சரிந்த இவரை, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 'வென்டி லேட்டர்' பொருத்தப்பட்டு சிகிச்சை தரப்பட்டது.  இரண்டு நாள் சிகிச்சை பலன் தராத நிலையில், பென் மரணம்   அடைந்தார். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, பென்னுக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசிய சக வீரரை, அதிகம் பாதித்து இருக்கும். 

Oct 30, 2025

இந்தியாவின் யாஷிதா ஆசிய யூத் விளையாட்டு மல்யுத்தத்தில் தங்கம் வென்றார்.

பஹ்ரைனின் மனாமா நகரில், ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பஹ்ரைனின் மனாமா நகரில் ,பெண்களுக்கான 61  கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில்  யாஷிதா 17, பங்கேற்றார். அரையிறுதியில் கிர்கிஸ்தானின் அகிலய்யை, 6-0 என வென்றார்.பைனலில் யாஷிதா, கஜகஸ்தானின் ஜைதரை சந்தித்தார். முதல் பீரிய டில் (3 நிமிடம்), யாஷிதா 0-1 என பின் தங்கினார். இரண்டாவது " பீரியடில் யாஷிதா 5-4 என ,முடிவில் ஸ்கோர் 5-5 என ஆனது. கடைசி புள்ளி எடுத்த அடிப்படையில் யாஷிதா வெற்றி பெற்றார். இந்தியாவுக்கு யூத் ஆசிய மல் யுத்தத்தில் முதல் தங்கம் வென்று தந்தார்.இதுவரை இந்தியா 4 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம், என மொத்தம் 26 பதக்கம் வென்று, பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

Oct 30, 2025

இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, சஹாஜா ,சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ்தொடர் சென்னையில், ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின்ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி மோதினர். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் ,ராஷ்மிகா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் சஹாஜா, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா மோதினர். 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சஹாஜா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 1-6, 2-6 என  குரோஷியாவின் டோனா வெகிக்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியோனோவா, கிம் பர்லி பிர்ரெல், ஸ்டிரோம் ஹன்டர், சீனதைபேயின் ஜோனா கார்லாண்ட், பிரான்சின் டயான் பாரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Oct 30, 2025

இந்தியாவின் ரோகித் சர்மா ஐ.சி.சி ஒருநாள் போட்டி பேட்டர் தரவரிசையில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்தார்.

 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி. சி.,) ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட் டியலை , துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, 781 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து முதன் முறையாக  'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சதம் (121*) விளாசினார் .இதன்மூலம் ஐ.சி. சி., தரவரிசை பட்டியலில் அதிக வயதில் (38 ஆண்டு, 182 நாள்) 'நம் பர்-1' இடம் பிடித்த வீரரானார். 

1 2 ... 90 91 92 93 94 95 96 ... 171 172

AD's



More News