. மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடந்தது. கோலாலம்பூரில் நடந்த பைனலில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது முறையாக (2023, 2025) உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஐ.சி.சி., சார்பில், இத் தொடரில் சிறப்பாக விளை யாடிய வீராங்கனைகளை தேர்வு செய்து கனவு 'லெவன்' அணியை வெளியிட்டது. இதில் இந்தியா சார்பில் திரிஷா, கமலினி, ஆயுஷி, வைஷ்ணவி என, நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.இத்தொடரில் அதிக ரன் குவித்த திரிஷா (309), தொடர் நாயகி விருது வென்றார்.
சென்னையில், ஏ.டி. பி.. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், சுவிட்சர்லாந்தின் லுாகா காஸ் மோதினர். டெல்னுவோஅபாரமாக ஆடிய தமிழகத்தின் மணிஷ் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடக்கிறது. இதன் 'மாஸ்டர்ஸ்' பிரிவு 12வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செர்பியாவின் அலெக்சி சரணா மோதினர். பிரக்ஞானந்தா, 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 12 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் மோதின.இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், ஐந்தாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்திய அணி யில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் முகமது ஷமி இடம் பெற்றார்.'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், 'பவுலிங்' தேர்வு செய்தார். அபிஷேக் ஆட்டம் ஆரம்பமானது. இவரது சிக்சர் மழையில் வான்கடே மைதானம் அதிர்ந்தது. ஓவர்டன் ஓவரில் வரிசையாக இரு சிக்சர் விளாசிய இவர், 17 பந்தில் அரைசதம் எட்டினார். அபிஷேக் சர்மா, தொடர்ந்து சிக்சர், பவுண்டரி விளாச, இந்திய அணி 16 ஓவரில் 202/6 ரன்னை எட்டியது.ரஷித் 'சுழலில்' அபிஷேக் (54 பந்தில் 135 ரன், 7 பவுண்டரி, 13 சிக்சர்) அவுட்டானார். இவரது ஆட் டத்தை பயிற்சியாளர் காம்பிர், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டினர். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் டுக்கு 247 ரன் எடுத்தது. இந்திய பந்து வீச்சில் இங்கிலாந்து அணி பில் சால்ட் மட்டும் 55 ரன் எடுத்தார். 10.3 ஓவரில் 97 ரன்னுக்கு தோல்வி அடைந்தது.
மலேசியாவில் 19 வயதுகுட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி -20' உலக கோப்பை 2வது சீசன் நடந்தது. நேற்று, கோலாலம்பூ ரில் நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 84 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி (44* ரன், 3 விக்கெட்), தொடர் நாயகி (309 ரன், 7 விக்கெட்) விருதுகளை இந்தியாவின் திரிஷா வென்றார். டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு, பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.நமது பெண்கள் சக்தி குறித்து மிகுந்த பெருமை கொள்கிறோம். 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தது, என பிரதமர் மோடி வாழ்த்து செய்தியை வெளியிட்டார்.
டில்லியில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு பிளே -ஆப்' போட்டி குரூப்-1, சுற்று நடந்தது. இதில் இந்தியா,டோகோ, அணிகள் மோதின.ஒற்றையர் பிரிவில் சசிகுமார் முகுந்த், ராம்கு மார் ராமநாதன் வெற்றி பெற, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. நேற்று நடந்த, இரட்டையர் போட்டியில் பிரிவு இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ரித்விக் சவுத்ரி ஜோடி, டோகோவின் டிங்கோ அகோமோலோ, ஹோட பாலோ இசக் படியோ ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'வேர்ல்டு குரூப்-1' சுற்றுக்கு முன்னேறியது.
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான '14-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. நேற்று, கோலாலம்பூரில் நடந்த அரையிறுதியில், ‘நடப்பு சாம்பியன்' இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி 15 ஓவ ரில் ஒரு விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாளை, கோலாலம்பூரில் நடக்கவுள்ள பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.
துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான துப் பாக்கி சுடுதல் தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் மகாராஷ்டிரா வின் பார்த் மானே, 252.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு மகா ராஷ்டிரா வீரர் ருத்ராங்க் ஷ் பாட்டீல் வெள்ளி, சர் வீசஸ் அணியின் கிரண் ஜாதவ் வெண்கலம் வென்றனர். பளு தூக்குதல் ஆண்களுக்கான 73 கிலோ ட பளுதுாக்குதலில் தமிழகத்தின் அஜித் நாராயணா தங்கம் வென்றார். ஹரியானாவின் தீபக், சர்வீசஸ் அணியின் லால்ஹுந்தாரா முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். பெண்களுக்கான பளுதுாக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில், மணிப்பூரின் பிந்தியாராணி தேவி பளுதுாக்கி இருந்தார். ஏற்கனவே 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் தேசிய சாதனை பிந்தியாராணியின் வசம் உள்ளது.பெங்கால் வீராங்கனை ஷரபானி தாஸ் (187 கிலோ), மணிப்பூரின் நிலாம் தேவி (182 கிலோ) முறையே வெள்ளி, வெண் கலம் கைப்பற்றினர்.நீச்சல் ஆண்களுக்கான நீச்சல் போட்டி 200 மீ., பேக் ஸ்டிரோக்' பிரிவில் தமிழகத்தின் நிதிக் (2 நிமிடம், 04.75 வினாடி) வெள்ளி வென்றார். மகாராஷ் டிராவி்ன் ரிஷாப் தாஸ் (2:03.34) தங்கம் கைப் பற்றினார். குஜராத் வீரர் தேவான்ஷ் (2:06.56) வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான 50 மீ., பிரீஸ்டைல்’ பிரிவில் தமிழகத்தின் ஜாஷுவா வெண்கலம் வென்றார். மகாராஷ்டிராவின் மிஹிர், கர்நாடகாவின் ஸ்ரீஹரி முறையே தங்கம், வெள்ளி வென்றனர். கிரிக்கெட் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டி முடிவில் இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இரு அணிகள் மோதிய நான்காவது போட்டி நேற்று மஹாராஷ்டி ராவில் உள்ள புனே மைதானத்தில் நடந்தது..இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது. டென்னிஸ்டேவிஸ் கோப்பை டில்லியில் இன்று துவங்கும் 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' சுற்றில் சசிகுமார், ராம்குமார் இடம் பெற்றுள்ள இந்திய அணி, டோகோ அணியை சந்திக்கிறது. பாட்மின்டன்இந்தியாவின் ஸ்ரீகாந்த்தாய்லாந்து மாஸ்டர்ஸ் காலிறுதியில் 17-21, 16-21 என ஜெங் ஜிங் வாங்கிடம் வீழ்ந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி தோல்வி.
ஹாக்கி ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. டபுள் ரவுண்டு-ராபின்' முறையில் நடந்த லீக் சுற்று நடந்தது. இதன் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த பெங்கால் (19 புள்ளி), சூர்மா (19), ஐதராபாத் (18), தமிழகம் (18) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ரூர்கேலாவில் இன்று நடக்கும் முதல் அரை யிறுதியில் பெங்கால், தமிழக அணிகள் மோதுகின்றன. நீச்சல் ஆண்களுக்கான 200 மீ., 'பிரஸ்ட் ஸ்டிரோக்' நீச்சல் பைனல் நடந்தது. இதில் தமிழக வீரர் தனுஷ், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.'டிரையாத்லான்' கலப்பு 'டிரையாத்லான்' போட்டியில் தமிழக அணி, வெண்கலம் வென்றது.கூடைப்பந்துபெண்களுக்கான கூடைப்பந்து 'பி' பிரிவு போட்டியில் தமிழக அணி 86-52 என டில்லியை வென்றது. கால்பந்து இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கேரளா அணிகள் மோதின. முடிவில் சென்னை அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி யடைந்தது. சென்னை அணி 19 போட்டியில், 4 வெற்றி, 6 'டிரா', 9 தோல்வியுடன் (18 புள்ளி) 10வது இடத்தில் உள்ளது. பெண்களுக்கான கால்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி 6-0 என்ற கோல் கணக்கில் சிக்கிமை வீழ்த்தியதுசெஸ் மாஸ்டர்ஸ் பிரிவு 10வது சுற்றில், 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியா வின் குகேஷ், நெதர்லாந்தின் வார்மெர்டாமை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய குகேஷ், 34வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பத்து சுற்று முடிவில் 5 வெற்றி பெற்ற இந்தியாவின் குகேஷ், 7.5 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்இந்தியாவின் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் விளாடிமிரை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா, 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.பிரக்ஞானந்தா (6.5) அடுத்த ( 3 )இடத்தில் நீடிக்கிறார்.
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத் தரகாண்ட்டில் நடக்கிறது. 37 அணிகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். துப்பாக்கி சுடுதல் போட்டியில் 29 அணிகளில் இருந்து 364 பேர் களமிறங்கியுள்ளனர்.இதில் பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச்சுற்றில் ஹரியானாவின் ரமிதா (634.9), மஹாராஷ்டிராவின் ஆர்யா போர்ஷே (634.5), தமிழகத்தின் நர்மதா (634.4) முதல் மூன்று இடம் பெற்றிருந்தனர்.நேற்று பைனல் நடந்தது. இம்முறை சிறப்பாக செயல்பட்ட 23 வயது நர்மதா 254.4 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது.