25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


கணைய பாதிப்பு எதனால்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கணைய பாதிப்பு எதனால்..

கணையம் என்பது மனித உடலில், வயிற்றுக்கு பின்னால்  உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும். இது உணவு செரிமானம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான சுரப்பி மற்றும் உட்சுரப்பி என்று 2 விதமாக செயல்படும். செரிமான சுரப்பியாக செயல்படும் நிலையில், என் சைம்கள் என்ற நொதிகளை உற்பத்தி செய்து உணவை செரிக்க உதவுகிறது. உடலில் அமிலம், புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடைக்கவும், சிறுகுடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் செய் கிறது. உட்சுரப்பி நிலையில் செயல்படும்போது, ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த இன்சுலின் மற்றும் குளூகோகான் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது.

 கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள், கணையத்தின் லாங்கர்ஹான்ஸ் என்ற பகுதியில் இருக்கும் சிறப்பு நாளமில்லா செல்கள், ஹார்மோன்களை சுரந்து உடலில் சர்க்கரையின் சமநிலையை பேண உதவும் வகையில் இன்சுலினை வெளியிடுகின்றன. அதிகமாக மது குடிப்பது, பித்தக்கற்கள், கணைய சாற்றுநீர் வெளியேறும் பாதை தடைபடுவது, அழற்சி ஏற்படுவது போன்றவற்றால் கணையம் வலுவிழக்கிறது. புற்று நாய், இன்சுலின் உற்பத்தி குறைந்து ரத்த சர்க்கரை சமநிலை பிழந்தாலும் கணையம் பாதிக்கப்படுகிறது.அதிககொழுப்பு, கணையச் செல்களுக்கு நேரடி காயம், தொற்று போன்றவையும் கணைய செயல் இழப்புக்குகாரணமாக வாய்ப்பு உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News