25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Dec 12, 2025

CRIKET 'டி-20' தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்றது.

 'டி-20' தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டி கொண்ட முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று பஞ்சாப் மாநிலம், முல்லன்புரில் (புதிய சண்டிகர்) உள்ள மஹாராஜா யாதவிந்த்ரா சிங் மைதானத்தில், இரண்டாவது போட்டி  முதன் முறையாக நடந்தது.'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 213/4 ரன் குவித்தது. இந்திய அணி 19.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமனில் உள்ளது.மூன்றாவது போட்டி டிச.14-ல் தர்மசாலாவில் நடக்க உள்ளது. 

Dec 12, 2025

சிவகாசி அருகே நாரணாபுரம் கண்ணா நகரை சேர்ந்த பாண்டிமாதேவி சர்வதேச பளுதுாக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.

அச்சக தொழில் செய்து வரும் தவசிக் குமார் 56. இவரது மனைவி உணவியல்நிபுணராக பாண்டிமாதேவி 50. இந்தத் தம்பதியினரின் இரு மகன்களுக்கும் திருமணமாகி பேரன்கள் உள்ளனர். பாண்டிமாதேவி நவ 30ல் தாய்லாந்தில் நடந்த சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்றார். 20 நாடுகளிலிருந்து 250க்கும்  மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், இதில் இந்தியாவிலிருந்து 19 பேர் கலந்து கொண்டனர்.வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில் 40 முதல் 50 வயதுக்குட்பட்டோருக்கான தனிப்பிரிவில் 310 கிலோ எடையை துாக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். கடந்த மூன்றுஆண்டாகஇப்போட்டிக்குதயாரானேன்.ஏற்கனவேமாநிலஅளவில் 5 போட்டிகளிலும், தேசியஅளவில் 3 போட்டிகளிலும் தங்கம் வென்று தாய்லாந்து போட்டிக்கு தேர்வானேன்.பாண்டிமா தேவி கூறு கையில் "சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையல்ல. 37 வயதிற்குப்பிறகு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் தூண்டப்பட்ட எனக்கு 50 வயதில் சர்வதேச பளு துாக்குதலில் தங்கப்பதக்கம் வென்றதை நினைத்துபெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக பெருமிதம் கொள்கிறேன்.பல்வேறு போட்டிகளில் சாதனை படைக்க ஆசைப்படுகிறேன்" என்றார். 

Dec 11, 2025

மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில்இந்தியாவின் உன்னதி ஹூடா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா 18, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரகிருதி பாரத் மோதினர். உன்னதி 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-8, 17–21, 21-18 என, ஜப்பானின் அனா இவாகியை வென்றார். இந்தியாவின் அனுபமா 21-14, 21-13 என இந்தோனேஷியாவின் தலிலா அக்னியா புடேரியை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

Dec 11, 2025

பெண்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி11வது சீசனில் இந்திய அணி வெற்றி பெற்றது.

பெண்களுக்கான ஜூனி யர் உலகக்கோப்பை ஹாக்கி 11வது சீசன் சிலியில் 'சி' பிரிவு லீக் சுற்றில் நமீபியா, அயர்லாந்தை வென்ற இந்தியா, ஜெர்மனியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. இந்திய அணி அடுத்து நடந்த 9-16வது இடத்துக்கான போட்டியில், வேல்சை வென்றது.இந்தியா, உருகுவே அணிகள் ,நேற்று நடந்த 9-12 வது இடத்துக்கான போட்டியில் மோதின. இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது.  இந்திய அணிக்கு மணிஷா (19வது நிமிடம்) கைகொடுத்தார். போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அசத்திய இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பூர்ணிமா யாதவ், இஷிகா, கனிகா சிவாச் கோல் அடித்தனர்.

Dec 11, 2025

ஜூனியர் உலகக்கோப்பை  ஹாக்கியில் இந்தியஅணி வெண்கலம் வென்றது.

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், நடந்தது. நேற்று, சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின. தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 57 வது நிமிடத்தில் 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. எளிதான இந்த வாய்ப்பை, திவாரி ஷர்தானந்த் கோலாக மாற்ற, இந்தியா 3-2 என முந்தியது. அடுத்த நிமிடம் அன்மோல் எக்கா (58வது) 'பெனால்டி கார்னரில்' கோல் அடிக்க, ரசி கர்கள் உற்சாகம் அடைந்தனர். முடிவில் இந்திய அணி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக வெண்கலம் கைப்பற்றியது.9 ஆண்டுகளுக்கு பின்ஜூனியர் உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. 2016-ல் சாம்பியன் பட்டம்வென்றிருந்தது. 

Dec 10, 2025

ஜூனியர் 'உலக' ஹாக்கியில் இன்று நடக்கும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், நடக்கும் கடைசி நாளான இன்று 'டாப்-8' இடங்களை பெற போட்டிகள் நடக்கின்றன.சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அர்ஜென்டினாவை இந்திய அணி,  எதிர்கொள்கிறது. காலிறுதியில் லீக் சுற்றில் 100 சதவீத வெற்றி பெற்ற இந்திய அணி, 'பெனால்டி ஷூட் அவுட்டில்' பெல்ஜியத்தை வென்றது.   இரவு நடக்கும் பைனலில் 7 முறை சாம்பியன், உலகின் 'நம்பர்-1' ஜெர்மனி, ஸ்பெயின், அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னையில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்காவைவென்று, 11 வது இடம் பெற்றது.'பெனால்டிஷூட் அவுட்டில்' ஜப்பானை வென்ற மலேசியா (3-0) 13வது இடம் பெற்றது. சிலி அணி 2-1 என சுவிட்சர்லாந்தை வென்று, 15வது இடம் பிடித்தது.

Dec 10, 2025

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி இந்தியா வருகிறார்.

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது.இதையடுத்து, இந்தியாவில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி பங்கேற்கும் 'நட்பு' போட்டிக்கு, கேரளா மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைசியில் இப்போட்டி ரத்தானது. மூன்று நாள் பயணமாக'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, டிசம்பர் 13 அதிகாலை 1:30 மணிக்கு இந்தியா வருகிறார். அர்ஜென்டினா அணி மத்தியகள வீரர் ரோட்ரிகோ டி பால் ,இவரது நீண்ட கால கிளப் அணி நண்பர்உருகுவேயின் லுாயிஸ் சாரஸ், என மூன்று  பேர் வருகின்றனர்.கோல்கட்டா, இ.எம் பைபாஸில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் காலை 9:30 முதல் 10:30 மணி வரை ஸ்பான்சர் சந்திப்பு நடக்கிறது.பின் இந்தியா-அர் ஜென்டினா உணவுத்திருவிழா நடக்கிறது.அடுத்து தனது ஆளுயர சிலையை திறந்து வைக்கிறார்.பின் சால்ட் லேக் மைதானத்தில், மெஸ்ஸிக்கு ஓவியம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதில் 70,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரள உள்ளனர்.   மூன்றாவது நாள் டிசம்பர் 15, டில்லி செல்லும் மெஸ்ஸி, மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.

Dec 10, 2025

இந்திய அணி கட்டாக் டி-20  முதல் போட்டியில் வெற்றி பெற்றது .

 தென் ஆப்ரிக்க அணி, 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது. நேற்று ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார்.  இந்திய அணி 20 ஓவரில் 175/6 ரன் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய  தென் ஆப்ரிக்க அணி 12.3 ஓவரில் 74 ரன்னுக்கு தோல்வியடைந்தது.ஹர்திக் பாண்ட்யா, 25 பந்தில் அரைசதம் விளாச, இந்திய அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது 'டி-20' போட்டி, டிச.11ல் சண்டிகரில் நடக்க உள்ளது.

Dec 10, 2025

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய ஹாக்கி போட்டியில்  2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

உலகின் 'நம்பர்-7' ஆக உள்ள இந்திய ஹாக்கி அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.நேற்று கேப்டவுனில் இரண்டாவது போட்டி நடந்தது. முதல் பாதியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் தென் ஆப்ரிக்காவின் தயான் (31), நீத்லிங் 37) அடுத்தடுத்து கோல் அடிக்க, 2-1 என முன்னிலை பெற்றது.ஹர்மன்பிரீத்சிங் ,போட்டியின்49வதுநிமிடத்தில்ஒருகோல் அடித்தார்.முடிவில்போட்டி 2-2 என்றகோல்கணக்கில் 'டிரா' ஆனது.மூன்றாவது, கடைசி போட்டி இன்று நடக்கிறது. 

Dec 10, 2025

கிரிக்கெட் இந்திய பெண்கள் அணியில் இடம் பெற்றுள்ள தமிழகத்தின் கமலினி.

இந்தியா வரவுள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் விசாகப்பட்டினம் (டிச. 21, 23), கடைசி 3போட்டிகள் திருவனந்தபுரத்தில் (டிச.. 26, 28, 30) நடக்க உள்ளன.இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தின் மதுரையை சேர்ந்த விக்கெட் கீப்பர் கமலினி 17, வைஷ்ணவி சர்மா 19, அறிமுக வாய்ப்பு பெற்றனர். பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் இருவரும் மும்பை அணிக்காக விளையாடுகின்றனர்.

1 2 ... 87 88 89 90 91 92 93 ... 181 182

AD's



More News