25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


விளையாட்டு (SPORTS)

Feb 10, 2025

தேசிய கெட்டில்பெல்,  போட்டி.ஒன்பது தங்கம்வென்ற தமிழகம்,

(18-69 வயது) தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள்  டில்லியில்  கெட்டில்பெல்  சாம்பியன் ஷிப் போட்டியில்  பங்கேற்றனர்,மீனா மோகன் 2, விக்னேஷ் ஹரிஹரன், அஜய் கார்த்திக், விளாசினி, சராயு, ஷக்தி, பஹதுார், ஷர்மிலா தலா ஒன்று என ஒன்பது தங்க பதக்கஙகளைதமிழகம் சார்பில் வென்றனர்.அஜய், வந்தனா,ஷர் மிளா தலா ஒரு வெள்ளி, அஜய், ராயு, ரோஹித் தலா ஒரு வெண்கலம் வென்றனர். மொத்தம் ஒன்பது தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் வென்ற, தமிழக வீரர், வீராங்கனையருக்கு பாராலிம்பிக் சாம்பியன் தீபாமாலிக் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். 

Feb 09, 2025

விளையாட்டு போட்டிகள்  FEBRUARY 9TH

கால்பந்து இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, கோல்கட்டா வில் நடந்த லீக் போட் டியில் ஈஸ்ட் பெங்கால், சென்னை மோதின.  ஆட்டநேர முடிவில் சென்னை அணி 3-0 என்ற  கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டென்னிஸ் டில்லி ஓபன் சேலஞ்சர் (பிப். 10-16) ஒற்றையர் பிரதான சுற்றில் பங்கேற்க இந்தியாவின் சசிகுமார் முகுந்த், ராம்குமார் ராமநாதன், கரண் சிங்கிற்கு 'வைல்டு கார்டு' அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  உத்தரகாண்ட்டில், தேசிய விளையாட்டு 38வது சீசன் . போல் வால்ட்.  தமிழகத்தின் பவித்ரா வெங்கடேஷ் ,பெண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில், 3.95 மீ., தாண்டி தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை பரானிகா இளங்கோவன் (3.90 மீ.,) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். கேரளாவின் மரியா ஜெய்சனுக்கு (3,90 மீ.,) வெண்கலம் கிடைத்தது. நீளம்தாண்டுதல்   தமிழகத்தின் ஸ்ரீராம் விஜயகுமார் ,ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் 7.70 மீ., தாண்டி வெள்ளி வென்றார். உ.பி.,யின் ஷாநவாஸ் கான் (7.70 மீ.,), கேரளாவின் அனுராக் (7.70 மீ.,) முறையே தங்கம், வெண்கலம் கைப்பற்றினர். வட்டு எரிதல்  ஹரியானாவின் சீமா, பெண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் ,52.70 மீ., எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை டில்லியின் பாவனா யாதவ் (52.70 மீ.,), பஞ்சாப்பின் அமானத் கம் போஜ் (52.70) வென்றனர். செஸ் ஜெர்மனியின் கீமர் ,இந்தியாவின் குகேஷ் மோதிய பிரீஸ்டைல் தொடரின் (ஜெர்மனி) 7வது சுற்று 'டிரா' ஆனது. குகேஷ் 3.0 புள்ளிகளுடன் (6 'டிரா', ஒரு தோல்வி) 7வது இடத்தில் உள்ளார். ஓட்டப்பந்தயம்  ஓட்டத்தின் பைனலில் பெண்களுக்கான 10,000 மீ., பந்தய துாரத்தை 33 நிமிடம், 33.47 வினாடியில் கடந்த மகாராஷ்டிராவின் சஞ்சி வானி யாதவ் தங்கம் வென்றார்.  ஓட்டத்தின் பைனலில் ஆண்களுக்கான 10,000 மீ., இமாச்சல பிரதேசத்தின் சவான் பார்வல் (28 நிமிடம், 49.93 வினாடி) தங்கம் வென்றார்.  டில்லியின் சந்தா பெண்களுக்கான 1500 மீ., ஓட் டத்தின் பைனலில் (4 நிமிடம், 17.74 வினாடி) தங்கம் வென்றார். 

Feb 07, 2025

பாராலிம்பிக் வில்வித்தை யில்  இரண்டு தங்கம் வென்ற இந்தியா.

தாய்லாந்தில் ஆசிய பாரா கோப்பை உலக ரேங்கிங் தொடர் நடக்கிறது. 'ரீகர்வ்' அணிகளுக்கான பைனலில், பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் ஹர்விந்தர் சிங், தன்னா ராம் ஜோடி, இந்தோனேஷியாவின் ஹோலிடின், செடியவான் ஜோடியை சந்தித்தது. 4 செட் முடிவில் போட்டி 4-4 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப் முடிவில் இந்தியா 17-16 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. பெண்களுக்கான காம் பவுண்டு பிரிவு பைனலில் இந்தியாவின் சரிதா, ஜோதி ஜோடி, சீன தைபேவின் லீயுன், வாங்ஹிசின் ஜோடியை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி முதல் இரு செட்டை (36-32, 36-34) வென்றது. தொடர்ந்து கடைசி இரு செட்டையும் (36-33, 38-34) கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 146-133 என வென்று, தங்கப்பதக்கம் வசப்படுத்தியது.ஆண்கள் காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்தியா வின்ஷ்யாம் சுந்தர், ராகேஷ் குமார் ஜோடி  149-150 என, தாய்லாந்து ஜோடி யிடம் போராடி தோற்க, வெள்ளி வென்றது. 

Feb 07, 2025

விளையாட்டு போட்டிகள் 8th FEBRUARY

 டென்னிஸ் இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் ஆண்கள் அணிகளுக்கான டென்னிஸ் பைனலில் தமிழகம், கர்நாடகா மோதின. முதல் போட்டியில் தமிழகத்தின் அபினவ் சண்முகம் 3-6, 7-6, 6-4 என ரிஷி ரெட்டியை வீழ்த்தினார்.இரண்டாவது போட்டியில் தமிழகத்தின் மணிஷ் சுரேஷ்குமார், பிரஜ்வல் தேவை சந்தித்தார். இதில் மணிஷ்  5-7, 6-4, 6-4 என வென்றார். முடிவில் 2-0 என வெற்றி பெற்று, தமிழக அணி தங்கப்பதக்கம் கைப்பற்றியது.  மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, ஜப்பானின் மெய்யமாகுச்சி மோதினர்.இதில் மாயா ரேவதி 6-4, 3-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தார். இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்பரே, நெதர்லாந்தின் அரி யோன்ஹார்டோனோ, ஜோடி 2-6, 6-4, 10-2 என பிரிட்டனின் ஈடன் சில்வா, ரஷ்யாவின்அனஸ்டாசியா, டிகோனோவா ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.  செஸ்ஜெர்மனியில் நேற்று துவங்கிய பிரீஸ்டைல் தொடரின் முதல் நான்கு சுற்று முடிவில், உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், 1.5 புள்ளியுடன் (3 'டிரா', 1 தோல்வி) ஆறாவது இடத்தில் உள்ளார். கிரிக்கெட் இந்தியாவின் முதல் தர ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 90 வது சீசன்.லீக் சுற்று முடிந்த நிலையில் இன்று காலிறுதி போட்டிகள் துவங்குகின்றன. நாக்பூரில் நடக்கும் போட்டியில் தமிழகம், விதர்பா அணிகள் மோதுகின்றன. குத்துசண்டை பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ பிரிவு பைனலில் அசாமின் லவ்லினா, சண்டிகரின் பிரான்ஷு மோதினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா, 5-0 என எளிதாக வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றினார். காமன்வெல்த் போட்டியில் 60 கிலோ பிரிவு பைனலில் வெண்கலம் கைப்பற்றிய, வீராங்கனை சர்வீசஸ் ஜாஸ்மின், 5-0 என, உலக சாம்பி யன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மணிஷாவை (ஹரியானா) சாய்த்து தங்கம் வசப்படுத்தினார்.ஆண்களுக்கான வெல்டர்வெயிட் (63.5 கிலோ) பிரிவு பைனலில் ஆறு முறை ஆசிய சாம்பியன் ஆன அசாமின் ஷிவா தபா, சர்வீசஸ் அணியின் வன்ஷாஜ் மோதினர். இதில் ஷிவா தபா 3-4 என போராடி தோற்க, வெள் ளிப்பதக்கம் கிடைத்தது. வன்ஷாஜ் தங்கம் வென்றார்.

Feb 06, 2025

விளையாட்டு போட்டிகள். 7th FEBRUARY

பீச் வாலிபால், உத்தரகாண்ட்டில், தேசிய விளையாட்டு 38வது சீசன் பீச் வாலிபால் போட்டியில் தமிழக பெண்கள் அணி தங்கம் வென்றது. பெண்களுக்கான பீச் வாலிபால் பைனலில் தமிழகம், புதுச்சேரி அணிகள் மோதி, (21-15, 21-11) கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றது. ஆண்களுக்கான பீச் வாலிபால் பைனலில் தமிழ கம், ஆந்திரா அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய தமிழக அணி (23-25, 19-21) என்ற கணக்கில் தோல்விய டைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆந்திராவுக்கு தங்கம் கிடைத்தது. டென்னிஸ் சென்னையில், ஏ.டி. பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, ரஷ் யாவின் அகாபோனோவ், எவ்ஜெனி டியுர்னெவ் ஜோடியை எதிர்கொண் டது. அபாரமாக ஆடிய ராம்குமார், மைனேனி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரஷாந்த் ஜோடி, ஜிம்பாப்வேயின் கோர்ட்னி ஜான் லாக், ஜப்பானின் ரியோ நோகுச்சி ஜோடியை சந்தித்தது. இதில் ஜீவன், விஜய் சுந்தர் ஜோடி 6-2, 6-2 என வெற்றிபெற்றுஅரையிறுதிக்கு முன்னேறியது.  துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., 'ரைபிள் -3' பிரிவு தகுதிச்சுற்றில் மத்திய பிரதேசத்தின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (598.45 புள்ளி) முதலிடம் பிடித்தார். சர்வீசஸ் அணியின் நிராஜ் குமார் (591.33 புள்ளி) 3வது இடம் பிடித்தார். பைனலில் நிராஜ் குமார், 464.1 புள்ளி களுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.மத்திய பிரதேசத்தின் ஐஸ்வரி பிரதாப் சிங் (462.4 புள்ளி), மகாராஷ் டிராவின் சுவப்னில் சுரேஷ் குசாலே (447.7) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான பைனலில் ஹரியானா, ராஜஸ்தான் அணிகள் மோதின.பிரமோத், சுருச்சி அடங்கிய ஹரியானா அணி 17-7 என வெற்றி பெற்று தங்கம் வென்றது.வில்வித்தை  ஜார்க் கண்ட் அணியின் தீபிகா குமாரி, பெண்களுக்கான வில்வித்தை தனி நபர் 'ரீகர்வ்' பிரிவு தகுதிச்சுற்றில், 674 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். காலிறுதியில் பஞ்சாப்பின் சிம்ரன்ஜீத் கவுர், அரையிறுதியில் மகாராஷ்டிரா வின் கதா கடகேவை வீழ்த்திய தீபிகா, பைனலில் பீகாரின் அன்ஷிகா குமாரியை வீழ்த்தி தங்கம் வென்றார்.  

Feb 06, 2025

ஐ.சி.சி., விருதுக்கு, வருண், திரிஷா பரிந்துரை.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார் பில், ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் திரிஷா, வெஸ்ட் இண்டீசின் கரிஷ்மா, ஆஸ்திரேலியாவின் பெத் மூனே பரிந்துரைக்கப்பட்டனர். இதில் திரிஷா, சமீபத்தில் முடிந்த 19 வயதுக்குட்பட்ட ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பையில் ஒரு சதம் உட்பட 309 ரன் குவித்தார். 

Feb 06, 2025

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ,மூன்று வித அறிமுக போட்டியிலும் தலா 3 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர் ஆனார் ஹர்ஷித்ராணா.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா என இருவர் அறிமுகம் ஆகினர்..இங்கிலாந்து அணி 47.4 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 38.4 ஓவரில் 251/6 ரன் எடுத்து 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 23. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் அறிமுகம் ஆன இவர், முதல் இன்னிங்சில் 3 விக்கெட் சாய்த்தார்.சமீபத்தில் புனே 'டி-20'ல் (எதிர்-இங்கிலாந்து) அறிமுகம் ஆன ஹர்ஷித், 3 விக்கெட் வீழ்த்தினார்.நேற்று நாக்பூர் ஒருநாள் போட்டியில் (இங்கிலாந்து) அறிமுகம் ஆனார். இதில் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து மூன்று வித அறிமுக போட்டியிலும் தலா 3 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர் ஆனார் ஹர்ஷித்.

Feb 05, 2025

உத்தரகாண்ட்டில் இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு  போட்டிகள்.

யோகாசனம் முதலில் காட்சி போட்டியாக சேர்க்கப்பட்டு இருந்த யோகாசனம், மல்லாகம்பிற்கு, பதக்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டன.இதையடுத்து ஆண்களுக்கான யோகாசன போட்டி நடந்தன. இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணியின் தர்ம தேஜா, அபினேஷ் குமார் ஜோடி இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.பெண்கள் தனிநபர் பிரிவில் தமிழகத்தின் வைஷ்ணவி, மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. படகுபோட்டி தமிழகத்தின் பகவதி, மதுமிதா, அகிலாண்டேஷ்வரி, ரோஸ்மஸ்டிகா படகு வலித்தல் போட்டியில் இடம் பெற்ற அணி, 2 கி.மீ., தூரத்தை 7 நிமிடம், 46.37 வினாடி நேரத்தில் கடந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. வில்வித்தை ஹரியானாவின் தீபாக்சிகா பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் வில்வித்தையில் தங்கம் கைப்பற்றினார். பஞ்சாப்பின் பர்னீத் கவுர், அவ்னீத் கவுருக்கு வெள்ளி, வெண்கலம் கிடைத்தன. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தானின் ரஜத் சவுகான் (தங் கம்), காஷ்மீரின் ஹிருதிக் சர்மா (வெள்ளி), ஆந்திரா வின் மணி ரத்னம் (வெண் கலம்) முதல் மூன்று இடம் பிடித்தனர்.பீச் வாலிபால், பீச் வாலிபால் ஆண்களுக்கான போட்டியில் தமிழக அணி 2-1 என கோவாவை பைனலுக்கு வீழ்த்தி, முன்னேறியது. தமிழக பெண்கள் அணி 2-0 என புதுச்சேரியை வென்று, பைனலுக்கு  நுழைந்தது.   சைக்கிள்தேசிய விளையாட்டு சைக்கிளில் அந்தமான், நிக்கோபார் தீவுகள் வீரர் டேவிட் பெக்காம் (10.691 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூர் வீரர் ரொனால்டோ (10.724), அந்தமான் வீரர் எசோ ஆல்பென் (10.826) அடுத்த இரு இடம் பெற்று, வெள்ளி, வெண்கலம் பெற்றனர்.டைம் டிரையர் தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை ஸ்ரீமதி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். 

Feb 05, 2025

துபாயில் ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில் அபிஷேக் சர்மா 'நம்பர்-2'

துபாயில் சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது. பேட்டர்களுக்கான  தரவரிசையில் இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா, 829 புள்ளிகளுடன் 40வது இடத்தில் இருந்து முதன் முறையாக 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது 'டி-20' போட்டியில் 54 பந்தில் சதம் (135 ரன், 13 சிக்சர்) விளாசிய இவர், 'டி-20' போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய வீரரானார். ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் - இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா - (251) முதலிடத்தில் நீடிக்கிறார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று நாக்பூரில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. 

Feb 05, 2025

சென்னை டென்னிசில் ராம்குமார்-மைனேனி காலிறுதிக்கு முன்னேறியது.

டென்னிஸ் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர்  சென்னையில் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, பெல்ஜியத்தின் கிம்மர் கோப்ஜான்ஸ், துருக்கியின் எர்கி கிர்கின் ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய ராம்குமார், மைனேனி ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரியா பாட்யா ஜோடி, ஜப்பானின் ஹோண்டமா, ஒகமுரா ஜோடியை எதிர் கொண்டது.முதல் செட்டை 5-7 என போராடி இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-2 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 10-7 என வென்றது. முடிவில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரியா ஜோடி 5-7, 6-2, 10-7, என்ற, கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தது.  டேபிள் டென்னிஸ்  சிங்கப்பூர் ஸ்மாஷ்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில்,ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-6', இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தக்கார் ஜோடி, ஹாங்காங்கின் வாங் சுன் டிங், இயு குவான் ஜோடியை எதிர் கொண்டது. இதன் முதல் செட்டை 11-5 என வசப்படுத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 11-8 என வென்றது.தொடர்ந்து ,இந்திய ஜோடி, மூன்றாவது செட்டை 11-6 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

1 2 ... 82 83 84 85 86 87 88 ... 93 94

AD's



More News